சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் ரொஸ் டெய்லர்

118
 

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் அனுபவ துடுப்பாட்டவீரரான ரொஸ் டெய்லர் தன்னுடைய 17 வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிரியாவிடை வழங்குவதாக குறிப்பிட்டிருக்கின்றார்.

ICC இன் சிறந்த வீரர்களுக்கான பரிந்துரையில் இரு இலங்கை வீரர்கள்

ரொஸ் டெய்லர் தனது தாயகத்தில் இந்த கோடைகாலத்தில் நடைபெற்று முடிகின்ற சர்வதேச கிரிக்கெட் தொடர்களை அடுத்து, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக குறிப்பிட்டிருக்கின்றார்.

கடந்த 2006ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்றிருந்த ஒருநாள் போட்டி மூலம் சர்வதேச அறிமுகம் பெற்ற ரொஸ் டெய்லர் தற்போது தன்னுடைய 37 வயதில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு ஓய்வு வழங்கியிருக்கின்றார்.

ரொஸ் டெய்லர் பங்களாதேஷிற்கு எதிராக நியூசிலாந்து அணி ஜனவரியில் விளையாடவுள்ள டெஸ்ட் தொடரினை அடுத்து, டெஸ்ட் போட்டிகளுக்கு பிரியாவிடை வழங்குகின்றார்.

இதனையடுத்து அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக நியூசிலாந்து விளையாடவுள்ள ஆறு ஒருநாள் போட்டிகளின் பின்னர் ரொஸ் டெய்லர் ஒட்டு மொத்தமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு பிரியாவிடை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை – ஜிம்பாப்வே தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது

நியூசிலாந்து அணிக்காக 110 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் ரொஸ் டெய்லர் 44.87 என்கிற துடுப்பாட்ட சராசரியுடன் 7584 ஓட்டங்களை இதுவரை குவித்திருக்கின்றார். அதோடு, ஒருநாள் போட்டிகளில் 48.40 என்கிற

துடுப்பாட்ட சராசரியோடு ரொஸ் டெய்லர் இதுவரை 8581 ஓட்டங்களைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ரொஸ் டெய்லர் நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கூடுதல் ஓட்டங்கள் பெற்ற வீரராகவும் காணப்படுகின்றார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவது குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் ரொஸ் டெய்லர், தனது நாட்டினை கிரிக்கெட் போட்டிகளில் பிரதிநிதித்துவம் செய்யக் கிடைத்த வாய்ப்பினை அதிஷ்டமாக கருதுவதாக குறிப்பிட்டிருக்கின்றார்.

இதேநேரம் ரொய் கடைசியாக விளையாடவுள்ள டெஸ்ட் தொடர், நியூசிலாந்து பங்களாதேஷ் அணிகள் இடையில் ஜனவரி மாதம் 01ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<