2023 உலகக் கிண்ணமே அஞ்செலோ மெதிவ்ஸின் இலக்கு

89

இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரான அஞ்செலோ மெதிவ்ஸ் தனது அண்மைக்கால செயற்பாடுகள் குறித்து நேர்காணல் ஒன்றினை வழங்கியிருந்தார். 

இந்த நேர்காணலில் மெதிவ்ஸிடம் கேட்கப்பட்ட சில முக்கிய கேள்விகளும் அதற்கு அவர் வழங்கிய பதில்களும், எமது கிரிக்கெட் இரசிகர்களுக்காகத் தரப்படுகின்றது. 

பணம் வாங்க மறுத்த இந்திய சாரதியை விருந்துக்கு அழைத்த பாக். வீரர்கள்!

இந்தியாவைச் சேர்ந்த வாகன சாரதி ஒருவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களிடமிருந்து…

கே –  நியூசிலாந்து –  இலங்கை டெஸ்ட் தொடருக்குப் பின்னர் எந்த வகையில் உங்களது ஓய்வு நேரத்தை திறமைகளை வளர்த்துக் கொள்ள பயன்படுத்தினீர்கள்? 

நான் இந்த இரண்டரை மாதங்களையும் பிரதானமாக எனது உடற்தகுதியினை வளர்த்துக் கொள்ள பயன்படுத்தினேன். இன்னும் நான் துடுப்பாட்டத்தையும், பந்துவீச்சினையும் வளர்த்துக் கொள்வதற்கான வேலைகளையும் செய்திருந்தேன். நான் இரண்டரை மாதங்களாக பந்துவீசி வருவது குறிப்பிடத்தக்கது. 

கே – இலங்கையின் அடுத்த தொடராக இருப்பது பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டிகள். 10 வருடங்களுக்குப் பின்னர் பாகிஸ்தானில் இடம்பெறவுள்ள இந்த தொடருக்காக உங்களது தயார்படுத்தல்கள் எவ்வாறு இருக்கின்றது?

நேரம் போதுமற்றதாக இருந்த போதிலும் நான் இந்த தொடருக்காக நல்ல முறையில் தயாராகி இருக்கின்றேன். நாம் அணியுடன் இணைந்து இன்னும் தயாராக ஆரம்பிக்கவில்லை. ஆனால், ஒவ்வொருவரும் தனியான தயார்படுத்தல்களை மேற்கொண்டிருக்கின்றோம். நாம் 10 வருடங்களின் பின்னர் பாகிஸ்தானுக்கு டெஸ்ட் தொடர் ஒன்றுக்காகச் செல்கின்றோம் என்ற போதிலும் எமது அணி 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் இரண்டு தடவைகள் அங்கே ஒருநாள் மற்றும் T20 போட்டிகளுக்காகச் சென்றிருக்கின்றது. ஒரு தனி நபராக நான் இதற்கு தயராக இருக்கின்றேன்.  

கே – டெஸ்ட் அணியினைப் பொறுத்தவரையில் நீங்கள் தான் அணியில் மூத்த வீரர். இது உங்களுக்கு மேலதிக அழுத்தத்தை ஏற்படுத்துகின்றதா?   

அழுத்தம் என்பது வீரர் ஒருவருக்கு அவரது முதல் போட்டியோ? அல்லது கடைசிப் போட்டியோ எப்போதும் இருக்கும். ஆனால், உங்களுக்கு அனுபவம் இருக்கும் போது ஒரு இடத்தில் எப்படி நடக்க வேண்டும் என்பது தெரிந்து அழுத்தத்தை குறைக்க முடியுமாக இருக்கும். ஒரு முறை உங்களுக்குத் தவறு ஏற்படும் போது அதனை அடுத்த தருணத்தில் சரியாக மாற்றத் தெரிய வேண்டும். ஆனால், நீங்கள் அனுபவம் கொண்ட ஒருவராக இருக்கும் போது உங்களிடம் மக்கள் அதிகம் எதிர்பார்ப்பார்கள். அப்படியான சந்தர்ப்பத்தில் நீங்கள் எதனையும் கருத்திற் கொள்ளாது உங்களது அதிகப்படியான ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்.

கே – ஒருநாள் போட்டிகளின் அழுத்தங்கள் பற்றி?

இங்கேயும் எந்த மாற்றங்களும் கிடையாது. நான் மத்திய வரிசையில் துடுப்பாட வரும் போது எப்போதும் அழுத்தம் அதிகமாக இருக்கும். (இந்நிலையில்) ஒரு வீரருக்கு அவரது துடுப்பாட்ட பாணியை மாற்ற வேண்டி இருக்கும். ஆனால், ஒரு சிரேஷ்ட வீரராக எனது பொறுப்பு அணிக்கு வெற்றியை தேடிக்கொடுப்பது மாத்திரமின்றி இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாகவும் இருப்பதாகும். 

