18ஆம் நூற்றாண்டில் இருந்து விளையாடப்பட்டு வரும் விளையாட்டு கிரிக்கெட். ஏறத்தாழ மூன்றாவது நூற்றாண்டை கடந்து விளையாடப்பட்டு வரும் இந்த விளையாட்டை உலகெங்கிலும் இருந்து ஆயிரம், ஆயிரம் வீரர்கள் விளையாடியிருந்தாலும், ஒருசிலர் மட்டுமே ரசிகர்கள் மனதில் தங்களது அபார விளையாட்டு திறனால் நீங்கா இடம் பிடித்தனர்.
அதிலும் டொனால்ட் பிரட்மேன், பிரையன் லாரா, சச்சின் டெண்டுல்கர், முத்தையா முரளிதரன் போன்ற ஒருசில வீரர்கள் எந்த நாடு என்ற வரையறையின்றி, உலக ரசிகர்களையும் ஈர்த்தனர்.
கடவுளை நம்பி களத்தில் குதித்த இலங்கையின் எதிர்கால மிஸ்டர் கிரிக்கெட்
சில்வாவின் பொறுப்பான ஆட்டத்தால் குறித்த டெஸ்டில் இலங்கை அணி 215.. தாகத்தில் இருந்த ஒருவருக்கு நீர் ஊற்று ஒன்றினைக்
இது இவ்வாறிருக்க, ஓவ்வொரு வீரருக்கும் தமது தாய் நாட்டுக்கு விளையாடுவது எந்தளவு பெருமையைப் பெற்றுக் கொடுக்கின்றதோ, அதேபோல கிரிக்கெட் விளையாட்டில் டெஸ்ட் போட்டிக்காக அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டு அந்நாட்டுக்காக விளையாடுவது மிகப் பெரிய கௌவரத்தை பெற்றுக் கொடுக்கிறது.
எனவே, பெருமை மிக்க டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப் பெரிய சேவையை தனது நாட்டுக்காக வழங்கிவிட்டு தான் பங்கேற்ற கடைசி டெஸ்ட்டில் எதிர்பாராத விதத்தில் ஓட்டங்கள் எதனையும் குவிக்காமல் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்த கிரிக்கெட் பிரபலங்களைப் பற்றி இந்த கட்டுரை ஆய்வு செய்யவுள்ளது.
ஜெப் டுஜோன்
உலகின் தலைசிறந்த விக்கெட் காப்பாளர்களில் ஒருவராக விளங்கிய மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த ஜெப் டுஜோன், அவ்வணிக்காக 1981ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார்.
அதிலும், 81 டெஸ்ட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகளுக்காக விளையாடியுள்ள அவர், 5 சதங்களும், 16 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 3,000 ஓட்டங்களைக் குவித்தார். அத்துடன், விக்கெட் காப்பாளராக 272 பிடியெடுப்புகளையும் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில், 1991ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய டுஜோன், முதல் இன்னிங்ஸில் டக்அவுட் ஆனதுடன், 2ஆவது இன்னிங்ஸில் 5 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஏமாற்றத்துடன் டெஸ்ட் அரங்கிலிருந்து விடைபெற்றார். இவ்விரண்டு சந்தர்ப்பங்களிலும் இங்கிலாந்தின் டேவிட் லோரன்ஸின் பந்துவீச்சில் டுஜோன் ஆட்டமிழந்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
சேர் டொனால்ட் பிரெட்மென்
20ஆம் நூற்றாண்டில் கிரிக்கெட் உலகின் தலைசிறந்த நட்சத்திர வீரர்களில் ஒருவராக வலம்வந்த அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சேர் டொனால்ட் பிரெட்மென், பங்குபற்றிய இறுதிப் போட்டி அவருக்கு ஏமாற்றத்தை கொடுத்திருந்தது.
