ICC இன் சிறந்த வீரர்களுக்கான பரிந்துரையில் இரு இலங்கை வீரர்கள்

609

2021ஆம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் சிறந்த வீரர் விருதுகளுக்கான பரிந்துரையில் இலங்கையினைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் இடம்பெற்றிருக்கின்றனர். 

>>ஒத்திவைக்கப்பட்ட இலங்கையின் இளையோர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் மோதல்

அந்தவகையில் 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது பரிந்துரையில், இலங்கை டெஸ்ட் அணியின் தலைவரான திமுத் கருணாரட்ன இடம் பெற்றிருக்கின்றார்.

திமுத் கருணாரட்ன 2021ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் 902 ஓட்டங்களை குவித்திருந்ததோடு, 69.38 என்கிற துடுப்பாட்ட சராசரியுடன் 4 சதங்களையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

திமுத் கருணாரட்ன தவிர இந்தியாவின் சுழல் நட்சத்திரம் ரவிச்சந்திரன் அஸ்வின், நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் கைல் ஜேமிசன் மற்றும் இங்கிலாந்தின் துடுப்பாட்டவீரர் ஜோ ரூட் ஆகியோரும் சிறந்த டெஸ்ட் வீரர்களுக்கான பரிந்துரையில் இடம்பெற்றிருக்கின்றனர்.

மறுமுனையில் 2021ஆம் ஆண்டுக்கான ICC இன் சிறந்த T20I வீரர்களுக்கான பரிந்துரையில் வனிந்து ஹஸரங்க இடம்பெற்றிருக்கின்றார்.

வனிந்து ஹஸரங்க 2021ஆம் ஆண்டில் T20I போட்டிகளில் 36 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்ததோடு, ஒரு அரைச்சதம் அடங்கலாக 196 ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.

>>சௌரவ் கங்குலிக்கு கொவிட்-19 தொற்று

இதேநேரம் சிறந்த T20I வீரர்களுக்கான பரிந்துரையில் வனிந்து ஹஸரங்க அடங்கலாக இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர், பாகிஸ்தானின் ஆரம்பத்துடுப்பாட்டவீரர் மொஹமட் ரிஸ்வான் மற்றும் அவுஸ்திரேலிய துடுப்பாட்டவீரர் மிச்சல் மார்ஷ் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர்.

சிறந்த வீரர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள வீரர்கள், ICC தீர்மானித்திருக்கும் விஷேட குழுவினது வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்படுவர் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<