ஐ.பி.எல்லை கைவிட்டு இலங்கை சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் ஸ்டெயின், ரபாடா

632
Getty Images and AFP

தென்னாபிரிக்க அணியின் மிரட்டும் வேகப்பந்து வீச்சாளர்களான ககிசோ ரபாடா மற்றும் டேல் ஸ்டெயின் இருவரும் இலங்கை சுற்றுப்பயணத்திற்காக தற்போதே தயாராக ஆரம்பித்துள்ளனர்.

காயத்திற்கு முகம்கொடுத்திருக்கும் ரபாடா இலங்கை சுற்றுப்பயணத்திற்கு முன் ஐ.பி.எல். தொடரை தவிர்த்து ஓய்வு எடுத்துக்கொண்டிருப்பதோடு காயத்தில் இருந்து மீண்டிருக்கும் ஸ்டெயின் இலங்கை சுற்றுப்பயணத்திற்கு தனது உடல் தகுதியை நிரூபிக்க ஐ.பி.எல். தொடரை தவிர்த்து இங்கிலாந்து கௌண்டி போட்டிகளில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.

தற்போது உலகின் முதல் நிலை டெஸ்ட் பந்துவீச்சாளரான ககிசோ ரபாடா முதுகெலும்பு பகுதியில் உபாதைக்கு முகம்கொடுத்து வருகிறார். இதனால் அவர் மூன்று மாத காலம் வரை போட்டியில் இருந்து விலகி இருக்கும் நிலைக்கு முகம்கொடுத்துள்ளார்.

22 வயதான ரபாடா மிகக் குறுகிய காலத்திற்குள் உலக பந்துவீச்சாளர் வரிசையில் உச்சத்தை எட்டிய வீரர் ஆவார். எனினும் டேல் ஸ்டெயின் அண்மைக்காலமாக விளையாடாத நிலையிலும் தொடர்ச்சியாக பந்துவீசி வருவதாலும் தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு முகாமை பலப்படுத்தும் பொறுப்பு ரபாடாவின் தோளில் விழுந்துள்ளது.

இலங்கை வரவிருக்கும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றின் படி, இந்த ஆண்டின்

நடந்து முடிந்த தென்னாபிரிக்க பருவத்தில் அவர் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 56 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு இதில் விக்கெட் வீழ்த்துவதன் சராசரி 16.98 என சிறப்பாக இருந்தது. இந்த காலப்பிரிவில் ககிசோ ரபாடா எட்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆடியுள்ளார்.   

அண்மையில் நடந்து முடிந்த அவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்க அணி 3-1 என கைப்பற்றியது. இதில் ககிசோ ரபாடா தொடர் நாயகன் விருதையும் வென்றார். எனினும் அந்த தொடரின் கடைசிக் கட்டத்தில் வைத்து தனது அதிகபட்ச வேகத்தில் பந்து வீசுவதில் ரபாடா சிரமத்துக்கு முகம்கொடுத்தார். ஜொஹன்னஸ்பேர்க்கில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் அவரால் 8 ஓவர்கள் மாத்திரமே பந்து வீச முடிந்தது.     

இந்நிலையில் ஸ்கேன் சோதனைக்கு முகம்கொடுத்திருக்கும் ககிசோ ரபாடாவுக்கு ஒரு மாதத்திற்கு ஓய்வு எடுத்துக் கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் மீளத்திரும்புவதற்கான உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஆரம்பமாகவுள்ள 11 ஆவது ஐ.பி.எல். தொடரில் இருந்து ரபாடா விலகிக் கொண்டுள்ளார். ஐ.பி.எல். தொடரில் ரபாடா டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகி இருந்தார்.

”ககிசோவின் முதுகின் கீழ் பகுதியில் உபாதை ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருக்கும் நிலையில் அவர் மூன்று மாதங்கள் வரை கிரிக்கெட்டில் இருந்து விலக வேண்டி ஏற்பட்டுள்ளது” என்று தென்னாபிரிக்க அணியின் முகாமையாளர் டாக்டர் முஹமது முசாஜி குறிப்பிட்டுள்ளார்.

