Home Tamil சரிவிலிருந்து மீள முயற்சிக்கும் இலங்கை கிரிக்கெட் அணி

சரிவிலிருந்து மீள முயற்சிக்கும் இலங்கை கிரிக்கெட் அணி

Sri Lanka tour of South Africa 2020-21

547
Photo Courtesy - AFP via Getty Images

சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நிறைவில் இலங்கை கிரிக்கெட் அணி தென்னாபிரிக்க அணிக்கு சிறந்த வெற்றி இலக்கு ஒன்றினை வழங்க சிறப்பான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் காணப்படுகின்றது.  

இரண்டாவது டெஸ்டில் பின்னடைவை சந்தித்துள்ள இலங்கை!

நேற்று (03) ஜொஹன்னஸ்பேர்க் நகரில் தொடங்கியிருந்த இப்போட்டியில் இலங்கை அணியின் மோசமான முதல் இன்னிங்ஸ் (157) துடுப்பாட்டத்தினை அடுத்து, தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 148 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில், டீன் எல்கார் 92 ஓட்டங்களுடனும், ரஸ்ஸி வன் டர் டஸன் 40 ஓட்டங்களுடனும் இருந்தனர்.

இதனையடுத்து போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில், இன்று (04) இலங்கை அணியினை விட 09 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தென்னாபிரிக்க அணி தொடர்ந்தது.

தொடர்ந்து இன்றைய நாளுக்கான போட்டி ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே, தென்னாபிரிக்க அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான டீன் எல்கார் தன்னுடைய 13ஆவது டெஸ்ட் சதத்தினைப் பதிவு செய்தார். மறுமுனையில், ரஸ்ஸி வன் டர் டஸன் உம் அரைச்சதம் கடந்தார். 

இதனால், தென்னாபிரிக்க அணி சிறந்த நிலை ஒன்றுக்குச் செல்லத் தொடங்கியது. எனினும், இத்தருணத்தில் துஷ்மந்த சமீர எல்காரின் விக்கெட்டினை லஹிரு திரிமான்னவின் அபார பிடியெடுப்போடு கைப்பற்றினார். டீன் எல்கார் ஆட்டமிழக்கும் போது 163 பந்துகளில் 22 பௌண்டரிகள் அடங்கலாக 127 ஓட்டங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

எல்காரினை அடுத்து, ரஸ்ஸி வன் டர் டஸன் உம் 67 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை தசுன் ஷானக்கவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரஸ்ஸி வன் டர் டஸனின் விக்கெட்டினை அடுத்து இரண்டாம் நாளின் மதிய போசணத்திற்குப் முன்பாக தென்னாபிரிக்க அணி இரண்டு விக்கெட்டுக்களைப் பறிகொடுத்தது. இந்த விக்கெட்டுக்களாக மாறிய வீரர்களில் பாப் டு பிளேசிஸ் 8 ஓட்டங்களையும், தென்னாபிரிக்க அணித்தலைவர் குயின்டன் டி கொக் 10 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். 

தொடர்ந்து போட்டியின் மதிய போசண இடைவேளையினை அடுத்து இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர்களான விஷ்வ பெர்னாந்து மற்றும் அசித்த பெர்னாந்து ஆகியோரினை எதிர்கொள்வதில் சிக்கல்களை சந்தித்த தென்னாபிரிக்க அணி இரண்டாம் நாளின் தேநீர் இடைவேளைக்கு முன்னதாக 75.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 302 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

இலங்கை வந்துள்ள மொயீன் அலிக்கு கொவிட்-19 தொற்று! 

தென்னாபிரிக்க அணியின் மத்தியவரிசை துடுப்பாட்டவீரர்களில் டெம்பா பெவுமா 19 ஓட்டங்களுடன் அதிகபட்ச ஓட்டங்களைப் பதிவு செய்திருந்தார்.

அதேநேரம், இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் விஷ்வ பெர்னாந்து 101 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி டெஸ்ட் போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சுப் பெறுதியினைப் பதிய, அசித்த பெர்னாந்து மற்றும் தசுன் ஷானக்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தனர். 

பின்னர், தென்னாபிரிக்க வீரர்களை விட 145 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களாக திமுத் கருணாரத்ன மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோர் களம் வந்தனர். 

