அவிந்து தீக்ஷனவின் சுழலினால் சம்பியன் பட்டம் வென்ற மாஸ் சிலுவேட்டா

171

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு பிரிவு A வர்த்தக நிறுவனங்களுக்கு இடையில் 26ஆவது முறையாக நடைபெற்று வந்த ஒரு நாள் நொக்-அவுட் தொடரின் இறுதிப் போட்டியில் மாஸ் சிலுவேட்டா அணி, டிமோ அணியை 168 ஓட்டங்களால் அபாரமான முறையில் தோற்கடித்ததுடன் 2019ஆம் ஆண்டு பருவகாலத்திற்கான சம்பியனாகவும் நாமம் சூடியுள்ளது.

மொத்தமாக 10 வர்த்தக நிறுவனங்களின் கிரிக்கெட் அணிகள் பங்குபற்றிய இந்த நொக்-அவுட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு MCA மைதானத்தில் இன்று (28) நடைபெற்றது.

சிங்கர் நிறுவனத்திற்கு எதிராக ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் இலகு வெற்றி

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற டிமோ அணியின் தலைவர் நிசல தராக்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை மாஸ் சிலுவேட்டா அணிக்கு வழங்கினார்.

இதன்படி, முதலில் துடுப்பாடிய மாஸ் சிலுவேட்டா அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களம் வந்த தனன்ஞய லக்ஷான் அரைச்சதம் ஒன்றினை பெற்று உதவினார். தொடர்ந்து, லக்ஷானின் விக்கெட் அவர் 82 ஓட்டங்களை பெற்ற நிலையில் பறிபோனது.

தொடர்ந்து சீரான இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறிகொடுத்து முன்னேறிய மாஸ் சிலுவேட்டா அணிக்கு பின்வரிசையில் துடுப்பாடிய துஷான் ஹேமந்த – சரண நாணயக்கார ஜோடி அதிரடி இணைப்பாட்டம் ஒன்றினை வழங்கியது.

இவர்களின் இணைப்பாட்ட (88) உதவியோடு மாஸ் சிலுவேட்டா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 319 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

Photo Album – 26th Singer-MCA Premier League – Knockout Finals – MAS Silueta vs Dimo

மாஸ் சிலுவேட்டா அணியின் துடுப்பாட்டம் சார்பில் துஷான் ஹேமந்த 65 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 82 ஓட்டங்களினையும், சரண நாணயக்கார 32 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பெளண்டரி என்பவற்றை விளாசி 47 ஓட்டங்களையும் குவித்திருந்தனர்.

மறுமுனையில் டிமோ அணியின் பந்துவீச்சு சார்பாக கவிஷ்க அஞ்சுல 3 விக்கெட்டுக்களையும், அணித்தலைவர் நிசல தாரக்க 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 318 ஓட்டங்களை அடைய தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த டிமோ அணிக்கு நிப்புன் கருணாநாயக்க மற்றும் சரித் குமாரசிங்க  ஆகியோர் நல்ல ஆரம்பத்தை கொடுத்தனர்.

எனினும் மாஸ் சிலுவேட்டா அணியின் இடதுகை சுழல் வீரரான அவிந்து தீக்ஷனவின் அபார பந்துவீச்சினால் டிமோ அணியின் அஸ்தமனம் ஆரம்பானது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான நிப்புன் கருணாநாயக்க – சரித் குமாரசிங்க ஜோடியின் இணைப்பாட்டத்தை 71 ஓட்டங்களுடன் முடிவுக்கு கொண்டு வந்த தீக்ஷன தொடர்ச்சியாக வந்த டிமோ அணியின் ஏனைய துடுப்பாட்ட வீரர்களுக்கும் அச்சுறுத்தலாய் அமைந்தார்.

தொடர்ந்து தீக்ஷனவின் சுழலை எதிர்கொள்ள முடியாமல் டிமோ அணி சடுதியாக விக்கெட்டுக்களைப் பறிகொடுத்ததுடன் 27.2 ஓவர்களில் வெறும் 151 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து போட்டியில் படுதோல்வி அடைந்தது.

