நிதிஷ் ராணவுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்!

188

IPL விதிமுறையை மீறிய குற்றச்சாட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஷ் அணியின் தலைவர் நிதிஷ் ராணாவுக்கு 24 இலட்சம் ரூபா (இந்திய ரூபாய்) அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சுபர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற போட்டியின் போது இந்த அபராதம் நிதிஷ் ராணாவுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

>> சர்வதேச கிரிக்கெட் விதிமுறையில் புதிய மாற்றம்

கொல்கத்தா நைட் ரைடர்ஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் ஓவர்களை வீசிமுடிக்க தவறியிருந்தது. குறிப்பாக ஒரு ஓவர் பின்னடைவை கண்டிருந்த கொல்கத்தா அணியின் தலைவர் மற்றும் வீரர்களுக்கு அபாரதாம் விதிக்கப்பட்டுள்ளது.

நிதிஷ் ரானாவின் தலைமையின் கீழ் இரண்டாவது தடவையாக குறித்த இந்த தவறினை கொல்கத்தா அணி மீண்டும் செய்துள்ள காரணத்தால் அவருக்கு 24 இலட்சம் ரூபா அபாராதம் விதித்துள்ளது.

அதேநேரம் நேற்றைய போட்டியில் விளையாடிய கொல்கத்தா அணியின் ஏனைய வீரர்களுக்கு 6 இலட்சம் ரூபா அல்லது போட்டிக்கட்டணத்தில் 25 சதவீதம் அபாராதமாக விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<