இந்த வீரர்களில் குசல் ஜனித் பெரேரா வெறும் ஒரு ஓட்டத்தினை மாத்திரம் பெற்ற நிலையில் இலங்கையின் முதல் விக்கெட்டாக மாறினார். இதனால், தொடக்கத்திலேயே இலங்கை அணிக்கு தடுமாற்றம் ஏற்பட்டது. 

தொடர்ந்து, களம் வந்த லஹிரு திரிமான்ன அணித்தலைவர் திமுத் கருணாரத்னவுடன் இணைந்து பொறுமையாக துடுப்பாடினார். இதனால், இரண்டாம் நாளின் தேநீர் இடைவேளையினை மேலதிக விக்கெட்டுக்கள் எதனையும் பறிகொடுக்காமல் இலங்கை அணி அடைந்தது. 

தேநீர் இடைவேளையினை அடுத்து போட்டியின் மூன்றாம் இடைவெளியில் திமுத் கருணாரத்ன – லஹிரு திரிமான்ன ஜோடி இரண்டாம் விக்கெட்டுக்காக 84 ஓட்டங்களைப் பகிர்ந்தது. இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட்டாக மாறிய லஹிரு திரிமான்ன 31 ஓட்டங்களைப் பெற்ற வேளை லுங்கி ன்கிடியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். திரிமான்னவினை அடுத்து, புதிய துடுப்பாட்டவீரராக வந்த குசல் மெண்டிஸ் தனது முதல் இன்னிங்ஸ் போன்று இம்முறையும் ஓட்டங்கள் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தார். மெண்டிஸினை அடுத்து, புதிய துடுப்பாட்டவீரராக வந்த மினோத் பானுக்கவும் சோபிக்கவில்லை. வெறும் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். இதனால், இலங்கை அணி 109 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து மீண்டும் தடுமாற்றத்துக்கு உள்ளானது. 

எனினும், இலங்கை அணியின் தலைவர் டிமுத் கருணாரத்ன, நிரோஷன் டிக்வெல்லவுடன் இணைந்து மிகவும் பொறுமையான முறையில் தனது தரப்பின் ஓட்டங்களை உயர்த்தினார். திமுத் கருணாரத்ன இதில், தன்னுடைய 25ஆவது டெஸ்ட் அரைச்சதத்தினையும் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

யாரை நாளை இலங்கை டெஸ்ட் அணி களமிறக்கும்?

தொடர்ந்து, இந்த இரண்டு வீரர்களின் துடுப்பாட்ட உதவியுடன் தென்னாபிரிக்காவினை விட பின்தங்கியிருந்த ஓட்டங்களை கடந்த இலங்கை அணி போட்டியின் இரண்டாம் நாள் நிறைவில், தமது இரண்டாம் இன்னிங்ஸிற்காக 39 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது. 

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் களத்தில் நிற்கும் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 91 ஓட்டங்களுடன் காணப்பட, நிரோஷன் டிக்வெல்ல 18 ஓட்டங்களுடன் காணப்படுகின்றார். 

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு சார்பில் லுங்கி ன்கிடி 3 விக்கெட்டுக்களையும், என்ட்ரிஜ் நோர்கியா ஒரு விக்கெட்டினையும் சாய்த்திருக்கின்றனர். 

தற்போது தென்னாபிரிக்காவினை விட 5 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருக்கும் இலங்கை அணி, போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் தமக்கு எஞ்சியிருக்கும் விக்கெட்டுக்களை வைத்து தென்னாபிரிக்க அணிக்கு எதிராக சிறந்த முன்னிலை ஒன்றினை பெற வேண்டிய நிலையில் காணப்படுகின்றது. 

ஸ்கோர் சுருக்கம்

Result


South Africa
302/10 (75.4) & 67/0 (13.2)

Sri Lanka
157/10 (40.3) & 211/10 (56.5)

Batsmen R B 4s 6s SR
Dimuth Karunarathne c Quinton de Kock b Anrich Nortje 2 32 0 0 6.25
Kusal Perera c Aiden Markram b Wiaan Mulder 60 67 11 0 89.55
Lahiru Thirimanne c Faf du Plessis b Wiaan Mulder 17 30 3 0 56.67
Kusal Mendis c Rassie van der Dussen b Wiaan Mulder 0 4 0 0 0.00
Minod Bhanuka c Rassie van der Dussen b Anrich Nortje 5 10 1 0 50.00
Niroshan Dickwella c Quinton de Kock b Anrich Nortje 7 10 1 0 70.00
Dasun Shanaka c Quinton de Kock b Anrich Nortje 4 17 0 0 23.53
Wanindu Hasaranga c Quinton de Kock b Lutho Sipamla 29 27 5 0 107.41
Dushmantha Chameera c Quinton de Kock b Anrich Nortje 22 29 4 0 75.86
Vishwa Fernando not out 2 11 0 0 18.18
Asitha Fernando b Anrich Nortje 4 6 1 0 66.67


