UAE கிரிக்கெட் வீரர்களுக்கு 8 வருட தடை

101

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐக்கிய அரபு இராச்சிய (UAE) அணியின் முன்னணி வீரர்களான மொஹமட் நவீத் மற்றும் ஷய்மான் அன்வர் ஆகிய இருவருக்கும் தலா எட்டு வருட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைய எட்டு வருடங்களுக்கு அவர்கள் இருவருக்கும் கிரிக்கெட் சார்ந்த எந்தவொரு விடயத்திலும் பங்குபற்ற முடியாது என ஐசிசி அறிவித்துள்ளது.  

பங்களாதேஷுக்கு எதிரான முதல் போட்டியிலிருந்து டெய்லர் நீக்கம்

ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், வேகப் பந்துவீச்சாளருமான மொஹமட் நவீத், மத்தி வரிசை துடுப்பாட்ட வீரரான ஷய்மான் அன்வர் ஆகியோர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற T20 உலகக் கிண்ண தகுதிச்சுற்றுத் தொடரின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதன்படி, குறித்த இருவருக்கும் அவ்வாண்டுக்டோபர் மாதம் 19ஆம் திகதி தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், ஐசிசி இன் ஊழல் மோசடி தடுப்பு பிரிவு விசாரணை நடத்தியதுடன், குறித்த இரண்டு வீரர்களும் மோசடி தடுப்பு விதிமுறைகளை மீறியுள்ளமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, மொஹமட் நவீத் மற்றும் ஷய்மான் அன்வர் ஆகிய இருவருக்கும் சகல விதமான கிரிக்கெட்டிலிருந்தும் எட்டு வருட தடை விதிக்கப்பட்டதாக ஐசிசி இன் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Video – ஒருநாள் தொடரில் கலக்கிய இலங்கையின் மும்மூர்த்திகள்..!|Sports RoundUp – Epi 153

அதுமாத்திரமின்றி, அவர்களுக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்ட 2019 ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதியிலிருந்து இந்தத் தடை அமுலுக்கு வருவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

33 வயதான மொஹமட் நவீத் 39 ஒருநாள் மற்றும் 31 T20  போட்டிகளில் விளையாடியுள்ளார். 42 வயதாகும் ஷய்மான் அன்வர் பட் 40 ஒருநாள் மற்றும் 32 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார்

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…