T20 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில்

160

அடுத்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான மேலதிக அணிகளை தெரிவு செய்யும் ஆரம்ப கட்ட தகுதிகாண் போட்டிகளை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடாத்தவுள்ளது.

மழைக்கு மத்தியில் பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணிக்கு சவால் கொடுக்கும் இலங்கை

சுற்றுலா இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் …….

14 நாடுகள் பங்குபெறும் இந்த தகுதிகாண் கிரிக்கெட் தொடரின் போட்டிகள் யாவும் ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 02ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தின் பல்வேறு மைதானங்களில் நடைபெறவிருக்கின்றன. 

இந்த தகுதிகாண் போட்டிகளுக்கு கடந்த ஆண்டு (2018) இடம்பெற்ற ஐ.சி.சி. T20 சம்பியன்ஷிப் தொடரில் பங்குபற்றிய ஐந்து நாடுகளும், கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் இருந்து ஒரு நாடும், ஆபிரிக்க பிராந்தியத்தில் இருந்து மூன்று நாடுகளும், ஐரோப்பிய பிராந்தியத்தில் இருந்து ஒரு நாடும், ஆசிய பிராந்தியத்தில் இருந்து ஒரு நாடும், அமெரிக்க பிராந்தியத்தில் இருந்து இரண்டு நாடுகளும் பங்கெடுக்கவிருக்கின்றன. 

இந்த தகுதிகாண் கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே அணியும் பங்கெடுக்கவிருந்தது. எனினும், அவர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆட ஐ.சி.சி. இன் தற்காலிக தடையினை பெற்றுக்கொண்ட காரணத்தினால் அவர்களுக்கு இந்த தகுதிகாண் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.

இந்த கிரிக்கெட் தொடரின் முதல் நாளில் (ஒக்டோபர் 11) இடம்பெறவுள்ள போட்டிகளில் கடைசியாக 2015ஆம் ஆண்டில் இடம்பெற்ற T20 உலகக் கிண்ண தகுதிகாண் கிரிக்கெட் தொடரின் இணைந்த சம்பியன்களாக மாறிய நெதர்லாந்து அணியும், ஸ்கொட்லாந்து அணியும் விளையாடவிருக்கின்றன.

வைட்வொஷ் தோல்வியை தடுக்குமா இலங்கை?

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி முதல் …….

அந்தவகையில் முதல் நாள் போட்டிகளில் ஸ்கொட்லாந்து அணி சிங்கப்பூர் அணியினையும், நெதர்லாந்து அணி கென்ய அணியினையும் எதிர்கொள்கின்றது.  

இதேநேரம், முதல் நாளில் இடம்பெறும் ஏனைய போட்டிகளில் அயர்லாந்து அணி ஹொங்கொங் அணியினையும், ஓமான் அணி ஐக்கிய அரபு இராச்சிய அணியினையும் எதிர்கொள்கின்றது.

மறுமுனையில் கனடா, பெர்மூடா, ஜேர்சி, நமீபியா, நைஜிரியா மற்றும் பபுவா நியூ கினியா ஆகிய நாடுகள் இந்த தகுதிகாண் தொடரில் பங்கெடுக்கும் ஏனைய அணிகளாக இருக்கின்றன.

இந்த கிரிக்கெட் தொடரின் இடம்பெறும் போட்டிகள் மூலம் தெரிவு செய்யப்படும் ஆறு நாடுகளின் அணிகள் அடுத்த நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<