Extras 5 (b 0 , lb 5 , nb 0, w 0, pen 0)
Total 157/10 (40.3 Overs, RR: 3.88)
Bowling O M R W Econ
Lungi Ngidi 10 3 44 0 4.40
Anrich Nortje 14.3 1 56 6 3.92
Lutho Sipamla 9 3 27 1 3.00
Wiaan Mulder 7 3 25 3 3.57
Batsmen R B 4s 6s SR
Dean Elgar c Lahiru Thirimanne b Dushmantha Chameera 127 163 22 0 77.91
Aiden Markram c Kusal Mendis b Asitha Fernando 5 21 0 0 23.81
Rassie van der Dussen c Niroshan Dickwella b Dasun Shanaka 67 127 12 0 52.76
Quinton de Kock c Kusal Mendis b Vishwa Fernando 10 20 1 0 50.00
Faf du Plessis c Niroshan Dickwella b Dasun Shanaka 8 15 1 0 53.33
Temba Bavuma lbw b Vishwa Fernando 19 30 3 1 63.33
Wiaan Mulder lbw b Vishwa Fernando 7 17 1 0 41.18
Keshav Maharaj c Niroshan Dickwella b Asitha Fernando 2 8 0 0 25.00
Anrich Nortje c Kusal Mendis b Vishwa Fernando 13 16 2 0 81.25
Lutho Sipamla c Dasun Shanaka b Vishwa Fernando 5 19 1 0 26.32
Lungi Ngidi not out 14 18 3 0 77.78


Extras 25 (b 8 , lb 14 , nb 0, w 3, pen 0)
Total 302/10 (75.4 Overs, RR: 3.99)
Bowling O M R W Econ
Vishwa Fernando 23.4 0 101 5 4.32
Asitha Fernando 19 5 61 2 3.21
Dushmantha Chameera 14 1 53 1 3.79
Dasun Shanaka 15 4 42 2 2.80
Wanindu Hasaranga 4 0 23 0 5.75
Batsmen R B 4s 6s SR
Dimuth Karunarathne c Wiaan Mulder b Anrich Nortje 103 128 19 0 80.47
Kusal Perera b Lungi Ngidi 1 7 0 0 14.29
Lahiru Thirimanne c Quinton de Kock b Lungi Ngidi 31 57 7 0 54.39
Kusal Mendis c Quinton de Kock b Lungi Ngidi 0 1 0 0 0.00
Minod Bhanuka c Keshav Maharaj b Anrich Nortje 1 7 0 0 14.29
Niroshan Dickwella c Temba Bavuma b Lungi Ngidi 36 68 6 0 52.94
Dasun Shanaka c Lutho Sipamla b Wiaan Mulder 8 24 1 0 33.33
Wanindu Hasaranga b Lutho Sipamla 16 32 2 0 50.00
Dushmantha Chameera c Quinton de Kock b Lutho Sipamla 0 10 0 0 0.00
Vishwa Fernando not out 1 7 0 0 14.29
Asitha Fernando b Lutho Sipamla 0 2 0 0 0.00


Extras 14 (b 9 , lb 2 , nb 2, w 1, pen 0)
Total 211/10 (56.5 Overs, RR: 3.71)
Bowling O M R W Econ
Lungi Ngidi 15 5 44 4 2.93
Anrich Nortje 19 2 64 2 3.37
Wiaan Mulder 13 3 52 1 4.00
Lutho Sipamla 9.5 1 39 3 4.11


Batsmen R B 4s 6s SR
Dean Elgar not out 31 27 5 0 114.81
Aiden Markram not out 36 53 4 0 67.92


Extras 0 (b 0 , lb 0 , nb 0, w 0, pen 0)
Total 67/0 (13.2 Overs, RR: 5.03)
Bowling O M R W Econ
Vishwa Fernando 4 0 23 0 5.75
Asitha Fernando 4 1 20 0 5.00
Wanindu Hasaranga 2.2 0 16 0 7.27
Dasun Shanaka 3 1 8 0 2.67



போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<