டெவிந் பத்மநாதனின் சகலதுறை பிரகாசிப்பால் வென்றது சிங்கர்

178

யுனிலிவரின் முக பராமரிப்பு நாமமான பெயார் எண்ட் லவ்லி மென் (Fair & Lovely Men) அனுசரணையில் நடைபெற்று வரும் வர்த்தக நிறுவனங்களுக்கான பிரிவு B (Tier – B) கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியை, டெவிந் பத்மநாதனின் சகலதுறை பிரகாசிப்பின் உதவியுடன் சிங்கர் ஸ்ரீலங்கா அணி வெற்றிக்கொண்டது.

விறுவிறுப்பான போட்டியில் த்ரில் வெற்றிபெற்ற கென்ரிச் பினான்ஸ் அணி

யுனிலிவரின் முக பராமரிப்பு நாமமான பெயார் எண்ட் லவ்லி மென் (Fair & Lovely Men) அனுசரணையுடன் இன்று…

பி.ஆர்.சி. (BRC)மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சிங்கர் ஸ்ரீலங்கா A அணி மற்றும் கொமர்ஷியல் கிரடிட் B அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொமர்ஷியல் கிரடிட் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி ஆடிய கொமர்ஷியல் கிரடிட் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை குவித்தனர். முக்கியமாக, நீர்கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடிய அகீல் இன்ஹாம், சிங்கர் ஸ்ரீலங்கா பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டு அரைச்சதம் அடித்து அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுசேர்த்தார்.

இவரின் 63 என்ற ஓட்ட எண்ணிக்கையின் உதவியுடன் கொமர்ஷியல் கிரடிட் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 250 ஓட்டங்களை பெற்றது. அகீம் இன்ஹாமிற்கு பங்களிப்பாக அதீச திலன்சன 42 ஓட்டங்களையும், ரங்க குரே 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். சிங்கர் ஸ்ரீலங்கா அணி சார்பாக டெவிந் பத்மநாதன் 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 251 என்ற சவால் மிக்க இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய சிங்கர் ஸ்ரீலங்கா அணியின் சச்சின் ஜெகொப் 42 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து உபாதை காரணமாக வெளியேறியதுடன், ரவீன் யசஸ் 28 ஓட்டங்களை பெற, அணி சிறந்த ஆரம்பத்தினை பெற்றுக்கொண்டது.

இலங்கை ஒருநாள் குழாமிலிருந்து மெதிவ்ஸ்,மெண்டிஸ் நீக்கம் : குழாம் அறிவிப்பு

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கான இலங்கை…

இவர்களுடைய சிறந்த ஆரம்பத்தின் உதவியுடன் பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட டெவிந் பத்மநாதன் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இவர் 83 ஓட்டங்களை குவிக்க மறுமுனையில் ரஜித் பிரியன் ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியை வெற்றிபெறச் செய்தனர். இதனடிப்படையில் 47.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து சிங்கர் ஸ்ரீலங்கா அணி வெற்றியிலக்கை அடைந்தது. கொமர்ஷியல் கிரடிட் அணி சார்பில் சுரங்க சலிந்த 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டி சுருக்கம்

கொமர்ஷியல் கிரடிட் – 250 (50), அகீல் இன்ஹாம் 63, அதீச திலன்சன 42, டெவிந் பத்மநாதன் 55/3

சிங்கர் ஸ்ரீலங்கா – 251 (47.4), டெவிந் பத்மநாதன் 83, ரஜித் பிரியன் 51*, சுரங்க சாலிந்த 32/2

போட்டி முடிவுசிங் கர் ஸ்ரீலங்கா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி  

 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<