இன்று நடைபெற்ற சிங்கர் கிண்ணத்திற்கான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட் போட்டிகளுக்கான, கொழும்பு நாலந்த கல்லூரி மற்றும் அம்பலாங்கொடை தர்மசோக கல்லூரி அணிகளுக்கிடையிலான  மூன்றாவது காலிறுதிப் போட்டியில், நாலந்த கல்லூரி மூன்று விக்கெட்டுகளால் வெற்றியீட்டி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

அவிந்து தீக்ஷனவின் அதிரடி பந்து வீச்சின் மூலம் ரிச்மண்ட் கல்லூரி அரைஇறுதிப் போட்டிக்கு தகுதி

மக்கோன சர்ரே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய தர்மசோக கல்லூரி அணி, முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அந்த வகையில் களமிறங்கிய அவ்வணி கவிஷ் குமார மற்றும் ரவிந்து ராஷந்தவின் அதிரடி அரைச் சதங்களின் உதவியுடன் 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 246 ஓட்டங்களை எதிரணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அதேநேரம், அதிரடியாக பந்து வீசிய மலிங்க அமரசிங்க  41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், லக்ஷித்த ரசாஞ்சனா 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதனையடுத்து 246 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய  நாலந்த கல்லூரி, தசுன் செனவிரத்ன மற்றும்  சுயன்க விஜேவர்தன ஆகியோரின் அதிரடி ஆட்டத்தினால் 7 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து  42 ஓவர்களுக்குள் 248 ஓட்டங்களை விளாசி 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

அதிரடியாக துடுப்பாடிய தசுன் செனவிரத்ன மற்றும் சுயன்க விஜேவர்தன  ஆகியோர் முறையே 59, 54 ஓட்டங்களை விளாசி, அணியின் வெற்றியை உறுதிப்படுத்தியிருந்தனர். அதேநேரம், சிறப்பாக பந்து வீசிய மனுரங்க டி சொய்சா 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

அந்த வகையில் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவான நாலந்த கல்லூரி, தர்ஸ்டன் கல்லூரி மற்றும் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள நான்காவது காலிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் அரையிறுதிப் போட்டியில் மோதவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

தர்மசோக கல்லூரி: 246 (49.5) – கவிஷ் குமார 63, ரவிந்து ராஷந்த 53, கசுன் மதுரங்க 32, 3/41, லக்ஷித்த ரசாஞ்சனா 3/44

நாலந்த கல்லூரி: 248/7 (41.1) – தசுன் செனவிரத்ன 59, சுயன்க விஜேவர்தன 54, கசுன்ச ந்தருவன் 29, லக்ஷித்த ரசாஞ்சனா 25, கழன கஸ்துரியாராச்சி 20, மனுரங்க டி சொய்சா 2/36