சந்தரு, அயேஷின் சுழலில் இன்னிங்ஸ் வெற்றியை ருசித்த தர்ஸ்டன் கல்லூரி

97

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்றுவரும் பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு -1 கிரிக்கெட் தொடரின் மூன்று போட்டிகள் இன்று (27) நிறைவுற்றன. இதில் தர்ஸ்டன், ஷேர்வேஷியஸ் கல்லூரிகள் வெற்றியைப் பதிவு செய்ய, கோட்டே ஜனாதிபதி கல்லூரிக்கும் வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரிக்கும் இடையிலான போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்தன.

கேள்விக்குறியாகும் மெதிவ்ஸின் எதிர்காலம்?

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடம் மோசமான தோல்வியை…

தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு எதிர் புனித அந்தோனியார் கல்லூரி, வத்தளை

தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் பிரகாசித்த தர்ஸ்டன் கல்லூரி அணி, இன்னிங்ஸ் மற்றும் 118 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட தர்ஸ்டன் கல்லூரிக்கு பவந்த ஜயசிங்க பெற்ற 107 ஓட்டங்கள் மூலம் அந்த அணி முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 248 ஓட்டங்களைப் பெற்றது.

அபாரமாக பந்துவீசிய புனித அந்தோனியார் கல்லூரியின் அஷேன் மலித் 60 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இதனையடுத்து, புனித அந்தோனியார் கல்லூரி அணி, தமது முதல் இன்னிங்சுக்காக மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 26 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

எனவே, பலோ ஒன் (follow on) முறையில் மீண்டும் துடுப்பெடுத்தாடிய அந்தோனியார் வீரர்கள் 104 ஓட்டங்களை மாத்திரம் பெற்று இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவினர்.

தர்ஸ்டன் கல்லூரி அணி சார்பில் இடதுகை சுழல் பந்துவீச்சாளர்களான அயேஷ் ஹர்ஷன மற்றும் சந்தரு டயஸ் ஆகியோர் இரண்டு இன்னிங்சுகளிலும் தலா 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

தர்ஸ்டன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 248 (72.4) – பவந்த ஜயசிங்க 107, சாலக பண்டார 28, பிரசன்ன புஷ்பகுமார 26, ரனேஷ் சில்வா 21, யொஹான் லியனகே 20, அஷேன் மலித் 5/60, ரொமேஷ் சுரங்க 2/41, பெதும் விஹங்க 2/72

புனித அந்தோனியார் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 26 (21.4) –  பவந்த ஜயசிங்க 2/09, சந்தரு டயஸ் 3/00, அயேஷ் ஹர்ஷன 2/07

புனித அந்தோனியார் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) f/o – 104 (45.5) – சங்கித ஹிரூஷன் 29*, சந்தரு டயஸ் 3/48, அயேஷ் ஹர்ஷன 4/19

முடிவு – தர்ஸ்டன் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 118 ஓட்டங்களால் வெற்றி

டெவிந் பத்மநாதனின் சகலதுறை பிரகாசிப்பால் வென்றது சிங்கர்

யுனிலிவரின் முக பராமரிப்பு நாமமான பெயார் எண்ட் லவ்லி மென் (Fair & Lovely Men) அனுசரணையில் நடைபெற்று வரும் வர்த்தக நிறுவனங்களுக்கான பிரிவு…

புனித அலோசியஸ் கல்லூரி, காலி எதிர் புனித சேர்வேஷியஸ் கல்லூரி, மாத்தறை

மாத்தறை உயன்வத்த மைதானத்தில் முடிவடைந்த இப்போட்டியில் புனித சேர்வேஷியஸ் கல்லூரி 8 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்றது.

நேற்று (27) ஆரம்பமாகிய இப்போட்டியில் முதலில் துடுப்பாடியிருந்த அலோசியஸ் கல்லூரி அணி, எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 168 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பந்துவீச்சில் செர்வேஷியஸ் அணியின் ஷேதக்க தெனுவன் 4 விக்கெட்டுக்களையும், நவீன் சாஹித் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து பதிலுக்கு தங்களுடைய முதல் இன்னிங்சில் புனித சேர்வேஷியஸ் கல்லூரி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது.

