சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் முரளி விஜய்!

India Cricket

76

இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் முரளி விஜய் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு வீரரான முரளி விஜய் இந்திய அணிக்காக இறுதியாக 2018ம் ஆண்டு விளையாடியிருந்தார். அதனைத்தொடர்ந்து தேசிய அணியில் அவருக்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

>> அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறாரா தசுன் ஷானக?

எனவே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுதற்கு முரளி விஜய் தீர்மானித்துள்ளார். எனினும் சர்வதேசத்தில் இருக்கும் கிரிக்கெட்டுக்கான வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வதற்கும், அதனை பொருளாதார ரீதியில் நெருங்குவதற்கும் எதிர்பார்த்துள்ளார்.

அதுமாத்திரமின்றி வெவ்வேறு சூழலில் தான் விரும்பிய கிரிக்கெட்டை விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ள இவர், தன்னுடைய புதிய கிரிக்கெட் வாழ்க்கை பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தான் வெளியிட்டுள்ள ஓய்வு செய்தியில் பதிவிட்டுள்ளார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரரான முரளி விஜய் கடந்த 2002ம் ஆண்டு முதல் இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்த ஆரம்பித்திருந்ததுடன், 2018ம் ஆண்டுவரை விளையாடியுள்ளார்.

இவர் 61 டெஸ்ட், 17 ஒருநாள் மற்றும் 9 T20i போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இதில் டெஸ்ட் போட்டிகளில் 12 சதம் மற்றும் 15 அரைச்சங்கள் அடங்கலாக 3982 ஓட்டங்களை குவித்துள்ளார். அத்துடன் இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) சென்னை சுபர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<