அடுத்த மாதம் இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்த சுற்றுப்பயணத்திற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டிருக்கின்றது.
ஆசியக் கிண்ணத்தை பாகிஸ்தானில் நடத்த வேண்டாம் – பாக். முன்னாள் வீரர்
சுமார் ஒரு மாத காலம் வரை நீடிக்கவுள்ள இந்த சுற்றுப் பயணத்தில் மூன்று வகை கிரிக்கெட் தொடர்களும் உள்ளடங்குவதோடு முதலாவதாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவிருக்கின்றது. டெஸ்ட் தொடரின் பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும், அதனை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரும் இடம்பெறுகின்றன.
இதில் முதலாவதாக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடர் ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்குள் அடங்குவதோடு, ஒருநாள் தொடர் ஐ.சி.சி. இன் ஒருநாள் சுபர் லீக்கினுள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது.
அதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணிக்கு நியூசிலாந்தில் நடைபெறும் ஒருநாள், டெஸ்ட் தொடர்கள் இரண்டும் மிக முக்கியமானதாக அமைகின்றமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.
அந்தவகையில் நியூசிலாந்து டெஸ்ட் தொடர் இலங்கை அணி ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதனை தீர்மானிக்கவிருப்பதோடு, ஒருநாள் தொடர் இலங்கை அணி இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் நேரடியாக விளையாடுவதனை தீர்மானிக்க முக்கியத்துவம் கொண்டதாக காணப்படுகின்றது.
இதேவேளை, இரு அணிகளும் பங்குபெறும் டெஸ்ட் தொடர் மார்ச் 09ஆம் திகதி ஆரம்பமாகவிருப்பதோடு, டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இலங்கை கிரிக்கெட் அணி இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி ஒன்றிலும் விளையாடுகின்றது. இந்தப் பயிற்சிப் போட்டி மார்ச் மாதம் 04ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
மகளிர் IPL ஏலத்துக்கு 15 இலங்கை வீராங்கனைகள் பதிவு
டெஸ்ட் தொடரின் பின்னர் இடம்பெறவுள்ள ஒருநாள் தொடரானது மார்ச் மாதம் 25ஆம் திகதியும், அதனையடுத்து T20 தொடர் ஏப்ரல் மாதம் 02ஆம் திகதியும் ஆரம்பமாகின்றன.
சுற்றுத்தொடர் அட்டவணை
திகதி | போட்டி | மைதானம் |
மார்ச் 4 தொடக்கம் 5 | இருநாள் பயிற்சி ஆட்டம் | கிறைஸ்ட்சேர்ச் |
மார்ச் 09 தொடக்கம் 13 | முதல் டெஸ்ட் | கிறைஸ்ட்சேர்ச் |
மார்ச் 12 தொடக்கம் 21 | இரண்டாவது டெஸ்ட் | வெலிங்டன் |
மார்ச் 25 | முதல் ஒருநாள் | ஓக்லாண்ட் |
மார்ச் 28 | இரண்டாவது ஒருநாள் | கிறைஸ்ட்சேர்ச் |
மார்ச் 31 | மூன்றாவது ஒருநாள் | ஹமில்டன் |
ஏப்ரல் 02 | முதல் T20i | ஓக்லாண்ட் |
ஏப்ரல் 05 | இரண்டாவது T20i | டனடின் |
ஏப்ரல் 08 | மூன்றாவது T20i | குயின்ஸ்டவுன் |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<