தேசிய மகளிர் கால்பந்து அணிக்கான வீரர்கள் தெரிவுக்கு அழைப்பு

133

மகளிருக்கான தெற்காசிய கால்பந்து சம்மேளன (SAFF) சம்பியன்ஷிப் தொடருக்கு, இலங்கை அணியை தெரிவு செய்வதற்கான அணித்தெரிவுக்கு இலங்கை கால்பந்து சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.

அணித்தெரிவு சுற்றுகள் பின்வருமாறு

இந்த அணித் தெரிவுகள் பல கட்டங்களாக இடம்பெறும் என இலங்கை கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.

அதன்டி முதலாம் கட்டம் இலங்கை இராணுவ படை அணி, இலங்கை விமான படை அணி, இலங்கை கடற்படை அணி, இலங்கை பொலிஸ் அணி மற்றும் சிவில் பாதுகாப்பு அணிகளை சேர்ந்த வீராங்கனைகளுக்கானது.

  • திகதி – ஜூலை 26 மற்றும் 27ஆம் திகதிகளில்
  • இடம் – கடற்படை மைதானம்
  • நேரம் – காலை 7 மணி முதல்

முக்கிய குறிப்பு: அனைத்து வீராங்கனைகளும் ஜூலை 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு கட்டாயம் தம்மை பதிவு செய்ய வேண்டும்.

இரண்டாம் கட்டம்

கழகங்கள், அகடமிக்கள் மற்றும் பாடசாலைகளை சேர்ந்த வீராங்கனைகளுக்கானது.

  • திகதி – ஜூலை 28 மற்றும் 29ஆம் திகதிகளில்
  • இடம் – பெத்தகான தேசிய பயிற்சி மையம்
  • நேரம் – காலை 7 மணி முதல்

முக்கிய குறிப்பு: அனைத்து வீராங்கனைகளும் ஜூலை 28ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு கட்டாயம் தம்மை பதிவு செய்ய வேண்டும்.

பின்வரும் அதிகாரிகளிடம், லீக்குகளின் செயலாளர்களும், கழகங்களும், பாடசாலைகளின் அதிபர்களும்  முதல் கட்ட தெரிவுகளில் பங்கு கொள்ள இருக்கும் வீராங்கனைகளை பற்றிய  தகவல்களை ஜூலை 25ஆம் திகதி பி.ப 4 மணிக்கு முன்னரும், இரண்டாம்  கட்ட தெரிவுகளில் பங்கு கொள்ள இருக்கும் வீராங்கனைகளை பற்றிய  தகவல்களை ஜூலை 27ஆம் திகதி பி.ப 3 மணிக்கு முன்னரும் கையளிக்க வேண்டும்.

  • காமினி மதுராவல

Email: [email protected] / [email protected]

WhatsApp: 077 789 6925

  • மேஜர் ஹிரான் ரத்நாயக்க

Email: [email protected]

WhatsApp: 077 179 6414

அணித்தெரிவுக்கு வீராங்கனைகளுக்கு கொடுப்பனவுகளோ, தங்குமிட வசதிகளோ செய்து தரப்பட மாட்டாது. முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட வீராங்கனைகளுக்கான இறுதி தெரிவு ஜூலை 30 மற்றும் 31ஆம் திகதிகளில் இடம்பெறும்.

இறுதி சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்ட வீராங்கனைகள் பெத்தகான தேசிய பயிற்சி மையத்தில் தம்மை பதிவு செய்ய ஜூலை 30ஆம் திகதி சனிக்கிழமை காலை 7மணிக்கு கட்டாயம் வர வேண்டும்.

வீராங்கனைகள் தம்மை பதிவு செய்ய தேசிய அடையாள அட்டை/ தபால் அட்டை/ கடவுச்சீட்டு கொண்டு வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு  காமினி மதுராவலவை தொலைபேசியில் 077 789 6925 எனும் இலக்கத்திலும் அல்லது மேஜர் ஹிரான் ரத்நாயக்கவை தொலைபேசியில் 077 179 6414 எனும் இலக்கத்திலும் தொடர்பு கொள்ளலாம்.

                             >> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<