”ஜூலை மாதத்தில் இலங்கைக்கு எதிரான தொடருக்கு தயாராவதற்காக அவர் ஒரு மாத காலம் அனைத்து உடல் செயற்பாடுகளில் இருந்தும் விடுபட்டு பின்னர் உடற்பயிற்சிக்கான நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டியுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையுடனான இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் ஒரு T20 போட்டிகளில் விளையாடுவதற்காக தென்னாபிரிக்க அணி எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பத்தில் இலங்கை வரவுள்ளது. இது தென்னாபிரிக்க அணியின் அடுத்த சர்வதேச போட்டித் தொடராகும். எனவே, இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு இன்னும் மூன்று மாத கால அவகாசம் இருப்பதால் அதற்குள் ரபாடாவின் உடல் தகுதியை நிரூபிக்க தென்னாபிரிக்க அணி முயன்று வருகிறது.

ஐ.பி.எல் தொடரின் தொலைக்காட்சி வர்ணனையாளராக சங்கக்கார

உலகின் மிகப் பெரிய டி20 கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். தொடரில் இலங்கை அணியின் முன்னாள்

அதேபோன்று மற்றொரு உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயினும் இலங்கை சுற்றுப்பயணத்திற்காக தற்போதே தயாராக ஆரம்பித்துள்ளார். இதற்காக அவர் இங்கிலாந்த கௌண்டி அணியான ஹாம்ஷெயாருடன் 2018 பருவத்திற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

டேல் ஸ்டெயின் காயம் காரணமாக தென்னாபிரிக்காவின் உள்நாட்டு சர்வதேச பருவத்தின் அதிக போட்டிகளை இழந்திருக்கும் நிலையில் இரண்டு வாயில்கள் ஊடே மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு திரும்ப எதிர்பார்த்துள்ளார். இதன்படி அவர் ஜுன் மாதத்தில் நடைபெறும் 50 ஓவர் போட்டி மற்றும் ஒரு கௌண்டி சம்பியன்ஷிப் அட்டவணையில் பங்கேற்று ஜுலை மாதத்தில் ஆரம்பமாகும் தென்னாபிரிக்காவின் இலங்கை சுற்றுப்பயணத்தில் அணியுடன் இணைய எதிர்பார்த்துள்ளார்.   

கடந்த ஏப்ரல் மாதம் தேசிய அணி ஒப்பந்தத்தில் 34 வயதான டேல் ஸ்டெயின் இணைக்கப்பட்டதன் மூலம் அணியில் அவரது இடம் உறுதியாகியுள்ளது. எனினும் தோள்பட்டை எலும்பில் முறிவு ஏற்பட்ட நிலையில் கடந்த 2016 நவம்பர் மாதம் தொடக்கம் அவர் தென்னாபிரிக்க அணிக்காக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலேயே விளையாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து குதிகால் பகுதியில் ஏற்பட்ட உபாதை ஒன்றால் அவருக்கு அண்மைய அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.  

எனவே தான் ஐ.பி.எல். பருவத்தை கைவிட்டு இங்கிலாந்து கவுண்டி போட்டிகளில் ஆடுவதற்கு தீர்மானித்ததாக ஸ்டெயின் கூறியிருந்தார்.

”தென்னாபிரிக்க அணிக்காக சிறிது காலம் விளையாடவில்லை. இன்னும் ஒரு மாதம் நான் ஓய்வு எடுக்கப் போகிறேன். ஐ.பி.எல். போட்டிகளுக்கு நான் திரும்ப மாட்டேன். ஜுன் மாதத்தில் ஹாம்ஷெயார் அணிக்கு சென்று சில போட்டிகளில் விளையாடி அதற்கு பின் ஜூலையில் இலங்கையுடன் விளையாட எதிர்பார்த்துள்ளேன்” என்று ஸ்டெயின் கடந்த வாரம் கூறி இருந்தார்.

2004 ஆம் ஆண்டு தனது கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஸ்டெயின் இதுவரை 86 டெஸ்ட் போட்டிகளில் 419 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 26 தடவை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கும் அவரின் பந்துவீச்சு சராசரி 22.32 ஆகும். தென்னாபிரிக்க அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கும் ஷோன் பொலக்கின் (421) சாதனையை முறியடிக்க ஸ்டெயினுக்கு இன்னும் 3 விக்கெட்டுகளே தேவைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.