டிமோ அணியின் துடுப்பாட்டத்தில் நிப்புன் கருணாநாயக்க 42 ஓட்டங்களுடன் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்ததோடு, சரித் குமாரசிங்க 35 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதேநேரம், ஏனைய டிமோ அணியின் துடுப்பாட்ட வீரர்கள் குறைவான ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்திருந்தனர்.

இலங்கை கட்புலனற்றோர் அணியை வைட்-வொஷ் செய்த இந்திய கட்புலனற்றோர் அணி

டிமோ அணியை தனது சுழல் மூலம் சிதைத்த அவிந்து தீக்ஷன வெறும் 42 ஓட்டங்களை மட்டும் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுக்களை சாய்த்து வர்த்தக நிறுவன தொடரில் மாஸ் சிலுவேட்டா அணி சம்பியன் பட்டம் வெல்ல உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்டநாயகன் விருது மாஸ் சிலுவேட்டா அணியின் தனன்ஞய லக்ஷானிற்கு கொடுக்கப்பட்டிருந்தது.

போட்டியின் சுருக்கம்

மாஸ் சிலுவேட்டா – 319/9 (50) – தனன்ஞய லக்ஷான் 82, துஷான் ஹேமந்த 82, சரண நாணயக்கார 47, கவிஷ்க அஞ்சுல 3/71, நிசல தாரக்க 2/74

டிமோ – 151 (27.2) – நிப்புன் கருணாநாயக்க 42, சரித் குமாரசிங்க 35, அவிந்து தீக்ஷன 7/42, அஞ்செலோ இமானுவேல் 2/10

முடிவு – மாஸ் சிலுவேட்டா அணி 168 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<

Title

Full Scorecard

MAS Sileuta

319/9

(50 overs)

Result

Dimo

151/10

(27.2 overs)

MAS won by 168 runs

MAS Sileuta’s Innings

Batting R B
D Lakshan b R Mendis 82 85
S Fernando b K Anjula 4 7
S Cooray c P Tharanga b S Ashan 0 3
I Samarasooriya lbw by K Anjula 30 33
A Emmanuel c C Kumarasinghe b N Tharaka 16 19
D Rajakaruna c & b P Tharanga 23 46
N Subasinghe c R Mendis b M Perera 10 13
D Hemantha c DNM b N Tharaka 82 85
C Nanayakkara c DNM b K Anjula 47 32
B Sanjeewa not out 1 2
Extras
24
Total
319/9 (50 overs)
Fall of Wickets:
Bowling O M R W E
N Tharaka 10 0 74 2 7.40
K Anjula 10 0 71 3 7.10
S Ashan 6 0 48 1 8.00
T de Silva 7 0 35 0 5.00
R Mendis 3 0 17 1 5.67
M Perera 10 0 47 1 4.70
H Ramanayake 2 0 12 0 6.00
P Tharanga 2 0 10 1 5.00

Dimo’s Innings

Batting R B
N Karunanayake lbw by A Theekshana 42 56
C Kumarasinghe c & b A Emmanuel 35 26
L Abeyrathne c DNM b A Emmanuel 5 9
T de Silva c D Hemantha b A Theekshana 4 8
S Ashan b A Theekshana 0 1
H Ramanayake c DNM b D Hemantha 14 21
N Tharaka c DNM b A Theekshana 10 21
R Mendis st D Rajakaruna b A Theekshana 7 6
K Anjula lbw by A Theekshana 0 1
M Perera c DNM b A Theekshana 24 9
P Tharanga not out 4 7
Extras
6
Total
151/10 (27.2 overs)
Fall of Wickets:
Bowling O M R W E
B Sanjeewa 3 0 6 0 2.00
D Lakshan 4 0 40 0 10.00
N Subasinghe 2 0 14 0 7.00
A Theekshana 9.2 1 42 7 4.57
A Emmanuel 4 0 10 2 2.50
D Hemantha 5 0 38 1 7.60