ஒழுக்க விதிகளை மீறிய வீரரை நாட்டுக்கு அனுப்பும் ஆப்கான்

545
AFP
 

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, தற்போதைய கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான தமது வீரர்கள் குழாத்தில் அப்தாப் ஆலத்திற்கு பதிலாக சயேத் அஹ்மட் சிர்ஷாத்தை இணைக்க விடுத்த கோரிக்கையினை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி) ஏற்றுக் கொண்டுள்ளது.

இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சியைக் கொடுப்போம் என்கிறார் ராகுல்

இங்கிலாந்துக்கு எதிராக எதிர்வரும்….

வேகப் பந்துவீச்சாளரான அப்தாப் ஆலம், தவிர்க்க முடியாத காரணம் ஒன்றுக்காக ஆகானிஸ்தானின் உலகக் கிண்ணக் குழாத்தில் இருந்து நீக்கப்பட்டு, அவ்விடத்தை சயேத் அஹ்மட் சிர்ஷாத் பிரதியீடு செய்கிறார் என முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.   

எனினும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை (ACB) தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் படி, அப்தாப் ஆலம் ஐ.சி.சி. யின் ஒழுக்க விதிமுறைகளை மீறிய குற்றாச்சாட்டிலேயே உலகக் கிண்ண குழாத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என அறியக்கிடைக்கின்றது. எனினும், அப்தாப் ஆலம் மேற்கொண்ட குற்றம் என்ன? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 

இதேநேரம், ஆப்கானிஸ்தான் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அப்தாப் ஆலம், உலகக் கிண்ணத் தொடர் நடைபெறும் இங்கிலாந்தில் இருந்து உடனடியாக தனது சொந்த நாடான ஆப்கானிஸ்தானுக்கும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 

“ரூட் மற்றும் வில்லியம்சனை பின்பற்ற வேண்டும்” – ஹதுருசிங்க

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில்…

”அப்தாப் ஆலத்தினை இங்கிலாந்தில் இருந்து நாட்டுக்கு அனுப்பும் தீர்மானம் எடுக்கப்பட்டது அவர் ஐ.சி.சி. மற்றும் ஏ.சி.பி. (ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை) ஆகிய இரண்டினதும் ஒழுங்குமுறைகளை மீறிய காரணத்திற்காகவாகும். அதோடு, இந்த தீர்மானம் காரணமாக அப்தாப் ஆலம் 2019ஆம் ஆண்டின் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் போட்டிகளில் மேலும் பங்கெடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. அதோடு, அப்தாப் ஆலம் மேற்கொண்ட குற்றம் தொடர்பில் ஏ.சி.பி. யும் (ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை) விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.” என்று அவர் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த உலகக் கிண்ணத் தொடரில் 3 போட்டிகளில் ஆடியுள்ள அப்தாப் ஆலம், 4 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார். இதில், 3 விக்கெட்டுகள் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணிக்கு எதிராக பெறப்பட்டிருந்தது. 

இதேநேரம், ஆப்கானிஸ்தான் அணிக்கு அழைக்கப்பட்டுள்ள இடதுகை வேகப் பந்துவீச்சாளரான சிர்ஷாத், இந்த ஆண்டின் மார்ச் மாதம் அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் சர்வதேச அறிமுகத்தை பெற்றிருந்தார். சிர்ஷாத் இன்று (28) ஆப்கானிஸ்தான் அணியுடன் இணைந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சியைக் கொடுப்போம் என்கிறார் ராகுல்

இங்கிலாந்துக்கு எதிராக எதிர்வரும் …

வீரர்கள் பிரதியீடு ஒருபுறமிருக்க இந்த உலகக் கிண்ணத் தொடரில் இதுவரையில் 7 போட்டிகளில் ஆடியுள்ள ஆப்கானிஸ்தான் அணி, 7 போட்டிகளிலும் தோல்வியினை தழுவி உலகக் கிண்ணத் தொடரில் இருந்து அரையிறுதி சுற்றுக்கு தெரிவாகாத முதல் அணியாக மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்த உலகக் கிண்ணத் தொடரில் எஞ்சியிருக்கும் தமது போட்டிகளில் ஆறுதல் வெற்றி ஒன்றினை எதிர்பார்க்கும் ஆப்கானிஸ்தான் அணி அடுத்ததாக பாகிஸ்தான் அணியினை எதிர்வரும் சனிக்கிழமை (29) லீட்ஸ் நகரில் வைத்து எதிர்கொள்கின்றது.  

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க