1928ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட பிரெட்மன், அவுஸ்திரேலியாவுக்காக 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 99.94 என்ற சராசரியுடன் 6,996 ஓட்டங்களைக் குவித்தார். இதில் 29 சதங்களும், 13 அரைச்சதங்களும் உள்ளடங்கும்.
மோசமான நடத்தைக்கு வருந்திய பங்களாதேஷ் கிரிக்கெட் சபை
சுதந்திரக் கிண்ண T20 முத்தரப்பு தொடரில் இலங்கையுடனான போட்டியில் மோசமான நடத்தையை
இங்கிலாந்து அணிக்கெதிராக 1948ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடருடன் சுமார் 20 வருடகால டெஸ்ட் வாழ்க்கையை பிரெட்மன் நிறைவுக்கு கொண்டு வந்தார். எனினும், இப்போட்டியில் பிரெட்மன் டக்அவுட் முறையில் ஆட்டமிழந்து ஏமாற்றத்துடன் தனது டெஸ்ட் வாழ்க்கைக்கு விடைகொடுத்தார்.
இதில் 4 ஓட்டங்களை பிரெட்மன் பெற்றுக்கொண்டால் வீரரொருவரின் துடுப்பாட்ட சராசரியாக 100ஐ பூர்த்தி செய்த முதல் வீரராக அவர் இடம்பெற்றிருப்பார். எனினும் கிரிக்கெட் உலகை அதிர வைத்த அவருக்கு இறுதி ஆட்டம் சாதகமாக அமையவில்லை.
இம்ரான் கான்
உலகக் கிண்ணத்தில் ஆசிய அணிகளின் ஆதிக்கத்தை கபில் தேவ் ஆரம்பித்து வைத்தார் என்றால், அதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றவர் இம்ரான் கான். உலகின் தலைசிறந்த பந்துவீச்சு சகலதுறை ஆட்டக்காரராக விளங்கிய இம்ரான் கான், கடந்த 1992 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த வீரராவார்.
இதில் 1971ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட இம்ரான் கான், அவ்வணிக்காக 88 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 3,807 ஓட்டங்களையும், 362 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில், இலங்கை அணிக்கெதிராக 1992ஆம் ஆண்டு சொந்த மண்ணில் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியை வழிநடத்திய இம்ரான் கான், முதல் இன்னிங்ஸில் 22 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் ஓட்டம் எதனையும் பெற்றுக்கொள்ளாமலும் ஆட்டமிழந்தார். எனினும், குறித்த போட்டியில் 3 விக்கெட்டுக்களால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
பிரையன் லாரா
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட ஜாம்பவானான பிரையன் லாரா 1990ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார். 1993இல் சிட்னியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 277 ஓட்டங்களைப் பெற்றார்.
அந்த வகையில் இவரது முதல் சதமே ஓர் இரட்டைச் சதமாக அமைந்ததுடன், ஓர் இன்னிங்ஸில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரராகவும், இன்னிங்ஸ் ஒன்றில் 400 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட முதல் வீரராகவும் பிரையன் லாரா இன்றுவரை வலம்வருகின்றார்.
டெஸ்ட் விளையாடும் இளம் வீரர்களுக்காக களத்தில் குதித்த சங்கக்கார
டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் கொடுக்கும் முறையை அமுல்படுத்த
அதேநேரம், 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள லாரா, 48 அரைச்சதம் மற்றும் 34 சதங்கள் உள்ளடங்கலாக 11,953 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
இந்நிலையில், 2006ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கெதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய அவர், முதல் இன்னிங்ஸில் 2 பந்துகளுக்கு மாத்திரம் முகங்கொடுத்து டக்அவுட் ஆனதுடன், 2ஆவது இன்னிங்ஸில 49 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து டெஸ்ட் அரங்கிக்கு விடைகொடுத்தார். குறித்த போட்டியில் 199 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி வெற்றியைப் பதிவு செய்தது.
