இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று நாள் பயிற்சிப் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் (SLC XI) குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள SLC XI குழாத்தின் தலைவராக இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய சொனால் தினுஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
>>LPL 2026 தொடர்; முதல் இறுதிப் போட்டிக்கு தெரிவான ஜப்னா கிங்ஸ்<<
இவருடன் நிஷான் மதுஷ்க, பவன் ரத்நாயக்க, லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ, இசித விஜேசுந்தர மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட தேசிய அணி வீரர்களுடன் ரவிந்து ரஸந்த, பசிந்து சூரியபண்டார, அஹான் விக்ரமசிங்க, அஞ்சல பண்டார, நிபுன் தனஞ்சய, அசங்க மனோஜ், கேஷர நுவாந்த மற்றும் டிலும் சுதீர ஆகிய இளம் வீரர்களும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இந்தியா மற்றும் SLC XI அணிகளுக்கு இடையிலான மூன்று நாள் கொண்ட பயிற்சிப்போட்டி நாளை (07) கொழும்பு என்.சி.சி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






















