இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள டி20 சர்வதேச தொடருக்கான இந்திய அணியின் 15 பேர் கொண்ட குழாமிலிருந்து ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஷிகார் தவான் நீக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியானது இந்திய கிரிக்கெட் அணியுடன் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடவுள்ளது. குறித்த டி20 சர்வதேச தொடருக்கான இந்திய அணியின் 15 பேர் கொண்ட குழாம் கடந்த வெள்ளிக்கிழமை (22) வெளியிடப்பட்டிருந்தது.
மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான இந்திய ஒருநாள், டி20 குழாம்கள் அறிவிப்பு
மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட…
குறித்த குழாமில் விமர்சனங்களுக்கு மத்தியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஷிகார் தவான் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில், அடுத்த மாதம் (டிசம்பர்) 6ஆம் திகதி முதலாவது டி20 சர்வதேச போட்டி நடைபெறவுள்ள நிலையில் ஷிகார் தவான் உபாதைக்குள்ளாகியுள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் லீக் தொடர்களில் ஒன்றான சையித் முஸ்தாக் அலி கிண்ண தொடர் இம்மாதம் 8ஆம் திகதியிலிருந்து நடைபெற்று வருகிறது. குறித்த டி20 லீக் தொடரில் ஷிகார் தவான் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 21ஆம் டெல்லி மற்றும் மஹராஸ்திர அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது.
குறித்த போட்டியில் தவான் துடுப்பாட்டத்தில் ஓட்டத்தை நிறைவு செய்ய கிடையாக வழுக்கி விழுந்த போது துடுப்பு மட்டையானது இடது முழங்காலில் பலமாக தாக்கியுள்ளது. பின்னர் அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் உடற்தகுதி நிபுணரின் பரிசோதனையின் பின்னர் தவான் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
2023 உலகக் கிண்ணமே அஞ்செலோ மெதிவ்ஸின் இலக்கு
இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரான அஞ்செலோ மெதிவ்ஸ்…
தவானின் வெற்றிடத்திற்காக தற்போது இளம் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான சஞ்சு சம்சன் பதிலீடு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு டி20 சர்வதேச அறிமுகம் பெற்றுக்கொண்ட சஞ்சு சம்சன் கடந்த 4 வருடங்களாக டி20 சர்வதேச போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அண்மையில் நிறைவுக்குவந்த பங்களாதேஷ் அணிக்கெதிரான டி20 சர்வதேச குழாமில் சஞ்சு சம்சன் இடம்பெற்று எதுவித போட்டியிலும் விளையாடாத நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான ஆரம்ப குழாமில் நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<