மழைக்கு மத்தியில் பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணிக்கு சவால் கொடுக்கும் இலங்கை  

0

சுற்றுலா இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி மற்றும் பங்களாதேஷ் வளர்ந்துவரும் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமும் இன்று (4) மழையினால் தடைப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக மிஸ்பாஹ்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மற்றும்….

கோக்ஸ் பசார் நகரில் நடைபெறும் நான்கு நாட்கள் கொண்ட இப்போட்டியின் நேற்றைய முதல்நாள் ஆட்டமும் மழையினால் ஓவர்கள் எதுவும் வீசப்படாதவாறு கைவிடப்பட்டிருந்தது. எனினும், இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் மழையினால் கைவிடப்பட்ட போதிலும் போட்டியில் 23 ஓவர்களை வீசமுடியுமாக இருந்தது. 

அந்தவகையில் இன்று வீசப்பட்ட 23 ஓவர்களையும் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணி எதிர்கொண்டு 3 விக்கெட்டுக்களை இழந்து தமது முதல் இன்னிங்ஸிற்காக 57 ஓட்டங்களை குவித்துள்ளது. 

“மனதளவில் சக்திமிக்கவர்களாக நாம் மாறவேண்டும்” – டிக்வெல்ல

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மனதளவில் சக்தி மிக்கவர்களாக….

இன்று துடுப்பாடிய பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணிக்காக அதன் தலைவர் நஜ்முல் ஹஸன் சான்டோ 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நிற்க, ஆபிப் ஹூசைன் 16 ஓட்டங்களை பெற்றுக் கொண்டு காணப்படுகின்றார்.

இதேநேரம், பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணியில் பறிபோயிருந்த விக்கெட்டுக்களை இலங்கை வீரர் அஷேன் டேனியல் மற்றும் மொஹமட் சிராஸ் ஆகியோர் தம்மிடையே பகிர்ந்து கொண்டனர். இதில் அஷேன் டேனியல் இரண்டு விக்கெட்டுகளையும், மொஹமட் சிராஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க  

போட்டியின் சுருக்கம்
Scorecard link : [insert_php] $contents = file_get_contents(“http://stats.thepapare.com/cricket/embed/match_result/2nd-unofficial-test-sri-lanka-emerging-team-tour-of-bangladesh”); echo $contents;[/insert_php]