Home Tamil இலங்கையுடனான ஒருநாள் தொடரை தக்கவைத்த பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணி

இலங்கையுடனான ஒருநாள் தொடரை தக்கவைத்த பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணி

1887
Image Courtesy : tigercricket.com.bd

சுற்றுலா இலங்கை வளர்ந்துவரும் அணிக்கும் பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி இன்று (21) கிரிரா ஷிக்கா புரோடிஸ்தான் மைதானத்தில் நடைபெற்றது. 

முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை வளர்ந்துவரும் அணி அபார வெற்றியீட்டிய நிலையில் இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை வளர்ந்துவரும் அணி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் முதல் விக்கெட் ஆறாவது ஓவரில் வீழ்த்தப்பட்டது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய சந்துன் வீரக்கொடி 7 ஓட்டங்களுடன் ஏமாற்றமளித்தார்.

வனிந்து ஹசரங்க சகலதுறையில் அசத்த இலங்கை வளர்ந்துவரும் அணிக்கு அபார வெற்றி

இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியானது இருதரப்பு….

இரண்டாவது விக்கெட்டுக்காக இணைந்த பெத்தும் நிஸ்ஸங்க – அணித்தலைவர் சரித் அசலங்க ஜோடி 66 ஓட்டங்களை பகிர்ந்துகொண்ட வேளையில் அரைச்சதம் கடந்த பெத்தும் நிஸ்ஸங்க 55 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய சம்மு அஷான் அதிரடியாக 2 சிக்ஸர்கள், 1 பௌண்டரி அடங்கலாக 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

நிதானமாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் சரித் அசலங்க 45 ஓட்டங்களுடன் அடுத்த ஓவரில் அரங்கம் திரும்பினார். பின்னர் கமிந்து மெண்டிஸுடன் இணைந்த வனிந்து ஹசரங்க வெறும் 5 ஓட்டங்களுடன் ஏமாற்றமளித்தார். அதன் பின்னர் மெண்டிஸுடன் இணைந்த அஷேன் பண்டாரவும் 12 ஓட்டங்களுடன் ஏமாற்றமளித்தார்.

அதன் பின்னர் ஏழாவது விக்கெட்டுக்காக மெண்டிசஸுடன் இணைந்த ஜெஹான் டானியல் சிறப்பாக துடுப்பெடுத்தாட இருவரும் இணைப்பாட்டமாக 57 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். இந்நிலையில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய கமிந்து மெண்டிஸ் 65 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஆடுகளம் நுழைந்த ஷிரான் பெர்ணான்டோ, அமில அபொன்ஸோ ஆகியோர் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். 

இறுதியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஜெஹான் டானியலும் ஆட்டமிழக்க இலங்கை வளர்ந்துவரும் அணி 49.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 273 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணியின் பந்துவீச்சில் சபிகுல் இஸ்லாம் 3 விக்கெட்டுக்களையும், நயீம் ஹசன் 2 விக்கெட்டுக்களையும், சுமொன் கான், அமினுல் இஸ்லாம், யாஸின் அறபாத் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட் வீதம் வீழ்த்தினர். 

இந்திய வீரர் ஸ்ரீசாந்தின் வாழ்நாள் தடை 7 வருடங்களாக குறைப்பு

சூதாட்ட சர்ச்சையில் சிக்கி வாழ்நாள் தடைக்குள்ளாகிய……

274 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணியின் முதல் விக்கெட் 4 ஆவது ஓவரிலேயே வீழ்த்தப்பட்டது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மொஹமட் நயிம் 5 ஓட்டங்களுடன் ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக 52 ஓட்டங்கள் பெறப்பட்ட வேளையில் மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சபிப் ஹஸ்ஸான் 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

அதன் பின்னர் மூன்றாவது விக்கெட்டுக்காக இணைந்த அணித்தலைவர் நஜ்முல் ஹொஸைன் சான்டோ – யாஸிர் அலி ஜோடி இணைப்பாட்டமாக 120 ஓட்டங்களை பகிர்ந்து அணிக்கு வலுச்சேர்த்தனர். இந்நிலையில் 77 ஓட்டங்களுடன் அணித்தலைவர் நஜ்முல் ஹொஸைன் சான்டோ ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அபாரமாக துடுப்பெடுத்தாடிய யாஸிர் அலி 5 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகளுடன் 85 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். 

அதன் பின்னர் அடுத்த ஓவரில் 5 ஆவது விக்கெட் வீழ்த்தப்பட்டது. யாஸிர் அலியுடன் இணைப்பாட்டமென்றை வழங்கிய அபிப் ஹொஸைன் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். இறுதி ஓவரில் இரண்டு விக்கெட்டுக்கள் மீதமிருக்க அணியின் வெற்றிக்கு 12 ஓட்டங்கள் தேவைப்பட்டன.

