இலங்கை வந்துள்ள மொயீன் அலிக்கு கொவிட்-19 தொற்று! 

159
 
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் மொயீன் அலி,கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர்கள் நேற்றைய தினம் (03) ஹம்பாந்தோட்டை சர்வதேச விமானநிலையத்துக்கு வருகைத்தந்த நிலையில், அணி வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில், மொயீன் அலிக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.  >>2020இல் விளையாட்டு ரசிகர்களுக்கு கிடைத்த மறக்கமுடியாத தருணங்கள்!<< கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை அரசாங்கத்தின் தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு ஏற்ப, எதிர்வரும் 10 நாட்களுக்கு, மொயீன் அலி சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்படுவார் என்ற செய்தியும் வெளியிடப்பட்டுள்ளது.   மொயீன் அலிக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அவருடன் நெருங்கி பழகிய மற்றுமொரு சகலதுறை வீரரான க்ரிஸ் வோர்க்ஸிற்கும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.   இதன்காரணமாக க்ரிஸ் வோர்க்ஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்படும்வரை, கண்கானிக்கப்படுவார் எனவும் இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.  இங்கிலாந்து அணியின் உறுப்பினர்களுக்கான இரண்டாவது பி.சி.ஆர். பரிசோதனை நாளைய தினம் (05) மேற்கொள்ளப்படவுள்ளதுடன், குறித்த பரிசோதனையின் பின்னர், இங்கிலாந்து வீரர்கள் நாளை மறுதினம் (06) பயிற்சிகளை ஆரம்பிப்பர் என தற்போதைய நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இரண்டாவது பி.சி.ஆர்.பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையில், பயிற்சிகளை ஆரம்பிப்பது தொடர்பிலான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான முதல் டெஸ்ட் போட்டி, 14ம் திகதி ஆரம்பிக்கவுள்ளதுடன், இரண்டாவது டெஸ்ட் போட்டி, ஜனவரி 22ம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<  

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register