பலம் மிக்க சிலாபம் மேரியன்ஸை ஆட்டம் காணச்செய்த பிரபாத் ஜயசூரிய

173

இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் 2017/18 ஆம் ஆண்டின் உள்ளூர் பருவத்திற்கான பிரீமியர் லீக் A நிலை தொடரின் நான்கு சுப்பர் 8 போட்டிகளின் இரண்டாம் நாள் ஆட்டம் வியாழக்கிழமை (01) நடைபெற்றது. அதேபோன்று மூன்று பிளேட் சம்பியன்சிப் போட்டிகளும் ஆரம்பமாகின.

[rev_slider LOLC]

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

பிரபாத் ஜயசூரியவின் அபார பந்துவீச்சு மூலம் பலம் மிக்க சிலாபம் மேரியன்ஸ் அணியின் துடுப்பாட்ட வரிசையை ஆட்டம் காணச் செய்த கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் இரண்டாவது இன்னிங்சில் முன்னிலை பெறுவதற்கு போராடி வருகிறது.

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் கோல்ட்ஸ் அணி முதல் இன்னிங்சில் 169 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இந்நிலையில் இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு ஆரம்ப துடுப்பட்ட வீரர் ஷெஹான் ஜயசூரிய அதிரடியாக 28 பந்துகளில் அரைச் சதம் பெற்று அதிர்ச்சி கொடுத்தார்.

என்றாலும் பாகிஸ்தானைச் சேர்ந்த மொஹமட் அலி இரு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களையும் வீழ்த்த பிரபாத் ஜயசூரிய சிலாபம் மேரியன்ஸ் அணியின் மத்திய வரிசையை ஆட்டம் காணச்செய்தார். இதனால் சிலாபம் மேரியன்ஸ் அணி 162 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுகளையும் இழந்தது. கோல்ட்ஸ் அணி சார்பாக பிரபாத் ஜயசூரிய 6 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

தனன்ஞய, குசலின் சிறப்பாட்டத்தால் இரண்டாம் நாளில் இலங்கை ஆதிக்கம்

இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த கோல்ட்ஸ் அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 6 விக்கெட்டுகளுக்கு 150 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்த போட்டியில் சிலாபம் மேரியன்ஸ் அணியின் விக்கெட் காப்பாளர் ருக்ஷான் ஷெஹான் 7 பிடியெடுப்புகள் ஒரு ஸ்டம்ப் என 8 ஆட்டமிழப்புகளை செய்து இலங்கை முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் இன்னிங்ஸ் ஒன்றில் அதிக ஆட்டமிழப்புகளை செய்த ப்ளூம்பீல்ட் அணியின் சுமிந்து மெண்டிஸின் சாதனையை சமன் செய்தார். சுமிந்து மெண்டிஸ் 2000/2001 பருவத்திலேயே இந்த சாதனையை படைத்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 169 (58) – பசிந்து லக்ஷங்க 37, சதீர சமரவிக்ரம 28, பிரியமால் பெரேரா 23, மலிந்த புஷ்பகுமார 5/40, இசுரு உதான 3/31, அசித பெர்னாண்டோ 2/22

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 162 (37.5) – ஷெஹான் ஜயசூரிய 50, ஓஷத பெர்னாண்டோ 36, ருக்ஷான் ஷெஹான் 23, சலன டி சில்வா 22, பிரபாத் ஜயசூரிய 6/48, மொஹமட் அலி 2/30, நிசல தாரக்க 2/52

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 150/6 (52) – ஹஷான் துமிந்து 57, விஷாட் ரந்திக்க 35, பிரியமால் பெரேரா 27, இசுரு உதான 2/13, ஷெஹான் ஜயசூரிய 2/51


BRC எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்

கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் செரசன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக BRC அணி 221 ஓட்டங்களால் இரண்டாவது இன்னிங்சில் முன்னிலை பெற்றுள்ளது.

