இலங்கை A அணியில் இடம்பிடித்த மொஹமட் சிராஸ்!

Afghanistan A Team tour of Sri Lanka 2024

125

சுற்றுலா ஆப்கானிஸ்தான் A அணிக்கு எதிரான உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இலங்கை A குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை A குழாத்தில் தமிழ்பேசும் வீரர் மொஹமட் சிராஸ் இடம்பெற்றுள்ளார். வேகப்பந்துவீச்சாளரான இவர் கடந்த சில மாதங்களாக உள்ளூர் போட்டிகளில் சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்தியதன் காரணமாக அணியில் இடம்பெற்றுள்ளார்.

T20 உலகக்கிண்ணத்தின் தூதுவராகும் உசைன் போல்ட்

அதேநேரம் அணியின் தலைவராக இலங்கை தேசிய அணியில் விளையாடி வரும் சஹான் ஆராச்சிகே நியமிக்கப்பட்டுள்ளதுடன், மினோத் பானுக, நிசான் மதுஷ்க, நுவனிது பெர்னாண்டோ, துஷான் ஹேமந்த, லஹிரு உதார, சாமிக்க குணசேகர மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகிய தேசிய அணியின் வீரர்களும் குழாத்தில் இடங்களை பிடித்துள்ளனர்.

இவர்களுடன் பவன் ரத்நாயக்க, அஹான் விக்ரமசிங்க, வனுஜ சஹான் மற்றும் நிமேஷ் விமுக்தி போன்ற உள்ளூர் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்திய வீரர்களும் முதலிரண்டு போட்டிகளுக்கான குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை வரும் ஆப்கானிஸ்தான் A அணி 5 உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் மற்றும் ஒரு நான்கு நாள் போட்டியில் விளையாடவுள்ளது. இந்தப் போட்டி தொடர் எதிர்வரும் 28ம் திகதி ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை A குழாம்

சஹான் ஆராச்சிகே (C), மினோத் பானுக, நிசான் மதுஷ்க, நுவனிது பெர்னாண்டோ, துஷான் ஹேமந்த, லஹிரு உதார, சாமிக்க குணசேகர, சாமிக்க கருணாரத்ன, பவன் ரத்நாயக்க, அஹான் விக்ரமசிங்க, வனுஜ சஹான், நிமேஷ் விமுக்தி, மொஹமட் சிராஸ்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<