தொடர்ந்து 18 ஓட்டங்கள் முன்னிலையில் தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய அலோசியஸ் கல்லூரி அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 58 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில் சேர்வேஷியஸ் கல்லூரியின் கேஷர நுவந்த 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இதனையடுத்து 76 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய செர்வேஷியஸ் கல்லூரி அணி 13 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித அலோசியஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 168 (73.3) – கவிந்து தில்ஹார 36, மனுஷ்க சமித் 31, சந்தீப சமோத் 23, கிம்ஹான ஆஷிர்வாத 21, ஓமல் சதித் 20, சேதக்க தெனுவன் 4/30, நவீன் சாஹித் 3/29, பசிந்து மனுப்பிரிய 2/26

புனித சேர்வேஷியஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 150 (47.5) – புஷ்பித டில்ஷான் 42, கேஷர நுவந்த 24, ரிசிர லக்வின் 38, சிஹான் கவிந்து 22,கவிஷ்க விலோச்சன 2/25, மனுஷ்க சமித் 4/44, சனுக்க நிகேஷல 3/33

புனித அலோசியஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 58 (40) – சந்தீப சமோத் 18, நவீன் சாஹித் 4/25, கேஷர நுவந்த 5/19

புனித சேர்வேஷியஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 77/2 (13) – ரிசிர லக்வின் 39*, சேதக்க தெனுவன் 32

முடிவு – புனித சேர்வேஷியஸ் கல்லூரி 8 விக்கெட்டுக்களால் வெற்றி

ஜனாதிபதி கல்லூரி, கோட்டே எதிர் புனித ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ

கட்டுனேரிய புனித செபெஸ்டியன் கல்லூரி மைதானத்தில் முடிவடைந்த இப்போட்டியில் சதஸ்ய கல்ப, தினித் நெலும்தெனிய, இரங்க ஹஷான் ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியுடன் வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரிக்கு எதிரான போட்டியில் ஜனாதிபதி கல்லூரி அணியினர், முன்னிலை பெற்றனர்.

இறுதிப் போட்டிக்கு யார் என்ற மோதலில் இலங்கை – பாகிஸ்தான் பலப்பரீட்சை

இலங்கையில் ரெட் புல் அசரணையிலான உலகின் சிறந்த பல்கலைக்கழக அணிகளுக்கிடையிலான டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிக்கட்ட தொடரின் லீக்…

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஜனாதிபதி கல்லூரி, முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 292 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது

இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த புனித ஜோசப் வாஸ் கல்லூரி, 127 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில் தினித் நெலும்தெனிய 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்நிலையில் பலோ ஒன் முறையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை புனித ஜோசப் வாஸ் கல்லூரி அணி, 149 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்த போது போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

ஜனாதிபதி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 292 (83.3) – சதஸ்ய கல்ப 78, தினித் நெலும்தெனிய 64, இரங்க ஹஷான் 55, அகில ரொஷான் 22, நுரன் பெரேரா 21, அவிந்த பிரேமரத்ன 5/86

புனித ஜோசப் வாஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 127 (55.1) – தினித் நெலும்தெனிய 4/18, பஹன் பிரிட்டோ 2/05

புனித ஜோசப் வாஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) f/0 – 149/8 (61) – சமோத் பெர்னாண்டோ 57, அஷேன் தமீல் 33*, தினித் நெலும்தெனிய 3/44, தஷிக நிர்மால் 2/28, இரங்க ஹஷான் 2/39

முடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றது.

லும்பினி கல்லூரி, கொழும்பு எதிர் மொறட்டு மகா வித்தியாலயம், மொறட்டுவை

மொரட்டு மகா வித்தியாலய மைதானத்தில் இன்று (27) ஆரம்பமான இப்போட்டியில் லும்பினி கல்லூரி அணி, 109 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்த போதும் மொரட்டு மகா வித்தியாலயத்திற்கு பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்தது.

இதன்படி, தமது முதல் இன்னிங்சுக்காகத் துடுப்பெடுத்தாடிய மொறட்டு மகா வித்தியாலய அணி, மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 98 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இந்நிலையில் முதல் நாள் ஆட்டத்தின் கடைசி பகுதியில் தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த லும்பினி கல்லூரி அணி, ஆட்ட நேர முடிவின் போது ஒரு விக்கெட்டினை இழந்து 6 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

நாளை போட்டியின் இரண்டாவதும் இறுதியுமான நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

லும்பினி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 109 (38.3) – சவிந்த கம்லாத் 31, சந்துனில் சங்கல்ப 30, விநுர நிபுன் 4/43, ரஷான் கவிஷ்க 2/03

மொறட்டு மகா வித்தியாலயம் (முதல் இன்னிங்ஸ்) – 98 (38.1) – மதுஷான் டிலக்ஷன 63, ரவிஷ்க விஜேசிறி 3/36, சவிங்க கம்லாத் 2/09, பிரபாத் மதுஷங்க 2/16

லும்பினி கல்லூரி ( இரண்டாவது இன்னிங்ஸ்) – 6/1 (9)

 

>>பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<