இறுதி ஓவரை ஜெஹான் டானியல் வீச முதல் மூன்று பந்துகளுக்குள்  ஒரு பந்துவீச்சாளரான யாஸின் அறபாத் இரண்டு சிக்ஸர்களை விளாசி பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணியின் வெற்றியை மூன்று பந்துகள் மீதமிருக்க இரண்டு விக்கெட்டுக்களினால் உறுதி செய்தார். இவ்வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1 – 1 என்ற அடிப்படையில் சமநிலை பெற்றுள்ளது. 

ரஷீட் கான் தலைமையில் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது அடுத்த மாதம்….

போட்டியின் ஆட்ட நாயகனாக துடுப்பாட்டத்தில் 85 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட பங்களாதேஷ் அணியின் யாஸிர் அலி தெரிவானார். இரு அணிகளுக்கும் இடையிலான தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (24) நடைபெறவுள்ளது.   

ஸ்கோர் விபரம்

Result


Sri Lanka Emerging Team
273/10 (49.4)

Bangladesh Emerging Team
274/8 (49.3)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka lbw b Aminul Islam 55 57 8 0 96.49
Sandun Weerakkody b Nayeem Hasan 7 15 1 0 46.67
Charith Asalanka lbw b Shafiqul Islam 45 45 5 0 100.00
Sammu Ashan c Jaker Ali b Mohammad Naim 21 15 1 2 140.00
Kamindu Mendis lbw b Shafiqul Islam 65 81 5 0 80.25
Wanindu Hasaranga c Najmul Hossain Shanto b Shafiqul Islam 5 7 1 0 71.43
Ashen Bandara lbw b Yeasin Arafat 12 24 0 0 50.00
Jehan Daniel b Sumon Khan 43 41 4 0 104.88
Shiran Fernando run out (Sumon Khan) 4 7 0 0 57.14
Amila Aponso run out (Afif Hossain) 5 5 0 0 100.00
Nuwan Thushara not out 1 1 0 0 100.00


Extras 10 (b 4 , lb 0 , nb 0, w 6, pen 0)
Total 273/10 (49.4 Overs, RR: 5.5)
Fall of Wickets 1-31 (5.2) Sandun Weerakkody, 2-97 (16.6) Pathum Nissanka, 3-130 (21.1) Sammu Ashan, 4-137 (22.6) Charith Asalanka, 5-154 (24.4) Wanindu Hasaranga, 6-184 (33.6) Ashen Bandara, 7-241 (44.6) Kamindu Mendis, 8-254 (47.1) Shiran Fernando, 9-272 (49.2) Amila Aponso, 10-273 (49.4) Jehan Daniel,

Bowling O M R W Econ
Shafiqul Islam 10 0 51 3 5.10
Nayeem Hasan 10 0 35 2 3.50
Sumon Khan 6.4 0 50 1 7.81
Afif Hossain 3 0 19 0 6.33
Aminul Islam 10 0 53 1 5.30
Yeasin Arafat 10 0 61 1 6.10


Batsmen R B 4s 6s SR
Saif Hassan c Sandun Weerakkody b Jehan Daniel 27 49 4 0 55.10
Mohammad Naim run out (Ashen Bandara) 5 8 1 0 62.50
Najmul Hossain Shanto c Ashen Bandara b Shiran Fernando 77 88 9 1 87.50
Yasir Ali c Ashen Bandara b Wanindu Hasaranga 85 93 3 5 91.40
Afif Hossain c & b Jehan Daniel 18 23 2 0 78.26
Aminul Islam run out (Wanindu Hasaranga) 8 10 2 0 80.00
Jaker Ali lbw Shiran Fernando b 11 14 1 0 78.57
Nayeem Hasan not out 9 8 0 0 112.50
Sumon Khan lbw Amila Aponso b 5 3 1 0 166.67
Yeasin Arafat not out 12 3 0 2 400.00


Extras 17 (b 0 , lb 0 , nb 2, w 15, pen 0)
Total 274/8 (49.3 Overs, RR: 5.54)
Fall of Wickets 1-12 (3.2) Mohammad Naim, 2-64 (14.4) Saif Hassan, 3-184 (35.6) Najmul Hossain Shanto, 4-227 (42.4) Yasir Ali, 5-233 (43.5) Afif Hossain, 6-244 (46.2) Aminul Islam, 7-254 (47.6) Jaker Ali, 8-261 (48.5) Sumon Khan,

Bowling O M R W Econ
Shiran Fernando 10 1 30 2 3.00
Nuwan Thushara 4 0 37 0 9.25
Amila Aponso 10 0 74 1 7.40
Jehan Daniel 8.3 0 46 2 5.54
Wanindu Hasaranga 10 0 54 1 5.40
Kamindu Mendis 7 0 33 0 4.71



முடிவு – பங்களாதேஷ் அணி 2 விக்கெட்டுக்களினால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<