சுமார் 5,000 பாடசாலை விளையாட்டு வீர விராங்கனைகள் பங்கு கொள்ளும் 32ஆவது தேசிய மட்ட பாடசாலை மெய்வல்லுனர் போட்டிகள் கடந்த 13ஆம் திகதி ஆரம்பமாகின. அதன் மூன்றாவது தின போட்டி நிகழ்வுகள் நேற்று முடிவடைந்தன. நேற்றைய தினத்தில் இரண்டு போட்டி சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.  

நேற்றைய போட்டிகளில் முதல் சாதனையாக 21 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டி நிகழ்ச்சியில் யாழ்ப்பாணம் மகஜனா கல்லூரி வீராங்கனை அனித்தா புதிய போட்டி சாதனை நிகழ்த்தினார். 21 வயதின் கீழ் பெண்களுக்கான போட்டியில் ஏற்கனவே இருந்த போட்டி சாதனையான 3.17 மீட்டர் என்ற உயரத்தை முறியடித்த அனித்தா 3.30 மீட்டர் உயரம் பாய்ந்து இந்த சாதனையை பதிவு செய்தார்.

அதேபோன்று, 15 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவுக்கான 100 மீட்டர் தடை தாண்டி ஓடல் போட்டியில், போட்டித் தூரத்தை 13.6 செக்கன்களில் ஓடி முடித்த கண்டி பெரவட்ஸ் கல்லூரி வீரர் அனுராத ஸ்ரீமால் புதிய போட்டிச் சாதனை நிகழ்த்தினார். இதற்கு முன்னர் இந்தப் போட்டி சாதனை 13.73 செக்கன்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது நாள் இடம்பெற்ற இறுதிப் போட்டிகளின் முடிவுகள்

17 வயதின் கீழ் ஆண்கள் பிரிவு – 100 மீட்டர் தடை தாண்டி ஓடல்

 1. பாக்யா நிர்மாலி (விஹாரகல மத்திய மகா வித்தியாலயம்)
 2. செனுரி அனுத்தரா (பன்னிபிடிய தர்மபால வித்தியாலயம்)
 3. நெலிந்தி நிமெத்தா (நுகேகொடை அனுலா வித்தியாலயம்)

17 வயதின் கீழ் பெண்கள் பிரிவு – 100 மீட்டர் தடை தாண்டி ஓடல்

 1. எம்.டி குமாரசிங்க (இரத்தினபுரி சுமன மகளிர் வித்தியாலயம்)
 2. டீ.கௌசல்யா (நாவலப்பிடி புனித அன்ட்ரு வித்தியாலயம்)
 3. என். சமரசிங்க (இரத்தினபுரி சுமன மகளிர் வித்தியாலயம்)

19 வயதின் கீழ் பெண்கள் பிரிவு – 100 மீட்டர் தடை தாண்டி ஓடல்

 1. .அபேரத்ன (கேகாலை புனித ஜோசப் வித்தியாலயம்)
 2. ஆர். குனதிலக (இரத்தினபுரி சுமன மகளிர் வித்தியாலயம்)
 3. டீ.தின்திரிமாலகே (குருனாகலை மலியதேவ மகளிர் வித்தியாலயம்)

21 வயதின் கீழ் பெண்கள் பிரிவு – 100 மீட்டர் தடை தாண்டி ஓடல்

 1. கலனி கயத்ரி (வீரகுடிய ராஜபக்ஷ வித்தியாலயம்)
 2. ஷானிகா தில்ருக்சி (துடெல்ல மரியா கன்வன்ட்)
 3. ஜே.அனித்தா (யாழ்ப்பாணம் மகஜனா கல்லூரி)

15 வயதின் கீழ் ஆண்கள் பிரிவு – 100 மீட்டர் தடை தாண்டி ஓடல்

 1. அனுராத ஸ்ரீமால் (கண்டி பெரவட்ஸ் கல்லூரி)
 2. ப்ரசாத் குமார (எம்பிலிபிடிய குலரத்ன மத்திய வித்தியாலயம்)
 3. ஹரிது கசுன்த (கடவத்த ஜனாதிபதி கல்லூரி)

17 வயதின் கீழ் ஆண்கள் பிரிவுமுப்பாய்ச்சல்

 1. சமோத புஷ்பகுமார (மாத்தரை ராஹுல வித்தியாலயம்)
 2. கவிது உதயன்த (கொழும்பு புனித ஜோசப் கல்லூரி)
 3. செஹான் தனஞ்சய (நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி)

15 வயதின் கீழ் ஆண்கள் பிரிவுஈட்டி எறிதல்

 1. கே.பர்னான்து (புத்தளம் புனித மரியார் கல்லூரி)
 2. .ஜயரத்ன (இதுல்கொடகந்த ஸ்ரீ நிஸ்ஸன்க வித்தியாலயம்)
 3. தசிந்து தில்ஷான் (ஹினுமுல்ல கன்னங்கர வித்தியாலயம்)

21 வயதின் கீழ் பெண்கள் பிரிவுகோலூன்றிப் பாய்தல்

 1. ஜே.அனித்தா (யாழ்ப்பாணம் மகஜனா கல்லூரி)
 2. ஜே.சுகிர்தா (பலாவி மத்திய தகா வித்தியாலயம்)
 3. கே.தர்மரத்ன (வலல ரத்னாயக்க வித்தியாலயம்)

21 வயதின் கீழ் பெண்கள் பிரிவு– 1,500 மீட்டர் ஓட்டம்

 1. பி. அபேசிங்க (வலல ரத்னாயக்க வித்தியாலயம்)
 2. .போபிடிய (இரத்தினபுரி சுமன மகளிர் கல்லூரி)
 3. .குமாரி (வலல ரத்னாயக்க வித்தியாலயம்)

மூன்றாம் நாள் நிறைவில் மாகாணங்கள் பெற்றுள்ள புள்ளிகள்

 • மேல் மாகாணம் – 439
 • சபரகமுவ மாகாணம் – 189
 • மத்திய மாகாணம் – 187
 • தென் மாகாணம் – 155
 • வட மேல் மாகாணம் – 149
 • வட மாகாணம் – 55
 • ஊவா மாகாணம் – 36.5
 • கிழக்கு மாகாணம் – 26
 • வட மத்திய மாகாணம் – 21.5

அதேபோன்று 17, 19 வயது மற்றும் 21 வயதுக்குபட்ட 1,500 மீட்டர் ஓட்டப் போட்டிகள் இரண்டாம் நாள் ஆரம்பத்தில் நடாத்தப்பட்டன. அதன் பின் 100 மீட்டர் ஓட்டம் மற்றும் 110 மீட்டர் தடை தாண்டி ஓடல் போன்ற போட்டிகள் இடம்பெற்றன. அதேபோன்று, அனைத்துப் பிரிவுகளுக்குமான 1,500 மீட்டர் ஓட்டப் போட்டி மிகுந்த போட்டித்தன்மை மிக்கதாக அமைத்திருந்தது.

நிகழ்வின் இரண்டாவது தினத்தில், பல பிரிவுகளுக்குமான நீலம் பாய்தல், உயரம் பாய்தல், ஈட்டி எறிதல், பரிதி பட்டம் எறிதல் மற்றும் குண்டெரிதல் உட்பட பல ஓட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றன.