இந்தியாவிடம் ஒருநாள் தொடரையும் இழந்த இலங்கை கட்புலனற்றோர் அணி

116

 இந்திய கட்புலனற்றோர் அணி பெற்ற இமாலய ஓட்டங்களை பெற போராடிய இலங்கை கட்புலனற்றோர் அணி, இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரையும் இலங்கை கட்புலனற்றோர் அணி 0-2 என இழந்தது.

இந்திய கட்புலனற்றோர் அணியிடம் வைட்-வொஷ் தோல்வியடைந்த இலங்கை கட்புலனற்றோர் அணி

இலங்கை கட்புலனற்றோர் அணிக்கு எதிரான ஐந்தாவதும், இறுதியுமான…

இந்தியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கட்புலனற்றோர் அணி ஏற்கனவே இந்திய அணியுடனான டி-20 தொடரையும் இழந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புவனேஷ்வர் அரங்கில் (26) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை கட்புலனற்றோர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. எனினும் துடுப்பெடுத்தாட வந்த இந்திய அணி இலங்கை பந்துவிச்சாளர்களை திக்குமுக்காடச் செய்தது.  

மத்திய வரிசையில் வந்த அணித்தலைவர் அஜே குமார் 87 பந்துகளில் 25 பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 155 ஓட்டங்களை பெற்றதோடு பின் வரிசையில் ஏ. கரியா 48 பந்துகளில் 18 பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 112 ஓட்டங்களை விளாசினார். இந்த இருவரும் 7ஆவது விக்கெட்டுக்கு பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 206 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.

இதன்மூலம் இந்திய கட்புலனற்றோர் அணி நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 464 ஓட்டங்களை விளாசியது. இலங்கை சார்பில் எஸ். சம்பத் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் இமாலய ஓட்டங்களை இலக்காகக் கொண்டு பதிலெடுத்தாட களமிறங்கிய இலங்கை கட்புலனற்றோர் அணி, மத்திய வரிசையில் வந்த சி. தேஷப்ரிய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதும் அது வெற்றி இலக்கை எட்ட உதவவில்லை. தேஷப்ரிய 55 பந்துகளில் 19 பௌண்டரிகளுடன் 101 ஓட்டங்களை பெற்ற நிலையில் ரன் அவுட் ஆனார்.

இங்கிலாந்துக்கு வழங்கிய மோசமான தோல்வியின் நம்பிக்கையுடன் T20 யில் களமிறங்கும் இலங்கை

உலகின் முதல் நிலை ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு மிக மோசமான தோல்வியினை…

இதன்படி இலங்கை கட்புலனற்றோர் அணி 40 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 351 ஓட்டங்களையே பெற்றது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் கடைசியுமான ஒருநாள் போட்டிய சனிக்கிழமை கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இந்தியா – 464/6 (40) – அஜே குமார் 155*, ஏ. கரியா 112*, ஆர். லிங்கா 65, எஸ். ரமேஷ் 58, எஸ். சம்பத் 3/67

இலங்கை – 351/8 (40) – சி. தேஷப்ரிய 101, கே. குமார 62, பீ. குமார 41*, டி. மாலிக் 2/46

முடிவு: இந்திய கட்புலனற்றோர் அணி 113 ஓட்டங்களால் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க