சௌரவ் கங்குலி
தாதா என்ற புனைப் பெயரால் அழைப்படுகின்ற இந்திய அணியின் முன்னாள் தலைவரான சௌரவ் கங்குலி 1992இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் முதல் முறையாக இந்திய அணிக்காக களம் இறங்கினாலும், 1996இல் லோர்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார்.
தனது முதல் இரண்டு டெஸ்ட் ஆட்டங்களிலும் சதமடித்து அசத்திய கங்குலி, 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,212 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 16 சதங்களும், 35 அரைச்சதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 239 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
மொத்தம் 49 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு தலைமை தாங்கிய அவர், 21 வெற்றிகளைப் பெற்றுத் கொடுத்துள்ளார். எனினும், 2007 மற்றும் 2008 காலப்பகுதியில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட கங்குலி, 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார். இதன் முதல் இன்னிங்ஸில் 85 ஓட்டங்களையும், 2ஆவது இன்னிங்ஸில் முதல் பந்திலேயே ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஏமாற்றத்துடன் டெஸ்ட் வாழ்க்கைக்கு விடைகொடுத்தார் கங்குலி.
சிவ்நரைன் சந்தர்போல்
மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி வீரராக வலம் வந்த சிவ்நரைன் சந்தர்போல் சர்வதேச போட்டிகளில் இருந்து மனஉளைச்சலுடன் கடந்த 2016இல் ஓய்வு பெற்றார். இவர் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாராவை அடுத்து அவ்வணிக்காக சாதனைகள் பலவற்றை நிகழ்த்திய வீரர்.
கடந்த 1994ஆம் ஆண்டு கயானாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சந்தர்போல் அறிமுகமானார். களமிறங்கிய முதல் போட்டியிலேயே அரைச்சதம் அடித்தார். 164 டெஸ்ட் போட்டிகளில் 11,867 ஓட்டங்களும், 268 ஒருநாள் போட்டிகளில் 8,778 ஓட்டங்களும் குவித்து சாதனை படைத்த இவரை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை தொடர்ந்து புறக்கணித்து வந்ததுடன், அவருக்கான பிரியாவிடையையும் உரிய முறையில் வழங்கவில்லை.
இந்நிலையில், 2015ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய சந்தர்போல், முதல் இன்னிங்ஸில் 25 ஓட்டங்களையும், 2ஆவது இன்னிங்ஸில் ஓட்டம் எதனையும் பெற்றுக்கொள்ளாமலும் (டக்அவுட்) ஆட்டமிழந்து ஏமாற்றத்துடன் டெஸ்ட் அரங்கிற்கு விடைகொடுத்தார்.
திலகரத்ன டில்ஷான்
இலங்கை கிரிக்கெட் அணிக்கு மிகப் பெரிய சேவை ஆற்றிய முன்னாள் தலைவரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான திலகரத்ன டில்ஷான், 1999ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கெதிராக டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார். தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் பெரிதும் சோபிக்கத் தவறிய டில்ஷான், இலங்கை அணிக்காக 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5,497 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 16 சதங்களும், 23 அரைச் சதங்களும் உள்ளடங்கும்.
மேலும், இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராகச் செயற்பட்ட டில்ஷான், 2012ஆம் ஆண்டு தென்னாபிரிக்க மண்ணில் இலங்கை அணிக்கு முதல் டெஸ்ட் வெற்றியையும் பெற்றுக்கொடுத்தார்.
இந்நிலையில், பங்களாதேஷ் அணிக்கெதிராக 2013ஆம் ஆண்டு தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய டில்ஷான், முதல் இன்னிங்ஸில் டக்அவுட் ஆனதுடன், இரண்டாவது இன்னிங்ஸில் அரைச்சதம் கடந்து 57 ஓட்டங்களை பெற்று டெஸ்ட் அரங்கிற்கு விடைகொடுத்தார். எனினும், குறித்த போட்டியில் 7 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றி பெற்றது.
மேலும் பல சுவையான கிரிக்கெட் செய்திகளைப் படிக்க