முதல் இன்னிங்சில் பின்தங்கிய நிலையில் இரண்டாவது நாளில் தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த BRC அணி ஆட்ட நேர முடிவின் போது 7 விக்கெட்டுகளை இழந்து 221 ஓட்டங்களை பெற்றுள்ளது. இன்னும் 3 விக்கெட்டுகள் மாத்திரமே கைவசம் இருக்கும் நிலையில் BRC எதிரணிக்கு சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்க போராடி வருகிறது.

போட்டியின் சுருக்கம்

BRC (முதல் இன்னிங்ஸ்) – 168 (57.3) – விகும் சஞ்சய 34, ஹஷேன் ராமனாயக்க 30, ருமேஷ் புத்திக்க 21, ரனித்த லியனாரச்சி 3/35, மொஹமட் டில்ஷாட் 2/38  

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 173 (49.5) – கமிந்து கனிஷ்க 51, தனுக்க தாபரே 30, சுராஜ் ரந்திவ் 4/26, திலகரத்ன சம்பத் 4/31,  விகும் சஞ்சய 2/37

BRC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 221/7 (62.2) – டேஷான் டயஸ் 72, லசித் லக்ஷான் 47, ஹர்ஷ விதான 45, சச்சித்ர பெரேரா 5/71


ராகம கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம்

இலங்கை உள்ளூர் போட்டியில் விளையாடும் தென்னாபிரிக்க வீரர் நிக் கொப்டன் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் யொஹான் டி சில்வாவின் அரைச் சதங்கள் மூலம் ராகம கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக இலங்கை துறைமுக அதிகாரசபை அணி வலுவான நிலையில் உள்ளது.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவரும் போட்டியில் சானக்க கோமசாருவின் 5 விக்கெட்டுகள் மூலம் ராகம அணியை 269 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்த முடிந்தது. இந்நிலையில் இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த துறைமுக அதிகாரசபை அணி ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளுக்கு 226 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

உபாதைகள் அற்ற கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம் 

நிக் கொப்டன் (62) மற்றும் யொஹான் டி சில்வா (66) இரண்டாவது விக்கெட்டுக்கு 98 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று வலுச்சேர்த்தமை குறிப்பிடத்தக்கது.  

போட்டியின் சுருக்கம்

ராகம் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 269 (98) – லஹிரு திரிமான்ன 52, சமிந்து பெர்னாண்டோ 42, உதார ஜயசுந்தர 39, லஹிரு மலிந்த 37, சமீர டி சொய்சா 22, சதுர பீரிஸ் 20, சானக்க கோமசாரு 5/66, மதுக லியனபதிரனகே 3/74, சரித் ஜயம்பதி 2/70  

இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 226/4 (79) – யொஹான் டி சில்வா 66, நிக் கொப்டன் 62, கிஹான் ரூபசிங்க 36*, கயான் மனீஷன் 27*


SSC எதிர் NCC

அஞ்செலோ பேரேராவின் சதத்தின் மூலம் SSC அணிக்கு எதிராக NCC முதல் இன்னிங்சில் ஸ்திரமான ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

கொழும்பு CCC மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் SSC அணி தனது முதல் இன்னிங்சுக்கு 347 ஓட்டங்களை பெற்ற நிலையில் இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த NCC அணி ஆட்ட நேர முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 298 ஓட்டங்களை பெற்றது. அணித் தலைவர் அஞ்செலோ பெரேரா 107 ஓட்டங்களை குவித்தார்.

போட்டியின் சுருக்கம்    

SSC (முதல் இன்னிங்ஸ்) – 347 (93.1) – மிலிந்த சிறிவர்தன 70, தசுன் ஷானக்க 63, சரித் அசலங்க 56, ஷம்மு அஷான் 40, சாமர கபுகெதர 33, மினோத் பானுக்க 28, லசித் அம்புல்தெனிய 5/81, பர்வீஸ் மஹ்ரூப் 2/59, சாமிக்க கருணாரத்ன 2/86

NCC (முதல் இன்னிங்ஸ்) – 298 (82.2) – அஞ்செலோ பெரேரா 107, மஹேல உடவத்த 46, சதுன் வீரக்கொடி 44, சதுரங்க டி சில்வா 38, தம்மிக்க பிரசாத் 4/37, தசுன் ஷானக்க 3/29, ஜெப்ரி வென்டர்சே 2/113

நான்கு போட்டிகளினதும் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.


