IPL தொடரில் குறைந்த விலையில் பிரகாசித்த வீரர்கள்

467

இந்தியன் ப்ரீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) 12ஆவது தொடர் நேற்று முன்தினம் நிறைவுக்கு வந்தது. இந்தப் போட்டித் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்று, நான்காவது முறை சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது. இந்தப் போட்டித் தொடரை பொருத்தவரை ஒவ்வொரு அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு முன்னணி வீரர்களை தங்களது அணியில் இணைத்திருந்தன.  

வேகத்தால் மிரட்டிய மாலிங்கவின் இறுதி ஓவர் எவ்வாறு இருந்தது?

இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து ……….

ஐ.பி.எல். ஏலத்தின் போது சர்வதேசத்தின் சிறந்த வீரர்களுக்கும், உள்நாட்டில் உள்ள நட்சத்திர வீரர்களுக்கும் கோடிகளை அள்ளிக்கொடுக்க அணிகள் மறுக்கவில்லை. இவ்வாறு அணிகளால் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் சிலர் சோபித்திருந்த போதும், சிலர் சோபிக்க தவறியிருந்தனர்.

அதேநேரம், அணிகளால் குறைந்த தொகைக்கு வாங்கப்பட்ட எதிர்பார்க்கப்படாத சில வீரர்கள் அதிசிறந்த சிறமையை வெளிப்படுத்தியதுடன், தங்களுக்கு வழங்கப்பட்ட தொகைக்கு சிறந்த பெறுமதியை வழங்கியிருந்தனர். இவ்வாறு, இம்முறை ஐ.பி.எல். தொடரில் குறைந்த தொகைக்கு வாங்கப்பட்ட பெறுமதியான சில வீரர்கள் தொடர்பில் இங்கே பார்க்கலாம்

பெறுமதி மிக்க வீரர்கள் – 2019

ஜொனி பெயார்ஸ்டோவ் (சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் – 2.2 கோடி ரூபாய்)

இம்முறை நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் 2.2 கோடிக்கு வாங்கப்பட்ட ஜொனி பெயார்ஸ்டோவ், சன்ரைஸர்ஸ் அணி ப்ளே-ஓஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

IPLT20.COM

இவர் 10 போட்டிகளில் ஆடி 55.62 என்ற சராசரியில் 445 ஓட்டங்களை குவித்ததுடன், அன்ரூ ரசல், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் ஆகியோருக்கு அடுத்தப்படியாக 157.4 என்ற ஓட்ட வேகத்தையும் கொண்டுள்ளார். அதுமாத்திரமின்றி டேவிட் வோர்னருடன் ஆரம்ப துடுப்பாட்ட ஜோடியாக களமிறங்கிய இவர், 791 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துள்ளதுடன், இதில் நான்கு சதம் மற்றும் 3 அரைச்சதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாலிங்கவின் சாகசத்தால் மீண்டும் சம்பியனாகிய மும்பை

ஐ.பி.எல். தொடரில் இன்று (12) நடைபெற்ற ………..

லசித் மாலிங்க (மும்பை இந்தியன்ஸ் – 2 கோடி ரூபாய்)

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2 கோடிக்கு வாங்கப்பட்டிருந்தார். ஐ.பி.எல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக உள்ள மாலிங்க இம்முறை எதிரணிகளுக்கு ஓட்டங்களை வழங்கியிருந்தார்.

IPLT20.COM

எனினும், அவரது அனுபவத்தின் ஊடாக முக்கியமான தருணங்களில் மும்பை அணிக்கு விக்கெட்டுகளை வீழ்த்திக்கொடுத்து அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்தார். முக்கியமாக இறுதிப் போட்டியில் 9 ஓட்டங்கள் மாத்திரம் தோவைப்பட்ட நேரத்தில் இறுதி ஓவரை வீசி, அணி சம்பியனாக முக்கிய காரணமாக மாலிங்க இருந்தார். இவர், 12 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இசாந்த் சர்மா (டெல்லி கெப்பிட்டல்ஸ் – ஒரு கோடி)

இந்திய அணியின் டெஸ்ட் பந்து வீச்சாளராக இருந்த இசாந்த் சர்மா கடந்த முறை (2018) ஏலத்தில் வாங்கப்படாவிட்டாலும், இம்முறை டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்காக ஒரு கோடிக்கு வாங்கப்பட்டார்.

