எல்.பி.எல். தொடரின் வீரர்கள் ஏலம் ஒக்டோபரில்

1609
SLC shortlists 150 foriegn

இலங்கை கிரிக்கெட் சபை (SLC), தாம் முதல்முறையாக நடாத்தவிருக்கும் லங்கா பிரிமியர் லீக் (எல்.பி.எல்) T20 தொடரின் வீரர்கள் ஏலத்தில் பங்கெடுக்க 150 வெளிநாட்டு வீரர்கள் வரை தெரிவு செய்துள்ளதாக குறிப்பிட்டிருக்கின்றது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மரணம்

அதோடு, இலங்கை கிரிக்கெட் சபை (SLC) லங்கா பிரிமியர் லீக் தொடரின் வீரர்கள் ஏலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி இடம்பெறும் எனவும் தெரிவித்திருக்கின்றது.

குறித்த வீரர்கள் ஏலம் பற்றி மேலும் கருத்து வெளியிட்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் சபை, இந்த வீரர்கள் ஏலத்தில் T20 போட்டிகளின் நட்சத்திர வீரர்களாக இருக்கும் கிறிஸ் கெயில், டர்ரன் சமி, டர்ரன் ப்ராவோ, சஹீட் அப்ரிடி, சகீப் அல் ஹஸன், ரவி போபரா, கொலின் மன்ரோ போன்ற வீரர்கள் பங்கெடுப்பார்கள் எனக் கூறியுள்ளது.

இந்த வீரர்கள் தவிர இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளரான முனாப் பட்டேலும் லங்கா பிரிமியர் லீக் தொடரின் வீரர்கள் ஏலத்தில் பங்கெடுக்கும்  வெளிநாட்டு வீரர்களில் முக்கியமான ஒருவராக காணப்படுகின்றார்.

அதேநேரம், இந்த வீரர்கள் ஏலம் மூலம் லங்கா பிரிமியர் லீக் தொடரில் பங்கெடுக்கும் ஐந்து அணிகளும் தங்களுக்கென அதிகபட்சமாக தலா 6 வெளிநாட்டு வீரர்கள் வரை கொள்வனவு செய்ய முடியும் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதோடு, அணிகளில் எஞ்சியிருக்கும் இடங்களை இலங்கையினைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் 65 பேர் வரை பூர்த்தி செய்ய முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

பிக் பாஷ் T20i தொடரில் விளையாடும் யுவராஜ் சிங்?

இதேநேரம், லங்கா பிரிமியர் லீக் தொடரின் போட்டிகள் அனைத்தும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 06ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளதோடு போட்டிகள் அனைத்தும் தம்புள்ளை, பல்லேகல மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மைதானங்களில் இடம்பெறவிருக்கின்றன. அதேவேளை, லங்கா பிரிமியர் லீக் தொடரின் ஆரம்ப நிகழ்வு ஹம்பாந்தோட்டை சர்வதேச மைதானத்தில் இடம்பெறும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<