CPL தொடரில் விளையாடவுள்ள வனிந்து ஹஸரங்க!

Caribbean Premier League 2022

400

இலங்கை அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்க கரீபியன் பிரீமியர் லீக்கில் (CPL) சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள கரீபியன் பிரீமியர் லீக்கில் ஏற்கனவே இலங்கை அணியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

>> ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடவுள்ள மஹீஷ் தீக்ஷன

ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷன மற்றும் அனுபவ சகலதுறை வீரர் சீகுகே பிரசன்ன ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர்.

இந்த வீரர்கள் வரிசையில் சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணியானது, T20 கிரிக்கெட்டின் முன்னணி சுழல் பந்துவீச்சாளரான வனிந்து ஹஸரங்கவை தங்களுடைய அணியில் இணைத்துள்ளது.

வனிந்து ஹஸரங்க CPL தொடரில் முழுமையாக விளையாடமாட்டார் என்பதுடன், ஆரம்ப போட்டிகளில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் பாகிஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சாளர் குவைஸ் அக்ரம் அணியில் இணைந்துக்கொண்டு விளையாடுவார் எனவும் அணி நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.

வனிந்து ஹஸரங்கவுடன் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஏபி டி வில்லியர்ஸ் பாணியில் துடுப்பெடுத்தாடும் டெவால்ட் பிரேவிஸ், டுவைன் பிரிட்டோரியர்ஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் சுழல் பந்துவீச்சாளர் இஷாருல்ஹக் நவீட் ஆகியோரும் நடப்பு சம்பியனாக பெட்ரியோட்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்த பருவகாலத்துக்கான CPL தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் 31ம் திகதி முதல் ஒக்டோபர் முதலாம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<