Home Tamil சரித், சம்முவின் அபார ஆட்டத்தால் இலங்கைக்கு ஹெட்ரிக் வெற்றி

சரித், சம்முவின் அபார ஆட்டத்தால் இலங்கைக்கு ஹெட்ரிக் வெற்றி

1891
Sri Lanka Emerging Vs USSA

தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக பதினொருவர் அணிக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் போட்டியில் சரித் அசலங்க மற்றும் சம்மு அஷானின் அரைச் சதங்களின் உதவியுடன் இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி, தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணி, தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக பதினொருவர் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 

>> சகலதுறையிலும் பிரகாசித்த இலங்கை வளர்ந்துவரும் அணிக்கு த்ரில் வெற்றி

இந்தப் போட்டித் தொடரில் இன்று (05) நடைபெற்ற நான்காவது லீக் ஆட்டத்தில் இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் மற்றும் தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக பதினொருவர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

பிரிட்டோரியாவில் உள்ள டுக்ஸ் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணித் தலைவர் சரித் அசலங்க முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக பதினொருவர் அணி, தங்களுடைய முதல் விக்கெட்டினை 27 ஓட்டங்களுக்கு இழந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நீல் பிரேண்ட் (05) அமில அபோன்சோவின் பந்து வீச்சில், LBW முறையில் ஆட்டமிழந்தார். 

இதற்கு அடுத்தபடியாக களமிறங்கிய இஸ்மாயில் காபில்டீன் (19), லிசிகோ செனொக்வானே (02), ருவான் டி ஸ்வார்ட் (06) ஆகியோர் வந்த வேகத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக பதினொருவர் அணி, ஆரம்பத்திலேயே 61 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதன்பிறகு ஜோடி சேர்ந்த டெலானோ போட்கீட்டர் மற்றும் ருபின் ஹேர்ன்மேன் ஆகியோர் இலங்கை வளர்ந்துவரும் அணியின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ஓட்டங்களை குவித்தனர்..

நிதானமாக ஓட்டங்களை குவித்த இருவரும் 6ஆவது விக்கெட்டுக்காக 94 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொள்ள, ருபின் ஹேர்ன்மேன் 45 ஓட்டங்களுடனும், அடுத்த வந்த அணித் தலைவர் வில்லியம் போர்டர்பீல்ட் 3 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

இறுதியில், டெலானோ போட்கீட்டர் ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்ட அரைச் சதத்தின் உதவியுடன் தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக பதினொருவர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ஒட்டங்களைக் குவித்தது. 

அந்த அணி சார்பாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய டெலானோ போட்கீட்டர்;106 பந்துகளில் 97 ஓட்டங்களை எடுத்தார். 

இலங்கைக்கு வருகை தரவுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி

தற்போது நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவடைந்த பின்னர்…

இலங்கை வளர்ந்துவரும் அணி பந்துவீச்சு சார்பில் லஹிரு மதுஷங்க 2 விக்கெட்டுக்களையும், அசித பெர்னாண்டோ மற்றும் அமில அபோன்சோ ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் கைப்பற்றினர். 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு சந்துன் வீரக்கொடி மற்றும் சங்கீத் குரே ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக பதினொருவர் அணி, ஆரம்பத்திலேயே பந்து வீச்சில் மிரட்டியது. 

முதலாவது விக்கெட்டாக சந்துன் வீர்க்கொடி ஓட்டமின்றியும், மினோத் பானுக்க 5 ஓட்டங்களுடனும், சங்கீத் குரே 15 ஓட்டங்களுடனும் பியெர்ஸ் ஸ்வேர்ன்பூலின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் ஆரம்பத்திலேயே இலங்கை வளர்ந்துவரும் அணி 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனை அடுத்து ஜோடி சேர்ந்த சரித் அசலங்க மற்றும் சம்மு அஷான் ஆகியோர் பொறுமையான ஒரு இணைப்பாட்டம் ஒன்றை கட்டியெழுப்பினர். இருவரும் நான்காவது விக்கெட்டுக்காக 111 ஓட்டங்களைப் பகிர்ந்து நம்பிக்கை கொடுத்தனர். 

பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வலுச்சேர்த்த சரித் அசலங்க அரைச்சதம் கடந்த நிலையில் 66 ஓட்டங்களுடனும், சம்மு அஷான் 57 ஓட்டங்களுடனும் வெளியேறினர்

எனினும், 7ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த அஷேன் பண்டார மற்றும் லஹிரு மதுஷங்க ஆகியோர் நிதானமான இணைப்பாட்டம் (50) ஒன்றினை வழங்கி இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இதன்படி, இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி, 49.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

எனவே 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. 

19 வயதின்கீழ் வீரர்களுக்கான மாகாண ஒருநாள் தொடர் இம்மாதம் ஆரம்பம்

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) 19 வயதின் கீழ்ப்பட்ட உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள்..

இதேநேரம் தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக பதினொருவர் அணியின் பந்துவீச்சில் பியெர்ஸ் ஸ்வேர்ன்பூல் மற்றும் லுக்கி பிலாண்டர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

இது இவ்வாறிருக்க, இலங்கை வளர்ந்துவரும் மற்றும் தென்னாபிரிக்கா வளர்ந்துவரும் அணிகளுக்கிடையிலான 6ஆவது லீக் போட்டி நாளை (06) இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஸ்கோர் விபரம்

Result


Sri Lanka Emerging Team
211/6 (49.1)

University Sports South Africa XI
207/6 (50)

Batsmen R B 4s 6s SR
Kabelo Sekhukhune c Ashen Bandara b Lahiru Madushanka 14 25 2 0 56.00
Isma-eel Gafieldien lbw b Amila Aponso 19 31 2 0 61.29
Neil Brand b Chamika Karunarathne 5 13 1 0 38.46
Lesego Senokwane run out (Charith Asalanka) 2 6 0 0 33.33
Delano Potgieter not out 97 106 3 5 91.51
Ruan de Swardt c Charith Asalanka b Asitha Fernando 6 16 2 0 37.50
Rubin Hermann c Charith Asalanka b Lahiru Madushanka 45 88 2 1 51.14
L Philander not out 11 16 1 0 68.75


Extras 8 (b 0 , lb 1 , nb 1, w 6, pen 0)
Total 207/6 (50 Overs, RR: 4.14)
Fall of Wickets 1-27 (5.5) Kabelo Sekhukhune, 2-36 (8.6) Neil Brand, 3-42 (11.5) Isma-eel Gafieldien, 4-44 (13.2) Lesego Senokwane, 5-61 (18.2) Ruan de Swardt, 6-155 (43.4) Rubin Hermann,

Bowling O M R W Econ
Asitha Fernando 10 1 46 1 4.60
Lahiru Madushanka 8 0 47 2 5.88
Chamika Karunarathne 10 1 38 1 3.80
Amila Aponso 10 0 33 1 3.30
Charith Asalanka 7 0 21 0 3.00
Sammu Ashan 5 1 21 0 4.20


Batsmen R B 4s 6s SR
Sandun Weerakkody c Delano Potgieter b Beyers Swanepoel 0 4 0 0 0.00
Sangeeth Cooray c Rubin Hermann b Beyers Swanepoel 15 23 2 0 65.22
Minod Bhanuka c Rubin Hermann b Beyers Swanepoel 5 13 1 0 38.46
Charith Asalanka c Rubin Hermann b L Philander 66 84 6 0 78.57
Sammu Ashan lbw b L Philander 57 90 5 0 63.33
Kamindu Mendis lbw b L Philander 10 20 0 0 50.00
Ashen Bandara not out 32 36 2 1 88.89
Lahiru Madushanka not out 22 25 2 0 88.00


Extras 4 (b 0 , lb 1 , nb 0, w 3, pen 0)
Total 211/6 (49.1 Overs, RR: 4.29)
Fall of Wickets 1-0 (0.4) Sandun Weerakkody, 2-9 (4.3) Minod Bhanuka, 3-30 (8.4) Sangeeth Cooray, 4-141 (32.4) Charith Asalanka, 5-152 (38.1) Sammu Ashan, 6-161 (40.4) Kamindu Mendis,

Bowling O M R W Econ
Beyers Swanepoel 5 2 9 3 1.80
Gideon Peters 7.1 0 38 0 5.35
Ruan de Swardt 8 0 33 0 4.12
L Philander 10 1 33 3 3.30
Delano Potgieter 4 0 22 0 5.50
S Mallie 4 0 17 0 4.25
Neil Brand 8 0 39 0 4.88
Lesego Senokwane 3 0 19 0 6.33



முடிவு இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<