புட்சால், கடற்கரை கால்பந்தாட்டத்தை இலங்கையில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

114

இலங்கையில் புட்சால் மற்றும் கடற்கரை கால்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுக்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஆசிய கால்பந்தாட்ட கூட்டுச் சம்மேளன பிரதிநிதிகள் அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.

ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புட்சால் மற்றும் கடற்கரை கால்பந்தாட்ட அபிவிருத்திப் பிரிவின் தலைமை அதிகாரி எம். அலி தர்கோலைஸாதே, அபிவிருத்தித்துறை நிர்வாகி அப்துல் அஸிஸ் ஆகிய இருவரும் இவ்வாறு இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.

DCL சம்பியன் கொழும்பு அணியை வீழ்த்திய சோண்டர்ஸ் எப்.ஏ கிண்ண இறுதிப் போட்டியில்

சுகததாஸ அரங்கை அலங்கரித்த வான்டேஜ் எப்.ஏ கிண்ணத்தின் கொழும்பு கால்பந்து கழகம்…..

இந்த நிலையில், இலங்கையில் எதிர்வரும் இரண்டு வருடங்களில் குறித்த இரண்டு விளையாட்டுக்களையும் அபிவிருத்தி செய்வது தொடர்பிலான விசேட கருத்தரங்கு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன தலைமையகத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இதில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தவைர் அநுர டி சில்வா, செயலாளர் யூ.எல் ஜஸ்வர் உமர், இலங்கை புட்சால் மற்றும் கடற்கரை கால்பந்தாட்ட குழுவின் தலைவர் மொஹமட் ரமீஸ் மற்றும் அதன் உறுப்பினர்ககள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் கலந்துகொண்டு பேசிய இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அநுர டி சில்வா, இலங்கையில் எதிர்வரும் காலத்தில் புட்சால் மற்றும் கடற்கரை கால்பந்தாட்டத்தை அபிவிருத்தி செய்வதற்காக கழகங்களுடன் ஒன்றிணைந்து வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

இதேநேரம், எதிர்வரும் 2019இல் இளைஞர்கள் மத்தியில் புட்சால் மற்றும் கடற்கரை கால்பந்தாட்டத்தை பிரபல்யப்படுத்தும் நோக்கில் விசேட அபிவிருத்தி திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும், இதற்காக நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று வீரர்களை இனங்காண்பதற்கான பயிற்சி முகாம்களை நடத்தவுள்ளதாக கால்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.

AFC 23 வயதின்கீழ் சம்பியன்ஷிப் தகுதிகாண் சுற்றில் இலங்கை B குழுவில்

தாய்லாந்தில் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் (AFC) 23….

இதுஇவ்வாறிருக்க, ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புட்சால் மற்றும் கடற்கரை கால்பந்தாட்ட அபிவிருத்திப் பிரிவின் தலைமை அதிகாரி எம். அலி தர்கோலைஸாதே கருத்து வெளியிடுகையில்,

தெற்காசிய நாடுகளில் கேந்திர நிலையமாக விளங்குகின்ற இலங்கையில் புட்சால் மற்றும் கடற்கரை கால்பந்தாட்டம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்ய நாங்கள் ஆர்வமாக உள்ளோம் என தெரிவித்தார்.

இதேவேளை, புட்சால் மற்றும் கடற்கரை கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கையில் அபிவிருத்தி செய்வதற்காக புட்சால் மைதானங்களை அமைக்கவும், புட்சால் பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்களுக்கான பாடநெறிகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட விடயங்களுக்கு ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உதவியை தொடர்ந்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் இதன்போது முன்வைக்கப்பட்டது.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<