குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இணையும் தசுன் ஷானக!

IPL 2023

625
IPL 2023

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் குஜராத் டை்டன்ஸ் அணிக்காக இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

IPL தொடர் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடிய நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் முதல் போட்டியில் உபாதைக்கு முகங்கொடுத்தார்.

>>பாடசாலை கிரிக்கெட்டில் டிவிஷன் இரண்டுக்கு முன்னேறியது யாழ். மத்தி!

முழங்கால் உபாதைக்கு முகங்கொடுத்திருந்த கேன் வில்லியம்சன் முதல் போட்டியில் துடுப்பெடுத்தாட களமிறங்கவில்லை என்பதுடன், அவருக்கு பதிலாக சாய் சுதர்சன் விளையாடியிருந்தார்.

பின்னர் முழுமையான IPL தொடரிலிருந்தும் கேன் வில்லியம்சன் விலகவுள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகிய நிலையில், அவருக்கு பதிலாக தசுன் ஷானக அணியின் மாற்றுவீரராக பெயரிடப்பட்டுள்ளார்.

தசுன் ஷானக IPL ஏலத்தில் 50 இலட்சம் ரூபாவை நிர்ணயத்தொகையாக (இந்திய ரூபாய்) அறிவித்திருந்த நிலையில், அதே தொகைக்கு தற்போது அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

தசுன் ஷானக இறுதியாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது, மூன்று T20I போட்டிகளில் 187 என்ற ஓட்டவேகத்தில் 124 ஓட்டங்களை குவித்திருந்ததுடன், ஒருநாள் தொடரில் தன்னுடைய இரண்டாவது சர்வதேச கிரிக்கெட் சதத்தை பதிவுசெய்திருந்தார்.

>>WATCH – சோதனைகளை தாண்டி குசல் பெரேரா மீண்டும் சாதித்தது எப்படி?

தசுன் ஷானகவை மாற்றுவீரராக இணைக்க குஜராத் டைட்டன்ஸ் அணி IPL  நிர்வாகத்திடம் அனுமதியை கோரியிருந்த நிலையில், தற்போது தசுன் ஷான விளையாடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஏற்கனவே IPL தொடரில் வனிந்து ஹஸரங்க, மஹீஷ் தீக்ஷன, மதீஷ பதிரண மற்றும் பானுக ராஜபக்ஷ ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளதுடன், முதற்தடவையாக தசுன் ஷானக IPL அணியொன்றுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<