அபு தாபி T10 தொடரில் விளையாடவுள்ள மேலும் 4 இலங்கை வீரர்கள்!

Abu Dhabi T10 League 2023

1541

அபு தாபியில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள அபு தாபி T10 தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணியின் மேலும் நான்கு வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை அணியை பொருத்தவரை ஏற்கனவே 14 வீரர்கள் அபு தாபி T10 தொடரில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர்.

>> ICC இன் உறுப்புரிமை இரத்து தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை

குறித்த இந்த வரிசையில் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல, வேகப்பந்துவீச்சாளர் பினுர பெர்னாண்டோ, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் உபாதை காரணமாக உலகக்கிண்ணத் தொடரிலிருந்து நீக்கப்பட்டிருந்த அணித்தலைவர் தசுன் ஷானக ஆகியோர் அபு தாபி T10 தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் தசுன் ஷானக மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் பங்ளா டைகர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதுடன், நிரோஷன் டிக்வெல்ல நியூவ் யோர்க் ஸ்ரைக்கர்ஸ் அணிக்காகவும், பினுர பெர்னாண்டோ டீம் அபு தாபி அணிக்காகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அபு தாபி T10 தொடர் இம்மாதம் 28ம் திகதி முதல் டிசம்பர் 9ம் திகதிவரை அபு தாபியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அபு தாபி T10 தொடருக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள இலங்கை வீரர்கள்

 1. சரித் அசலங்க – சென்னை பிரேவ்ஸ்
 2. பானுக ராஜபக்ஷ – சென்னை பிரேவ்ஸ்
 3. மஹீஷ் தீக்ஷன – மொரிஸ்வில்லே சாம்ப் ஆர்மி
 4. வனிந்து ஹஸரங்க – நொர்தென் வொரியர்ஸ்
 5. அஞ்செலோ மெதிவ்ஸ் – நொர்தென் வொரியர்ஸ்
 6. குசல் மெண்டிஸ் – பங்ளா டைகர்ஸ்
 7. குசல் பெரேரா – நியூவ் யோர்க்ஸ் ஸ்ரைக்கர்ஸ்
 8. சாமிக்க கருணாரத்ன – நியூவ் யோர்க்ஸ் ஸ்ரைக்கர்ஸ்
 9. லசித் குரூஸ்புள்ளே – நியூவ் யோர்க்ஸ் ஸ்ரைக்கர்ஸ்
 10. துனித் வெல்லாலகே – டெல்லி புல்ஸ்
 11. நுவான் துஷார – டெக்கன் கிளேடியேட்டர்ஸ்
 12. தசுன் ஷானக – பங்ளா டைகர்ஸ்
 13. அவிஷ்க பெர்னாண்டோ – பங்ளா டைகர்ஸ்
 14. பினுர பெர்னாண்டோ – டீம் அபு தாபி
 15. நிரோஷன் டிக்வெல்ல – நியூவ் யோர்க் ஸ்ரைக்கர்ஸ்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<