LPL தொடரின் வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவு ஆரம்பம்

1420

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இந்த ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரில் பங்கெடுக்கும் வெளிநாட்டு வீரர்களை பதிவு செய்ய ஆரம்பித்திருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றது.

வடமாகாண சம்பியனாகிய யாழ் மாவட்ட அணி

LPL தொடரின் நான்காவது பருவகாலத்திற்கான போட்டிகள் இந்த ஆண்டின் ஜூலை மாதம் 30ஆம் திகதி தொடக்கம், ஒகஸ்ட் 20ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்றன.

இந்த நிலையில் தொடரில் பங்கெடுக்கும் வெளிநாட்டு வீரர்களை பதிவு செய்வதற்கான பணிகளை இலங்கை கிரிக்கெட் சபை ஆரம்பம் செய்திருக்கின்றது.

அதன்படி வெளிநாட்டு வீரர்களை இணையதளம் வாயிலாக பதிவு செய்யவுள்ள இலங்கை கிரிக்கெட் சபை, வீரர்கள் LPL Player Registration Portal – Sri Lanka Cricket என்னும் இணைய இணைப்பின் ஊடாக தங்களை பதிவு செய்து கொள்ள முடியும் எனக் குறிப்பிட்டிருக்கின்றது.

இந்த இணைப்பின் மூலமாக பதிவு செய்யக் கூடிய வீரர்கள் சில நிபந்தனைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள இலங்கை கிரிக்கெட் சபையானது, வெளிநாட்டு அணியொன்றுக்காக கிரிக்கெட் விளையாடிய வீரர்கள் குறிப்பிட்ட நாடு ஒன்றுக்காக குறைந்தது ஒரு டெஸ்ட், ஒருநாள் அல்லது T20I போட்டி ஒன்றில் விளையாடியிருக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

எனினும், இவ்வாறு வெளிநாட்டு அணியொன்றுக்காக கிரிக்கெட் விளையாடியிருக்காத வீரர்கள் முதல்தரப் போட்டிகளிலோ அல்லது ஐ.சி.சி. இன் அங்கத்துவம் பெற்ற நாடொன்று நடாத்தும் T20 தொடர் ஒன்றில் விளையாடி இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கின்றது.

நிதிஷ் ராணவுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்!

அதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடிய முன்னாள் வீரர்களும் LPL தொடரில் பங்கெடுக்க முடியும் எனக் கூறப்பட்டிருப்பதோடு, இந்த வீரர்கள் தற்போது நடைபெற்று வரும் உள்ளூர் T20 தொடர்களில் விளையாடி வருவது அவசியம் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

இலங்கை அணியின் முன்னாள் வீரர்களும், மேற்குறிப்பிட்ட இணைய இணைப்பின் மூலமாக LPL போட்டிகளில் விளையாடுவதற்கு தம்மை பதிவு செய்து கொள்ள முடியும் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<