சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறை மாற்று வீரர்

4114

ஜொப்ரா ஆர்ச்சரின் பௌன்சர் பந்து தாக்கியதில் மூளையில் அதிர்வு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாள் ஆட்டத்தில் இருந்து அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஸ்டீவ் ஸ்மித் விலகிக் கொண்டுள்ளார். 

ஸ்மித்துக்கு மாற்று வீரராக சலதுறை ஆட்டக்காரர் மார்னுஸ் லபுஸ்சன் இணைக்கப்பட்டுள்ளார். இதன்படி சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறை மாற்று வீரர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 1 ஆம் திகதி அமுலுக்கு வந்த புதிய விதிகளின்படி, லபுஸ்சன் ஒரு மாற்று வீரராக இருந்தபோதும் அவரால் பந்துவீச மற்றும் துடுப்பெடுத்தாட அனுமதி அளிக்கப்படுகிறது.    

ட்விட்டரில் கொண்டாடப்படும் இலங்கை அணியின் வரலாற்று வெற்றி

கடந்த புதன்கிழமை (14) காலி சர்வதேச…..

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான கடந்த சனிக்கிழமை (17) ஆர்ச்சர் மணிக்கு 148.7 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய பௌன்சர் பந்து 80 ஓட்டங்களுடன் இருந்த ஸ்மித்தின் கழுத்து பகுதியை தாக்கியது. இதனால் அரங்கு திரும்பிய அவர் மீண்டும் களமிறங்கி மேலும் 12 ஓட்டங்களை பெற்ற நிலையில் LBW முறையில் கிரிஸ் வோக்ஸின் பந்துக்கு ஆட்டமிழந்தார்.

இரவு முழுவதும் மருத்துவ குழுவினரால் ஸ்டீவ் நெருக்கமாக அவதானிக்கப்பட்டு வந்தார். அவர் நன்றாக உறங்கி விழித்த நிலையில் தலைவலி மற்றும் தள்ளாட்டத்தை உணர்ந்தார் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.     

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் மூளை அதிர்வு தொடர்பிலான ஒழுங்குமுறையில் நேற்று காலையும் ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்து மூளை அதிர்வு தொடர்பில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு அவர் மீதான சோதனை சற்று மோசமான நிலையை காண்பித்தது. அது பாதிப்புக்கான அறிகுறிகளுடன் ஒத்துப்போவதாக உள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் 22 ஆம் திகதி ஹெடிங்லியில் ஆரம்பமாகவிருக்கும் மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஸ்மித்தின் பங்கேற்புக் குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை விரைவாக முடிவு ஒன்றை எடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<