பிளேட் சம்பியன்சிப் போட்டிகள்

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்

ரமேஷ் மெண்டிஸ் பெற்ற வேகமான சதத்தின் மூலம் தமிழ் யூனியன் அணிக்கு எதிராக பளூம்பீல்ட் அணி முதல் இன்னிங்சில் 323 ஓட்டங்களை குவித்துள்ளது.

கொழும்பு சோனகர் விளையாட்டுக் கழக மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய ப்ளூம்பீல்ட் அணிக்கு மத்திய வரிசையில் வந்த ரமேஷ் மெண்டிஸ் 149 பந்துகளில் 17 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 137 ஓட்டங்களை குவித்தார். அனுபவ வீரர் ஜீவன் மெண்டிஸ் தமிழ் யூனியன் அணிக்காக 6 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

போட்டியின் சுருக்கம்

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 323 (81.5) – ரமேஷ் மெண்டிஸ் 137*,  நிசல பிரான்சிஸ்கோ 48, நிபுன் கருனநாயக்க 45, ஜீவன் மெண்டிஸ் 6/100, திஸ்னக்க மனோஜ் 2/53

தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 13/0 (3)


கொழும்பு கிரிக்கெட் கழகம் (CCC) எதிர் இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம்

கொழும்பு BRC மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் லசித் அபேரத்னவின் சதத்தின் உதவியோடு இலங்கை இராணுவப்படை அணிக்கு எதிராக கொழும்பு கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்சுக்காக 333 ஓட்டங்களை பெற்றது.

பாக். சுப்பர் லீக்கில் இணையும் திசர பெரேரா, அசேல குணரத்ன

அபாரமாக துடுப்பாடிய லசித் அபேரத்ன 109 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் இலங்கை இராணுவப்படை அணிக்காக தசுன் விமுக்தி 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 333 (79.4) – லசித் அபேரத்ன 109, மலிந்து மதுரங்க 63, வனிந்து ஹசரங்க 35, சச்சித் பதிரண 27, அஷான் பிரியஞ்சன் 27, ரொன் சந்திரகுப்தா 22, தசுன் விமுக்தி 5/66, சீகுகே பிரசன்ன 2/96

இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 20/1 (8)


பதுரெலிய விளையாட்டுக் கழகம் எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம்

கொழும்பு ப்ளூம்பீல்ட் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் சோனகர் விளையாட்டுக் கழகத்தை முதல் இன்னிங்சில் 214 ஓட்டங்களுக்கு சுருட்டிய பதுரெலிய விளையாட்டுக் கழகம் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வருகிறது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த சோனகர் அணி சார்பில் திலக் சுமனசிரி (53) அரைச்சதம் கடந்தார். இந்நிலையில் முதல் இன்னிங்சை ஆரம்பித்த பதுரெலிய விளையாட்டுக் கழகம் 19 ஓட்டங்களில் முதல் இரு விக்கெட்டுகளையும் இழந்தபோதும் மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்த சலிது உஷான் மற்றும் நதீர நாவல பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 102 ஓட்டங்களை பெற்றனர்.

இதன் மூலம் முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது பதுரெலிய விளையாட்டுக் கழகம் தனது முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 124 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 214 (49.1) – திலக் சுமனசிரி 53, சரித்த குமாரசிங்க 24, இரோஷ் சமரசூரிய 22, அலங்கார அசங்க 4/51, சவித் பிரியான் 2/37, மதுர லக்மால் 2/47, டிலேஷ் குணரத்ன 2/63

பதுரெலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 124/2 (40) – சலிது உஷான்58*, ஷிரான் பெர்னாண்டோ 2/19

மூன்று போட்டிகளினதும் இரண்டாவது நாள் ஆட்டம் நாளை தொடரும்.