முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கான பங்களாதேஷ் அணி அறிவிப்பு

1142

பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளின் பங்குபற்றலுடன் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முத்தரப்பு ஒரு நாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட பலம் வாய்ந்த பங்களாதேஷ் குழாம் நேற்று (07) அறிவிக்கப்பட்டது.

[rev_slider LOLC]

பங்களாதேஷில் நடைபெறவுள்ள முத்தரப்பு தொடரில் திடீர் மாற்றம்

பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளின் பங்குபற்றலுடன் எதிர்வரும் 15..

இதன்படி, பங்களாதேஷ் தமது ஒரு நாள் அணியில் 5 மாற்றங்களை மேற்கொண்டுள்ளதுடன், அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் 9 துடுப்பாட்ட வீரர்கள், 5 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதிலும் குறிப்பாக அண்மையில் நிறைவடைந்த தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் தொடரில் அவ்வணிக்காக விளையாடி பிரகாசிக்கத் தவறிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான சௌமிய சர்கார் மற்றும் வேகப்பந்து வீச்சாளரான தஸ்கின் அஹமட் ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளூர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற அனாமுல் ஹக் மற்றும் உபாதையிலிருந்து குணமடைந்துள்ள முஷ்தபிசூர் ரஹ்மான் ஆகியோர் ஒரு நாள் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளனர்.

இதில் கடந்த 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் முதல் பங்களாதேஷ் ஒரு நாள் அணியில் இடம்பெற்று இதுவரை 15 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய சௌமிய சர்கார், 24.30 என்ற சராசரியுடன் வெறும் 2 அரைச்சதங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டார்.  

அதேபோல கடந்த வருடம் பூராகவும் அவ்வணிக்காக சிறப்பாக விளையாடியிருந்த தஸ்கின் அஹமட், தென்னாபிரிக்க தொடரில் வெறும் 2 விக்கெட்டுக்களை மாத்திரமே கைப்பற்றியிருந்தார். இதன் காரணமாக குறித்த 2 வீரர்களை அணியிலிருந்து நீக்குவதற்கு அந்நாட்டு தெரிவுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

பங்களாதேஷ் தொடருக்கான உத்தேச இலங்கை குழாம் அறிவிப்பு

இலங்கை தேசிய அணியின் தேர்வாளர்கள் பங்களாதேஷ்..

இதேநேரம், தென்னாபிரிக்க தொடரில் இடம்பெற்ற லின்டன் தாஸ், மொமினுல் ஹக் மற்றும் சபிஉல் இஸ்லாம் ஆகியோருக்குப் பதிலாக மொஹமட் மிதுன், அபுல் ஹசன் மற்றும் சன்சமுல் இஸ்லாம் ஆகியோர் முதலிரண்டு போட்டிகளுக்கான பங்களாதேஷ் குழாமில் இடம்பிடித்துள்ளனர்.

இதில், அண்மையில் நிறைவடைந்த பங்களாதேஷ் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக விளங்கிய மொஹமட் மிதுன், 4 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷ் அணியில் இடம்பிடித்தார்.

இறுதியாக அவர் 2014ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், இம்முறை பி.பி.எல் தொடரில் ராங்பூர் ரைடர்ஸ் அணிக்கு சம்பியன் பட்டத்தை வென்று கொடுப்பதற்கு மொஹமட் மிதுன் முக்கிய பங்களிப்பினை வழங்கியிருந்தார்.

மேலும், பங்களாதேஷ் அணியின் மற்றுமொரு அதிரடி ஆட்டக்காரரான அனாமுல் ஹக், 3 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷ் ஒரு நாள் அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுக்கொண்டுள்ளார். அவர் இறுதியாக 2015 மார்ச் மாதம் அவ்வணிக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும், அண்மையில் நிறைவடைந்த அந்நாட்டு தேசிய கிரிக்கெட் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரில் 2 இரட்டைச் சதங்களுடன் 1,077 ஓட்டங்களை குவித்தமை அவருக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதற்கான முக்கிய காரணமாக அமைந்தது.

மோசமான நடத்தையினால் ஒப்பந்தத்தை இழந்த சபீர் ரஹ்மான்

முதற்தரப் போட்டியொன்றின்போது தன்னை கேலி செய்த 12 வயது..

அதனைத் தொடர்ந்து ஜனவரி 15ஆம் திகதி நடைபெறவுள்ள முதலாவது போட்டியில் பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது.

முதலிரண்டு ஒரு நாள் போட்டிகளுக்காக பங்களாதேஷ் குழாம்

மஷ்ரபி முர்தசா (தலைவர்), சகிப் அல் ஹசன்(உப தலைவர்), தமீம் இக்பால், இம்ருல் கைஸ், அனாமுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லாஹ், நசீர் ஹொசைன், சபீர் ரஹ்மான், மொஹமட் மிதுன், முஷ்தபிசூர் ரஹ்மான், ருபெல் ஹொசைன், அபுல் ஹசன், மெஹிதி ஹசன் மீராஸ், மொஹமட் சைபுத்தீன் மற்றும் சன்சமுல் இஸ்லாம்.