20 வயதின்கீழ் SAFF சம்பியன்ஷிப்; இலங்கை குழாம் அறிவிப்பு

Under 20 SAFF Championship

626
Sri Lanka under 20 squad

இம்மாதம் 25ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகவுள்ள 20 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான தெற்காசிய கால்பந்து சம்மேளன (SAFF) சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கான இலங்கை இளையோர் குழாம் வியாழக்கிழமை (21) அறிவிக்கப்பட்டுள்ளது.

20 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான SAFF சம்பியன்ஷிப் போட்டித் தொடர் இம்மாதம் 25ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 5ஆம் திகதி வரையில் இந்தியாவின் புவனேஷ்வரில் உள்ள காலிங்க அரங்கத்தில் இடம்பெறவுள்ளது.

இம்முறை தொடரை நடத்தும் இந்தியாவுடன் இலங்கை, மாலைதீவுகள், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் இளையோர் அணிகள் மோதவுள்ளன. தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் லீக் முறையில் இடம்பெறவுள்ளதுடன், அனைத்து அணிகளும் ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோதவுள்ளன.

இந்நிலையில் இந்த போட்டித் தொடருக்கான தயார்படுத்தலாக இலங்கை கால்பந்து சம்மேளனம் கடந்த மாத இறுதியில் வீரர்களுக்கான தெரிவை நடத்தி அதன் பின்னர் தெரிவு செய்யப்பட்ட வீரர்களுக்கு தொடர்ந்து பயிற்சிகளை வழங்கி வந்தது.

இந்த நிலையிலேயே தற்போது குறித்த தொடருக்கான இலங்கை இளையோர் அணியின் 23 பேர் கொண்ட இறுதி குழாம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக 7 வீரர்கள் இந்த குழாத்தின் காத்திருப்பு வீரர்களாக (Reserve) பெயரிடப்பட்டுள்ளனர்.

இலங்கை குழாம்

தேஷான் துஷ்மிக (தலைவர்), மொஹமட் காலிக் (உப தலைவர்), டெரிக் பெர்னாண்டோ, மொஹமட் சுஹைப், சமுனு கங்கொடஆரச்சி, நிக்சன் அன்டனி, நிமேஷ் திவன்க, மொஹமட் சகீல், மொஹமட் முன்ஷிப், நதீம் அஹமட், மொஹமட் இஹ்சான், மொஹமட் தில்ஹாம், பிராஸ் சீர், மொஹமட் அபீல், பெதும் கிம்ஹான, மொஹமட் ரிகாஸ், சேன் பானுக, மதூஷ சந்தீப, சுதாஹர் ரெனொட் கிளைமர், நவோத் லக்ஷித, சஹீல் சியான், ஜெராட் ஜெரோம், ஜூட் ரோஜன்,

காத்திருப்பு வீரர்கள்

தாருக அசன்த, அருள்நான் செபஸ்டியருள், மொஹமட் தாரிக், சஷின் விமுக்தி, மதுவன்த பெரேரா, எரூஷ ருவன்க, சஜாத் ஜெசூக்

இலங்கை அணியின் போட்டிகள்

  • இலங்கை எதிர் பங்களாதேஷ் – 25ஆம் திகதி
  • இலங்கை எதிர் நேபாளம் – 27ஆம் திகதி
  • இந்தியா எதிர் இலங்கை – 29ஆம் திகதி
  • மாலைதீவுகள் எதிர் இலங்கை – 31ஆம் திகதி

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<