இவர், டெஸ்ட் பந்து வீச்சு யுத்தினை T20 போட்டியில் பயன்படுத்தி முதல் ஆறு ஓவர்களில் விக்கெட்டுகளை சரித்தார். மொத்தமாக 13 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்திய இவர், முதல் 6 ஓவர்களில் 06.85 என்ற பந்துவீச்சு பிரதியுடன் 8 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 75

பிளாஸ்டிக் மீள்சுழற்சியினால்; தயாரிக்கப்பட்ட………

இவர் முதல் 6 ஓவர்களில் அணியின் பந்து வீச்சை பலப்படுத்திய நிலையில், ரபாடா இறுதி ஓவர்களில் அணியின் பந்து வீச்சை பலப்படுத்தி அணிக்கு பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IPLT20.COM

கீமோ போல் (டெல்லி கெப்பிட்டல்ஸ் – 50 இலட்சம்)

மேற்கிந்திய தீவுகள் அணியின் கீமோ போல் டெல்லி அணியின் பந்து வீச்சை பலப்படுத்தியதில் முக்கிய வீரராக உள்ளார். இவர், மொத்தமாக 8 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், முக்கியமான போட்டிகளில் அணிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தார்.

குறிப்பாக, ஹைதராபாாத் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், வெற்றிக்கான பௌண்டரியையும் விளாசி அணியை இரண்டாவது குவாலிபையர் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

IPLT20.COM

ரியான் பராக் (ராஜஸ்தான் றோயல்ஸ் – 20 இலட்சம்)

ராஜஸ்தான் அணியில் விளையாடிய 17 வயதான இளம் சகலதுறை வீரர் ரியான் பராக் அந்த அணியை இக்கட்டான போட்டிகளில் இருந்து மீட்டெடுத்திருந்தார். குறிப்பாக, மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 43 ஓட்டங்களை பெற்று வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

IPLT20.COM

இதேவேளை, மொத்தமாக 32 என்ற ஓட்ட சராசரியில் 7 போட்டிகளில் 160 ஓட்டங்களை விளாசிய இவர், 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். அத்துடன், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 50 ஓட்டங்களை விளாசிய இவர், குறைந்த வயதில் ஐ.பி.எல். அரைச்சதம் பெற்ற வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் மும்பையுடன் மோதவுள்ள சென்னை

ஐ.பி.எல். தொடரில் நேற்று (10) நடைபெற்ற சென்னை………..

முருகன் அஸ்வின் (கிங்ஸ் லெவன் பஞ்சாப் – 20 இலட்சம்)

தமிழ்நாடு வீரரான முருகன் அஸ்வின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக 20 இலட்சத்திற்கு வாங்கப்பட்டிருந்தார். இவர், விளையாடிய 10 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் கைப்பற்றியிருந்தார்.

IPLT20.COM

ஆனாலும், வருண் சக்கரவர்த்தி மற்றும் முஜிப் உர் ரஹ்மான் ஆகிய முன்னணி வீரர்கள் உபாதை காரணமாக விளையாடாத நிலையில், எதிரணி துடுப்பாட்ட வீரர்களுக்கு தனது பலவிதமான பந்து வீச்சு மாற்றங்கள் ஊடாக நெருக்கடியை வழங்கினார். விக்கெட்டுகள் வீழ்த்தியதை விடவும், எதிரணியின் ஓட்டங்களை கட்டுப்படுத்துவதில் முருகன் அஸ்வின் முக்கிய பங்கினை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<