86ஆவது சர். ஜோன் டார்பெட் சிரேஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்று(15) தியகம மகிந்த ராஜபக்ஷ விளையாட்டு அரங்கில் நிறைவடைந்தது. இப்போட்டிகளில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி ஆண்களுக்கான பிரிவில் சாம்பியன் பட்டத்தையும், வளல ரத்நாயக்க மத்திய கல்லூரி பெண்களுக்கான பிரிவில் சாம்பியன் பட்டத்தினையும் வென்றது.
போட்டியின் இறுதி நாளன்று 4 போட்டி சாதனைகள் முறியடிக்கப்பட்டன. கம்பஹா ஹோலி க்ரொஸ் கல்லூரியின் ப்ரஸாதி லக்ஷானி பெண்களுக்கான 16 வயதிற்குட்பட்ட முப்பாய்ச்சல் போட்டியில் புதிய சாதனை புரிந்தார். லும்பினி கல்லூரியின் அதீஷ அஞ்சன 16 வயதிற்குட்பட்ட 400 மீட்டர் ஓட்டப்போட்டியை 50 செக்கனில் ஓடி முடித்து சாதனை புரிந்தார். அம்பலாங்கொட தர்மசோக வித்தியால மாணவி ரித்மா நிஷாதி 16 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் 6.02 மீட்டர் நீளம் பாய்ந்து புதிய சாதனை படைத்தார். இறுதி நாளில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் தெல்லிப்பளை மகஜன கல்லூரியின் வீராங்கனை ஜெ.அனிதா. பெண்களுக்கான தடியூன்றி தாண்டுதல் போட்டியில் 3.35 மீட்டர் பாய்ந்து புதிய சாதனை படைத்தார்.
தர்மசோக கல்லூரியின் ரித்மா நிஷாதி நீளம் பாய்தல் போட்டியில் நிலை நாட்டிய புதிய சாதனைக்காக பெண்களுக்கான பிரிவில் சிறந்த வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டார். மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் உஷான் திவங்க போட்டியில் தாம் நிலைநாட்டிய சாதனைக்காக ஆண்களுக்கான பிரிவில் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டார்.
இம்முறை 3200 வீர, வீராங்கனைகள் பங்கு பற்றியதோடு, இம்முறை போட்டிகள் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிக்கான தெரிவுப் போட்டியாகவும் அமைந்தது.
86 ஆவது சர். ஜோன் டார்பெட் மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் – 2016
வயது பிரிவுக்கான சாம்பியன்கள்
- 16 வயதிற்குட்பட்ட பெண்கள்
3ஆம் இடம் | LOYOLA COLLEGE – NEGOMBO | 25 |
2ஆம் இடம் | A. RATHNAYAKE C.C. – WALALA | 37 |
சாம்பியன் | HOLY CROSS COLLEGE – GAMPAHA | 48 |
- 16 வயதிற்குட்பட்ட ஆண்கள்
3ஆம் இடம் | ST. MARY’S COLLEGE – CHILAW | 25 |
2ஆம் இடம் | ROYAL COLLEGE – COLOMBO 07 | 36 |
சாம்பியன் | MARIS STELLA COLLEGE | 66 |
- 18 வயதிற்குட்பட்ட பெண்கள்
3ஆம் இடம் | SUMANA BALIKA VID. RATHNAPURA | 36 |
2ஆம் இடம் | GATEWAY COLLEGE – RAJAGIRIYA | 57 |
சாம்பியன் | A. RATHNAYAKE C.C. – WALALA | 110 |
- 18 வயதிற்குட்பட்ட பெண்கள்
3ஆம் இடம் | RICHMOND COLLEGE | 28 |
2ஆம் இடம் | ST. BENEDICTS COLLEGE – COLOMBO 13 | 44 |