கே – எத்தனை வருடங்கள் உங்களது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடரப் போகின்றீர்கள்? உங்களது எதிர்காலத் திட்டங்கள் பற்றி?

எனது பிரதான இலக்கு 2023ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணம் வரையில் விளையாடுவதுதான். நான் எனது உடற்தகுதியினை நல்ல முறையில் வைத்துக் கொள்ள முயல்கின்றேன். அதற்கு மேல் நான் விளையாடப் பார்க்கவில்லை. என்னால் காயங்களை கட்டுப்படுத்த முடியாது. ஆனாலும், நான் எப்போதும் சிறந்த உடற்தகுதியுடன் இருக்க முயற்சிக்கின்றேன். எனது நாட்டினை எந்தளவிற்கு பிரதிநிதித்துவம் செய்கின்றேனோ அந்தளவிற்கு அதனை கௌரவமாக கருதுகின்றேன். அதனை ஒவ்வொரு வருடமுமாக பார்த்துப் பார்த்து வருகின்றேன். எனது பிரதான இலக்கு 2023ஆம் ஆண்டின் கிரிக்கெட் உலகக் கிண்ணமாகும். 

கே – நீங்கள் அணிக்குள் ஒரு பெறுமதிமிக்க சகலதுறை வீரராகவே வந்தீர்கள். ஆனால், இப்போது நீங்கள் துடுப்பாட்டத்தில் மாத்திரமே பங்களிப்புச் செய்கின்றீர்களே??

நான் 2012 தொடக்கம் 2016 வரையிலான காலப்பகுதியில் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் ஒரு சகலதுறை வீரராகவே ஆடியிருக்கின்றேன். அப்போது இளம் வீரராக இருந்ததனால் உபாதைகள் பற்றி சிந்திக்கவில்லை. ஆனால், இப்போது விளையாடும் போது ஓய்வெடுக்க வேண்டிய அவசியம் பற்றி தெரியவருகின்றது. நான் இப்போது பந்துவீசாது போனாலும், பந்துவீசுவதற்கான பயிற்சிகளை படிப்படியாக மேற்கொண்டு வருகின்றேன். 

ஜொப்ரா ஆர்ச்சரிடம் மன்னிப்பு கோரவுள்ள நியூசிலாந்து கிரிக்கெட்

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் போது…

கே – இலங்கை அணிக்கு வேலைப்பளுமிக்க ஒரு காலம் எதிர்காலத்தில் வருகின்றது. அதன்படி, இலங்கை அணி கிட்டத்தட்ட 30 சர்வதேசப் போட்டிகளில் ஆடவுள்ளது. இப்படியான சந்தர்ப்பத்தில் ஒரு சகலதுறைவீரராக எப்படி இலங்கை அணிக்கு பங்களிப்புச் செய்யப்போகின்றீர்?  

நான் தற்போது T20 போட்டிகளில் பந்துவீசுவதனை மாத்திரமே எதிர்பார்த்திருக்கின்றேன். என்னிடம் பந்துவீசுவது தொடர்பில் பாரிய இலக்குகள் எதுவும் இல்லை. தேர்வுக் குழுவிடம் கலந்துரையாடிய அடிப்படையில்  நான் ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் முழுமையான ஒரு துடுப்பாட்ட வீரராக ஆடவிருப்பதோடு T20 போட்டிகளில் ஒரு சகலதுறை வீரராக ஆடவிருக்கின்றேன். முக்கியமாக, எமக்கு 2020ஆம் ஆண்டில் T20 உலகக் கிண்ணம் ஒன்று இருக்கின்றது. அதனால், இதுவே எனது திட்டம். 

கே – நீண்ட நாட்கள் பந்துவீசாத பின்னர் சர்வதேசப் போட்டிகளில் பந்துவீசுவதற்கான ஒரு ஆளுமையை எப்படி உருவாக்கி கொண்டிருக்கின்றீர்?

நான் பயிற்சி வலைகளுக்குள் பந்துவீச ஆரம்பித்த போது நிறையத் தடவைகள் மழையின் குறுக்கீடு உருவாகியிருக்கின்றது. ஆனால், நாம் தொழில்முறைக் கிரிக்கெட் வீரர்கள். எப்போதும் எந்த நிலைக்கும் தயாராக இருக்க வேண்டும். நான் கடந்த 2 மாதங்கள் பந்துவீச்சிற்காக கடுமையான பயிற்சிகள் எடுத்திருக்கின்றேன். அதனையே தொடர்ந்தும் செய்ய முயற்சிக்கின்றேன்.  

மூலம் – Chamila Karawita of SLC 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<