இந்திய தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் ஒருநாள், டி20 குழாம்கள் அறிவிப்பு

65

இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச கிரிக்கெட் தொடர்களுக்கான மேற்கிந்திய தீவுகள் அணியின் இரு குழாம்களும் அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது. 

டி20 குழாமிலிருந்து நீக்கப்பட்ட ஷிகார் தவான்

இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள டி20 ……

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்ஸ் சொந்த விருப்பத்தின் பெயரில் இந்திய அணியுடனான தொடரிலிருந்து விலகியுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. 

டி20 சர்வதேச குழாம் 

டிசம்பர்  6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடருக்காக சகலதுறை வீரர் கிரன் பொல்லார்ட் தலைமையிலான 15 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெளியிடப்பட்டுள்ள குழாமின்படி மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியானது இறுதியாக 1-2 என்ற அடிப்படையில் தொடரை இழந்த ஆப்கான் அணியுடனான டி20 சர்வதேச தொடரில் விளையாடிய குழாமிலிருந்து இரண்டு மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. 

குறித்த தொடரில் ஒரேயொரு போட்டியில் மாத்திரம் விளையாடிய விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ஷை ஹோப் மற்றும் குழாமில் இடம்பெற்றும் டி20 சர்வதேச அறிமுகம் பெறாத 23 வயதுடைய வேகப் பந்துவீச்சாளர் அல்ஸாரி ஜோசப் ஆகியோர் இவ்வாறு குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.  

விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான ஷை ஹோப்பின் இடத்திற்காக மற்றுமொரு விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான தினேஷ் ராம்டீன் பெயரிடப்பட்டுள்ளார். இதேவேளை, அல்ஸாரி ஜோசப்பிற்கு பதிலாக ஆப்கான் அணியுடனான முதலாவது டி20 சர்வதேச போட்டியுடன் உபாதையால் தொடரிலிருந்து வெளியேறிய சகலதுறை வீரரான பெபியன் அலன் மீண்டும் குழாமிற்கு திரும்பியுள்ளார். 

இதேவேளை பந்து சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி ஆப்கான் அணியுடனான டி20 சர்வதேச தொடரில் முழுமையாக விளையாடாமல் இருந்த நிக்கொலஸ் பூரண் தொடர்ந்தும் இந்திய அணியுடனான டி20 சர்வதேச குழாமில் இணைக்கப்பட்டுள்ளார்.

டி20 சர்வதேச தொடருக்கான குழாம்

கிரன் பொல்லார்ட் (அணித்தலைவர்), பெபியன் அலன், சில்டன் கொட்ரெல், சிம்ரென் ஹிட்மயர், ஜெசன் ஹோல்டர், கிமோ போல், பிரன்டென் கிங், எவின் லுவிஸ், கெரி பியர், நிக்கொலஸ் பூரண், தினேஷ் ராம்டீன், ஷர்பேன் ரதர்போர்ட், லென்டில் சிம்மன்ஸ், கெசெரிக் வில்லியம்ஸ், ஹெய்டன் வால்ஸ் ஜூனியர் 

ஒருநாள் சர்வதேச குழாம் 

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடருக்காக 15 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கிண்ண தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியின் சொதப்பல் காரணமாக அணித்தலைவராக செயற்பட்ட ஜெசன் ஹோல்டர் தலைமையிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைமைத்துவம் கிரன் பொல்லார்ட்டிடம் வழங்கப்பட்டுள்ளது. 

இந்திய அணியுடன் டி20 சர்வதேச தொடருக்காக வெளியிடப்பட்டுள்ள குழாமிலிருந்து ஐந்து மாற்றங்கள் ஒருநாள் குழாமில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டி20 சர்வதேச குழாமிலிருந்து நீக்கப்பட்ட விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ஷை ஹோப் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் அல்ஸாரி ஜோசப் ஆகியோர் ஒருநாள் குழாமில் இடம்பெற்றுள்ளனர். 

2023 உலகக் கிண்ணமே அஞ்செலோ மெதிவ்ஸின் இலக்கு

இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்களில்……..

மேலும், இறுதியாக உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியுடன் நடைபெற்ற போட்டியில் விளையாடிய துடுப்பாட்ட வீரரான சுனில் அம்பிரிஸ், சகலதுறை வீரர் ரொஸ்டன் சேஸ் மற்றும் அண்மையில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணியுடனான தொடரில் ஒருநாள் சர்வதேச அறிமுகம் பெற்றுக்கொண்ட வேகப் பந்துவீச்சாளர் ரொமாரியோ சிப்ரெட் ஆகியோர் ஒருநாள் குழாமில் இடம்பெற்றுள்ளனர். 

இவ்வாறு ஐந்து வீரர்கள் புதிதாக இடம்பெற்றுள்ளதன் காரணமாக, உபாதையின் பின்னர் டி20 சர்வதேச குழாமில் இடம்பெற்ற பெபியன் அலன், தினேஷ் ராம்டீன், ஷர்பேன் ரதர்போர்ட், லென்டில் சிம்மன்ஸ் மற்றும் கெசெரிக் வில்லியம்ஸ் ஆகியோர் இந்திய தொடருக்கான ஒருநாள் சர்வதேச குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

இரு அணிகளுக்குமிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரின் முதலாவது போட்டி டிசம்பர் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது.  

ஒருநாள் சர்வதேச தொடருக்கான குழாம்.

கிரன் பொல்லார்ட் (அணித்தலைவர்), சுனில் அம்பிரிஸ், ரெஸ்டன் சேஸ், சில்டன் கொட்ரெல், சிம்ரென் ஹிட்மயர், ஜெசன் ஹோல்டர், ஷை ஹோப், அல்சாரி ஜோசப், கிமோ போல், பிரன்டென் கிங், எவின் லுவிஸ், கெரி பியர், நிக்கொலஸ் பூரண், ரொமாரியோ சிப்ரெட், ஹெய்டன் வால்ஸ் ஜூனியர் 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<