இம்முறை வெபர் கிண்ண சம்பியனாக மகுடம் சூடிய மட்டக்களப்பு அணி

867

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி மைதானத்தில் 49ஆவது வருடமாக மைக்கல்மென் விளையாட்டுக் கழகம் நடாத்தி முடித்திருக்கும் வெபர் கிண்ண கூடைப்பந்தாட்டத் தொடரின் இறுதி ஆட்டத்தில் 74:59 என்கிற புள்ளிகள் அடிப்படையில் கம்பஹா மாவட்டத்தினை வீழ்த்திய மட்டக்களப்பு (சிவப்பு) அணியினர் சம்பியனாக முடி சூடியுள்ளனர்.

வெபர் கிண்ண இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடாத்தவுள்ள கம்பஹா, மட்டக்களப்பு அணிகள்

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு..

மாவட்ட ரீதியிலாக இம்முறை இடம்பெற்ற இந்த கூடைப்பந்தாட்ட தொடரின் அரையிறுதி ஆட்டங்களில் மட்டக்களப்பு நீல அணியினை வீழ்த்திய மட்டக்களப்பு சிவப்பு அணியும், யாழ் மாவட்ட அணியினை வீழ்த்திய கம்பஹா மாவட்ட அணியும் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்தன.  

இறுதி ஆட்டத்தின் ஆரம்பத்தில் பிரகீத் போட்டியின் முதற் புள்ளிகளை பெற்று கம்பஹாவுக்கு நல்லதொரு ஆரம்பத்தினை அமைத்திருந்தார். எனினும் இதற்கு பதில் தந்த கடற்படை வீரர் ஸ்ரீதர்ஷன் அதிரடியான முறையில் செயற்பட்டு மட்டக்களப்பு அணிக்கு விரைவாக புள்ளிகளை சேர்த்திருந்தார்.

இவருக்கு விதுசனும், வேனுஜனும் கைகொடுக்க முதற் கால்பகுதி 25:16 என மட்டக்களப்பு (சிவப்பு) அணியின் முன்னிலையோடு நிறைவடைந்தது. இந்த கால் பகுதியில் எதிரணி விட்ட தவறுகளின் மூலமாகவே பெரும்பாலான புள்ளிகளை கம்பஹா பெற்றுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் கால் பகுதியில் மட்டக்களப்பு அணிக்காக விவேக் புள்ளிகள் பெறுவதை துவக்கியிருந்தார். இந்த கால் பகுதியிலும் விதுசன் சிறப்பாக செயற்பட்டிருந்தார். மறுமுனையில் பிரகீத்தின் ஆட்டத்தோடு கம்பஹா அணி மட்டக்களப்புக்கு சவால் தர முனைந்திருந்த போதிலும் மட்டக்களப்பு அணியே இந்த கால் பகுதியினையும் கைப்பற்றிருந்தது. இதனால் போட்டியின் முதற்பாதி நிறைவில் 44:31 என மட்டக்களப்பு (சிவப்பு) அணி முன்னேற்றமான நிலையில் காணப்பட்டது.

போட்டியின் மூன்றாம் கால் பகுதியிலேயே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேசிய அணி வீரர் வெனிட்டோ மட்டக்களப்பு அணிக்காக தன்னுடைய முதல் புள்ளிகளை பெற்றுத்தந்தார். இந்த நேர இடைவெளியிலும் இரண்டாம் கால் பகுதியில் பெற்ற அதே புள்ளிகளினையே மட்டக்களப்பு வீரர்கள் பெற்றுக் கொண்டனர். கம்பஹா அணியும் தமக்கு கிடைத்த வாய்ப்புக்களை எல்லாம் சரிவர பயன்படுத்தி இந்த கால் பகுதியில் 16 புள்ளிகளை பெற்றுக் கொண்டது. எனினும், சிறந்த தடுப்பினை காட்டிய மட்டக்களப்பு அணியே போட்டியின் மூன்றாம் கால்பகுதியிலும் 63:47 என முன்னிலை அடைந்தது.

