ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது அடுத்த மாதம் பங்களாதேஷூக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு பங்களாதேஷ் கிரிக்கெட் அணியுடன் வரலாற்று டெஸ்ட் தொடர் மற்றும் முத்தரப்பு டி20 சர்வதேச தொடர் போன்ற இரு தொடர்களில் விளையாடவுள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் கடந்த 2017ஆம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்து பெற்றதன் பின்னர் பங்களாதேஷ் அணியை முதல் முறையாக எதிர்த்தாடவுள்ளதன் காரணமாக இப்போட்டியானது வரலாற்று போட்டியாக கருதப்படுகின்றது.
இந்திய ஏ அணியில் இடம்பிடித்த 2 தமிழக வீரர்கள்
தென்னாபிரிக்க ஏ அணியானது இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு…
இந்நிலையில் குறித்த இரு தொடர்களுக்குமான ஆப்கானிஸ்தான் அணியின் இரு குழாம்கள் பல மாற்றங்களுடன் இன்று (20) அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.
ஒற்றை டெஸ்ட் போட்டிக்கான குழாம்
அண்மையில் நிறைவுக்குவந்த உலகக்கிண்ண தொடரின் பின்னர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் பல அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த அடிப்படையில் அணித்தலைமையிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி தற்போது புதிய அணித்தலைவராக சகலதுறை வீரர் ரஷீட் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணியானது டெஸ்ட் அந்தஸ்து கிடைக்கப்பெற்றதிலிருந்து இரண்டு போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ளது. அதில் இந்தியாவுடன் தோல்வியையும், அயர்லாந்துடன் வெற்றியையும் பதிவு செய்துள்ளது. இந்நிலையில் தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்த்தாடவுள்ளது.
இறுதியாக அயர்லாந்து அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஐந்து வீரர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ள குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையினால் ஒரு வருட தடைக்கு முகங்கொடுத்துள்ள விக்கெட் காப்பாளர் மொஹமட் ஷெஹ்சாட், வேகப்பந்துவீச்சாளர் வபாதர் மொமன்ட், கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடிய வகார் சலாம்கில் ஆகியோருடன் குழாமில் இடம்பெற்றிருந்த நாஸிர் ஜமால், ஷரபுடீன் அஷ்ரப் ஆகியோர் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளனர்.
ஒரு வருட தடைக்குள்ளான மொஹமட் ஷெஹ்சாத்
அண்மையில் நிறைவுக்கு வந்த உலகக்கிண்ண தொடரிலிருந்து உபாதை காரணமாக…
ஆப்கானிஸ்தான் அணிக்காக 2009ஆம் ஆண்டு சர்வதேச அறிமுகம் பெற்ற 32 வயதுடைய வேகப்பந்துவீச்சாளரான சபூர் சத்ரான் முதல் முறையாக டெஸ்ட் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார். அதேபோன்று கன்னி ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள சுழற்பந்துவீச்சாளர் ஸாஹிர் கான், வேகப்பந்துவீச்சாளர் செயித் அஹமட் ஷிர்ஷாட், 17 வயதுடைய இளம் துடுப்பாட்ட வீரர் இப்ராஹிம் சத்ரான், 19 வயதுடைய இளம் சுழல் பந்துவீச்சாளர் கைஸ் அஹமட் ஆகியோர் முதல் முறையாக டெஸ்ட் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக இந்திய அணியுடன் விளையாடிய டெஸ்ட் போட்டியில் டெஸ்ட் அறிமுகம் பெற்ற விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் அப்ஸார் ஷஷாய் மீண்டும் டெஸ்ட் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஒற்றை டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட குழாமில் முஹம்மட் நபி, அஸ்ஹர் அப்கான் ஆகிய அனுபவ வீரர்களுடன், ரஹ்மத் ஷாஹ், ஹஸ்மதுல்லாஹ் சஹிடி ஆகியோரும் உள்வாங்கப்பட்டுள்ளனர். குறித்த ஒற்றை டெஸ்ட் போட்டியானது அடுத்த மாதம் 5 – 9ஆம் திகதி வரை சிட்டகொங்கில் நடைபெறவுள்ளது.