சாம்பியன் | A. RATHNAYAKE C.C. – WALALA | 56 |
- 20 வயதிற்குட்பட்ட பெண்கள்
3ஆம் இடம் | SUMANA B.V. – RATHNAPURA | 38 |
2ஆம் இடம் | A.RATHNAYAKE C.C. – WALALA | 76 |
சாம்பியன் | AMBAGAMUWA M.V. | 86 |
- 20 வயதிற்குட்பட்ட ஆண்கள்
3ஆம் இடம் | LOYOLA COLLEGE | 25 |
2ஆம் இடம் | ST. RITA’S COLLEGE – THALDEKA | 27 |
சாம்பியன் | MARIS STELLA COLLEGE – NEGOMBO | 51 |
- கள நிகழ்வுகள் – பெண்கள்
2ஆம் இடம் | MAHAJANA COLLEGE – THELIPPALAI | 30 |
சாம்பியன் | AVE MARIA CONVENT – NEGOMBO | 32 |
- கள நிகழ்வுகள் – ஆண்கள்
2ஆம் இடம் | LOYOLA COLLEGE | 42 |
சாம்பியன் | MARISSTELL COLLEGE | 62 |
- ஓட்ட நிகழ்வுகள் – பெண்கள்
2ஆம் இடம் | AMBAGAMUWA M.M.V. | 89 |
சாம்பியன் | A. RATHNAYAKE C.C. – WALALA | 209 |
- ஓட்ட நிகழ்வுகள் – ஆண்கள்
2ஆம் இடம் | A. RATHNAYAKE C.C. – WALALA | 74 |
சாம்பியன் | MARIS STELLA COLLEGE | 79 |
- ரிலே சாம்பியன்ஷிப் – பெண்கள்
3ஆம் இடம் | AMBAGAMUWA M.M.V. | 20 |
2ஆம் இடம் | SIR JOHN KOTHALAWALA M.V. | 22 |
சாம்பியன் | A. RATHNAYAKE C.C. – WALALA | 27 |
- ரிலே சாம்பியன்ஷிப் – ஆண்கள்
3ஆம் இடம் | TRINITY COLLEGE | 19 |
2ஆம் இடம் | MARIS STELLA COLLEGE | 30 |
சாம்பியன் | ST. BENEDICT’S COLLEGE | 31 |
- சிறந்த வீரர் – நீளம் பாய்தல்
நிபுன் கல்தெற | LOYOLA COLLEGE – DALUWAKOTUWA | 7.38 M
I.A.A.F POINTS 1004 |
- சிறந்த வீரர் – உயரம் பாய்தல்
உஷான் திவாங்க | MARIS STELLA COLLEGE – NEGOMBO | 2.17 M
I.A.A.F POINTS 1064 |
- சிறந்த வீரர் – 400 மீட்டர் ஓட்டம்
தருஷ தனஞ்சய | LUMBINI COLLEGE – COLOMBO 05 | 47.8 SEC
I.A.A.F. POINTS 984
|
- சிறந்த வீராங்கனை – 2016ஆம் ஆண்டு
ரித்மா நிஷாதி | DHARMASHOKA COLLEGE – AMBALANGODA | 6.02 M
I.A.A.F POINTS 991 |
- சிறந்த வீரர் – 2016ஆம் ஆண்டு
உஷான் திவாங்க | MARIS STELLA COLLEGE – NEGOMBO | 2.17 M
I.A.A.F POINTS 1064 |
- சிறந்த வெளிதள அணி – பெண்கள்
3ஆம் இடம் | HOLY CROSS COLLEGE – GAMPAHA | 60 |
2ஆம் இடம் | SUMANA B.V. | 79 |
சாம்பியன் | AMBAGAMUWA M.M.V | 99 |
- சிறந்த வெளிதள அணி – ஆண்கள்
3ஆம் இடம் | ST. RITA’S COLLEGE | 40 |
2ஆம் இடம் | TRINITY COLLEGE | 44 |
சாம்பியன் | A. RATHNAYAKE C.C. | 75 |
- மொத்த சாம்பியன்ஷிப் – பெண்கள்
3ஆம் இடம் | SUMANA B.V. | 79 |
2ஆம் இடம் | AMBAGAKUWA M.M.V. | 99 |
சாம்பியன் | A. RATHNAYAKE C.C. – WALALA | 228 |
- மொத்த சாம்பியன்ஷிப் – ஆண்கள்
3ஆம் இடம் | ST. BENEDICT’S COLLEGE – COL. 13 | 74 |
2ஆம் இடம் | A. RATHNAYA C.C. – WALALA | 75 |
சாம்பியன் | MARIS STELLA COLLEGE – NEGOMBO | 141 |