போட்டியின் இறுதி கால் பகுதியில் வெனிட்டோ எதிரணியின் தவறுகளினால் கிடைத்த வாய்ப்புக்களை பயன்படுத்தி மட்டக்களப்பு அணிக்காக புள்ளிகளை சேர்த்திருந்தார். இந்த கால் பகுதியினை கம்பஹா அணி ஜீவனின் ஆட்டத்தினால் கைப்பற்றிய போதிலும் ஏனைய கால்பகுகளில் பெற்ற புள்ளிகள் மட்டக்களப்பு அணியினரை போட்டியின் வெற்றியாளர்களாக மாற்ற போதுமாக அமைந்திருந்தது. முடிவில், கம்பஹா அணியினரை 74:59 என்கிற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி மட்டக்களப்பு (சிவப்பு) அணியினர் 2017ஆம் ஆண்டின் வெபர் கிண்ண சம்பியன் பட்டத்தினை சுவீகரித்துக் கொண்டனர்.

மூன்றாம் இடம்

அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியினை தழுவிய யாழ்ப்பாண அணியும் மட்டக்களப்பு (நீல அணியும்) மூன்றாம் இடத்துக்கான போட்டியில் மோதிக் கொண்டன.

போட்டியின் முதல் கால் பகுதியினையும், இரண்டாம் கால் பகுதியினையும் மட்டக்களப்பு (நீல) அணி கைப்பற்றியிருந்த போதிலும் போட்டியின் முதற்பாதியினை அடுத்து யாழ்ப்பாண அணி மேம்படுத்தப்பட்ட ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தது. இதனால், போட்டியின் இறுதி இரண்டு கால் பகுதிகளும் யாழ்ப்பாண அணிக்கு சொந்தமாக மாறியிருந்தது.

யாழ்ப்பாண அணியின் முன்னேற்றகரமான ஆட்டத்தினால் போட்டியின் இறுதி வரை விறுவிறுப்பு அதிகரித்து காணப்பட்ட போதிலும் மட்டக்களப்பு வீரர்கள் போட்டியின் முதல் இரண்டு கால்பகுதிகளிலும் சிறப்பாக செயற்பட்டமை அவர்களை வெபர் கிண்ண தொடரின் மூன்றாம் இடத்திற்கு மாற்ற போதுமாக காணப்பட்டது.

விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்தப் மோதலின் நிறைவில், 78:74 என்கிற புள்ளிகள் கணக்கில் மட்டக்களப்பு (நீல) அணி யாழ்ப்பாணத்தை வெற்றி கொண்டது.  

தொடரின் விசேட விருதுகள்

சிறந்த எதிர் தாக்குதல் வீரர் – பிரகீத் புஷ்பகுமார (கம்பஹா)
தொடரின் பெறுமதிமிக்க வீரர் – சங்கீத்த ஜயரத்ன (கம்பஹா)
சிறந்த தடுப்பு வீரர் – S. விதுஷன் (மட்டக்களப்பு சிவப்பு)
இறுதிப் போட்டியின் பெறுமதிமிக்க வீரர் – நிர்மலகுமார் ஸ்ரீதர்ஷன் (மட்டக்களப்பு சிவப்பு)

BPL தொடரில் முதற்தடவையாக களமிறங்கவுள்ள மாலிங்க

ஐந்தாவது தடவையாக நடைபெறவுள்ள பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) டி20 தொடரில்.

தொடரின் இறுதிப் போட்டியினை அடுத்து ThePapare.com இற்கு கருத்து தெரிவித்திருந்த மட்டக்களப்பு (சிவப்பு) அணியின் முகாமையாளர் சஹன் குணரட்னம் “49 ஆவது வருடமாக நடைபெற்ற இந்த வெபர் கிண்ண தொடரில் ஆறு அணிகள் பங்குபற்றியிருந்தன. எமது அணி தங்களுடைய குழுவில் இரண்டாம் இடத்தினைப் பெற்று அரையிறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று, இறுதிப் போட்டியில் மேல் மாகாணத்தில் இருந்து வந்த பலம்கொண்ட அணிகளில் ஒன்றான கம்பஹா மாவட்ட அணியினை வீழ்த்தியிருக்கின்றது. இதற்காக மகிழ்கின்றேன். அதோடு வெபர் கிண்ணத்தினையும் இரண்டு மூன்று ஆண்டுகளின் பின்னர் நாம் கைப்பற்றியுள்ளோம். எமது அணி வீரர்களுக்கு இந்த தொடரின் மூலம் இரண்டு விசேட விருதுகளும் கிடைத்திருக்கின்றன. அதற்காகவும் சந்தோசமடைகின்றேன். அடுத்து விமர்சையாக நடைபெறவிருக்கும் 50ஆவது வெபர் கிண்ண தொடரிலும் நாம் சாதிப்போம்.“ என குறிப்பிட்டிருந்தார்.