டெஸ்ட் போட்டிக்கான குழாம்
ரஷீட் கான் (அணித்தலைவர்), அஸ்ஹர் அப்கான், முஹம்மட் நபி, இஹ்ஸானுல்லாஹ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷாஹ், ஹஸ்மதுல்லாஹ் சஹிடி, இக்ராம் அலிகில், ஸாஹிர் கான், ஜாவிட் அஹமதி, செயித் அஹமட் ஷிர்;ஷாட், யாமின் அஹமட்ஷாய், அப்ஸார் ஷஷாய், கைஸ் அஹமட், சபூர் சத்ரான்
மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஸ்டீவ் ஸ்மித் நீக்கம்
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில்…
முத்தரப்பு டி20 சர்வதேச தொடருக்கான குழாம்
பங்களாதேஷ் கிரிக்கெட் சபையானது ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடரின் பின்னர் முத்தரப்பு டி20 சர்வதேச தொடரை ஏற்பாடு செய்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் பல்வேறு காரணங்களுக்காக கிரிக்கெட் விளையாட்டிலிருந்து இடைக்கால தடைக்கு உள்ளான ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியானது தற்போது முத்தரப்பு டி20 தொடரில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடன் பங்கேற்கவுள்ளது.
அந்த அடிப்படையில் குறித்த முத்தரப்பு தொடருக்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையானது 17 பேர் கொண்ட குழாமினை வெளியிட்டுள்ளது. ஆசிய கிண்ண டி20 தொடர் மற்றும் ஐ.சி.சி டி20 உலகக்கிண்ண தொடருக்காக அணியை தயார்படுத்தும் நோக்கிலேயே இளம் வீரர்களை உள்வாங்கி இவ்வாறு குழாமை பெயரிட்டுள்ளது.
இறுதியாக அயர்லாந்து அணியுடன் நடைபெற்ற டி20 சர்வதேச போட்டியில் விளையாடிய வீரர்களுள் உஸ்மான் கானி மற்றும் அனுபவ வீரர் ஸமியுல்லாஹ் ஷின்வாரி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதுடன், இறுதியாக குழாமில் இடம்பெற்ற ஸியாஉர் ரஹ்மான், ஸாஹிர் கான் ஆகியோரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடந்த உலகக்கிண்ண தொடரின் போது ஆப்கானிஸ்தான் அணிக்கு தலைமை தாங்கிய குல்பதின் நைப் ஒன்றரை வருட இடைவெளியின் பின்னர் மீண்டும் டி20 சர்வதேச போட்டியில் விளையாடும் அடிப்படையில் குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளார். மேலும் நவீன் உல் ஹக், சஹிதுல்லாஹ் கமால், பஸால் நியாஸாய் மற்றும் 17 வயது வீரர் ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் ஆகிய வீரர்கள் டி20 சர்வதேச அறிமுகம் பெறும் அடிப்படையில் குழாமில் பெயரிடப்பட்டுள்ளனர்.
சன்ரைஸஸ் அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக ப்ரெட் ஹெடின் நியமனம்
கிரிக்கெட் உலகில் நடைபெறும் பிரபல்யமான லீக் தொடர்களில் ஒன்றான இந்தியன்…
முக்கோண டி20 தொடருக்கான குழாம்
ரஷீட் கான் (அணித்தலைவர்), அஸ்ஹர் அப்கான், முஹம்மட் நபி, ஹஸ்ரதுல்லாஹ் ஷஷாய், நஜீப் தராகய், முஜீப் உர் ரஹ்மான், ஸரபுடீன் அஸ்ரப், நஜீப் ஸத்ரான், சஹிதுல்லாஹ் கமால், கரிம் ஜனாத், குல்பதின் நைப், பரீட் அஹமட், ஸபிகுல்லாஹ் ஸபாக், பஸால் நியாஸாய், தவ்லத் சத்ரான், நவீன் உல் ஹக், ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ்
பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பங்குபற்றும் 7 போட்டிகள் கொண்ட முத்தரப்பு டி20 சர்வதேச தொடரானது அடுத்த மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. குறித்த முத்தரப்பு தொடர் இரு மைதானங்களில் நடைபெறவுள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<