இன்னிங்ஸில் 9 விக்கெட்களை வீழ்த்திய சாமிக்க

230

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) பிரிவு A உள்ளூர் கிரிக்கெட் கழகங்களுக்கு இடையே ஒழுங்கு செய்து நடாத்தும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல் தர கிரிக்கெட் தொடரின் ஐந்து போட்டிகள் இன்று (04) ஆரம்பமாகின. இதில் CCC அணியின் சாமிக்க எதிரிசிங்க 9 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது அணிக்கு வலுச் சேர்த்ததோடு SSC அணியின் ஷம்மு அஷான் மற்றும் ராகம அணியின் சுபேஷல ஜயதிலக்க அபார சதம் பெற்றனர்.

SSC எதிர் BRC

வலதுகை ஆரம்பவரிசை துடுப்பாட்ட வீரர் சம்மு அஷான் பெற்ற அபார சதத்தின் உதவியோடு BRC அணிக்கு எதிரான போட்டியில் SSC முதல் இன்னிங்ஸுக்கு 289 ஓட்டங்களை பெற்றது.

அயர்லாந்து A அணிக்கெதிராக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த சந்துன் வீரக்கொடி

சுற்றுலா அயர்லாந்து A அணி மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை பிரதிநிதி பதினொருவர் …

தனது சொந்த மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் BRC அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறும் நோக்கோடு துடுப்பெடுத்தாடி வருகிறது. இதன்படி முதல் நாள் ஆட்டநேர முடிவின்போது அந்த அணி ஒரு விக்கெட்டை இழந்து 57 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

SSC (முதல் இன்னிங்ஸ்) – 289 (66.4) – சம்மு அஷான் 125, சச்சித்ர சேனநாயக்க 32, துவிந்து திலகரத்ன 5/65, நிரஞ்சன வன்னியாரச்சி 2/36

BRC (முதல் இன்னிங்ஸ்) – 57/1 (21) – பானுக்க ராஜபக்ஷ 34*, லசித் லக்ஷான் 20*

CCC எதிர் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம்

இடதுகை சுழற்பந்து வீச்சாளர் சாமிக்கர எதிரிசிங்கவின் அதிரடி பந்துவீச்சுக்கு முகம்கொடுக்க முடியாமல் சரசென்ஸ் அணிக்கு எதிராக CCC முதல் இன்னிங்ஸுக்கு 238 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. எதிரிசிங்க எதிரணியின் 9 விக்கெட்டுகளை பதம்பார்த்தமை குறிப்பிடத்தக்கது.

தனது சொந்த மைதானத்தில் ஆடிய CCC அணி சார்பில் மாதவ வர்ணபுர (63) மாத்திரம் அரைச்சதம் ஒன்றை பெற்றார். எனினும், முதல் இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கும் சரசென்ஸ் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

போட்டியின் சுருக்கம்

CCC (முதல் இன்னிங்ஸ்) – 238 (62) – மாதவ வர்ணபுர 63, வனிந்து ஹசரங்க 32, ரொன் சந்திரகுப்தா 30, சாமிக்கர எதிரிசிங்க 9/87

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 47/5 (27.2) – பிரமோத் மதுவன்த 22, மலிந்த புஷ்பகுமார 4/31

சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் இராணுவப்படை கிரிக்கெட் கழகம்

தனது சொந்த மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் சோனகர் விளையாட்டுக் கழகம் விக்கெட்டுகளை மளமளவென்று பறிகொடுத்து முதல் இன்னிங்ஸில் 110 ஓட்டங்களுக்கே சுருண்டது. இதன்போது இராணுவப்படை அணி சார்பில் துஷான் விமுக்தி 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தமை குறிப்பிடத்தக்கது.  

முதல் இன்னிங்ஸை ஆடும் இராணுவப்படை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவின்போது சோனகர் அணியை விடவும் 19 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.

போட்டியின் சுருக்கம்

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 110 (44.4) – அதீஷ திலஞ்சன 35, துஷான் விமுக்தி 5/35, தனுசிக்க பண்டார 2/16, நுவன் லியனபத்திரண 2/30

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் – 129/4 (43) – அஷான் ரக்திக்க 32, டில்ஷான் டி சொய்சா 31*, லக்ஷித்த மதுஷான் 20

இலங்கை துறைமுக அதிகாரசபை கி.. எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

சாகர் பரேஷின் பந்துவீச்சு மூலம் துறைமுக அதிகாரசபைக்கு நெருக்கடி கொடுத்த சீலாபம் மேரியன்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற போராடி வருகிறது.

முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு ஐ.சி.சி அபராதம்.

நியூசிலாந்து அணியுடனான முதலாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி …

கட்டுநாயக்க, சிலாபம் மேரியன் மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் இந்திய வீரரான பரேஷ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் துறைமுக அதிகாரசபை அணி முதல் இன்னிங்ஸில் 233 ஓட்டங்களையே பெற்றது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை துறைமுக அதிகாரசகை கி.. (முதல் இன்னிங்ஸ்) – 233 (68.5) – யுகான் டி சில்வா 64, பிரமோஷ் பெரேரா 51, பிரகாஷ் விக்ரமசிங்க 46*, சாகர் பரேஷ் 6/70, காரிமுற்றத்து ராகேஷ் 2/41

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 54/4 (19) – ஓஷத பெர்னாண்டோ 30*, ஹர்ஷ குரே 22, அனுக் டி அல்விஸ் 2/09, சமிந்து பண்டார 2/17


ராகம கிரிக்கெட் கழகம் எதிர் தமிழ் யூனியன் கழகம்

சுபேஷல ஜயதிலக்கவின் சதத்தின் உதவியோடு தமிழ் யூனியன் அணிக்கு எதிராக ராகம கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்ஸில் வலுவான ஓட்டங்களை பெற்று வருகிறது.

Photos: Tamil Union C & AC v Ragama CC – Major League Tier A Tournament 2018/19

கொழும்பு, NCC மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் முதல் இன்னிங்ஸை ஆடி வரும் ராகம அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது 7 விக்கெட் இழப்புக்கு 356 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்  

ராகம கிரக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 356/7 (89) – சுபேஷல ஜயதிலக்க 100, ஜனித் லியனகே 52, தினெத் தொமோத்ய 49, ஷெஹான் பெர்னாண்டோ 41, தினுக் விக்ரமநாயக்க 2/27, ஜீவன் மெண்டிஸ் 2/90

அனைத்து போட்டிகளினதும் இரண்டாவம் நாள் ஆட்டம் நாளை (05) தொடரும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<