Home Tamil முதல் நாளில் அபாரம் காட்டிய பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள்

முதல் நாளில் அபாரம் காட்டிய பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள்

1082
Pakistan tour of Sri Lanka 2022 - 1st Test

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் நிறைவில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தமது பந்துவீச்சாளர்களின் சிறந்த ஆட்டத்தோடு வலுப்பெற்றிருக்கின்றது.

>> முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகின்றன. இந்த நிலையில் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று (16) காலியில் ஆரம்பமானது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரட்ன முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமக்காகப் பெற்றிருந்தார்.

இப்போட்டிக்கான இலங்கை அணி தனன்ஞய டி சில்வாவிற்கு மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினை வழங்கியிருக்க, கமிந்து மெண்டிஸ் பெதும் நிஸ்ஸங்க ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது. இதேநேரம் அகா சல்மான் பாகிஸ்தான் அணியில் டெஸ்ட் அறிமுகம் பெற்றிருக்கின்றார்.

இலங்கை பதினொருவர்

திமுத் கருணாரட்ன (தலைவர்), ஓசத பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஞய டி சில்வா, தினேஷ் சந்திமால், நிரோஷன் டிக்வெல்ல, ரமேஷ் மெண்டிஸ், மகீஷ் தீக்ஷன, பிரபாத் ஜயசூரிய, கசுன் ராஜித

பாகிஸ்தான் பதினொருவர்

அப்துல்லா சபீக், இமாம்-உல்-ஹக், அஷார் அலி, பாபர் அசாம் (தலைவர்), அகா சல்மான், மொஹமட் ரிஸ்வான், மொஹமட் நவாஸ், யாசிர் சாஹ், ஹசன் அலி, சஹீன் அப்ரிடி, நஸீம் சாஹ்

பின்னர் போட்டியின் நாணய சுழற்சிக்கு அமைய முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை அணிக்கு ஆரம்பவீரர்களாக திமுத் கருணாரட்ன மற்றும் ஓசத பெர்னாண்டோ ஆகியோர் களம் வந்தனர்.

தொடர்ந்து முன்னேறிய போட்டியில் சஹீன் அப்ரிடி இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரட்வினை போல்ட் செய்ததுடன், இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக மாறிய திமுத் கருணாரட்ன ஒரு ஓட்டத்துடன் ஓய்வறை நடந்தார்.

>> ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகள் T20 உலகக் கிண்ணத்திற்கு தெரிவு

இதனையடுத்து புதிய துடுப்பாட்டவீரராக வந்த குசல் மெண்டிஸ் இரண்டாம் விக்கெட்டுக்காக ஓசத பெர்னாண்டோவுடன் இணைந்து நல்ல இணைப்பாட்டம் ஒன்றுக்கான அடித்தளம் ஒன்றினைப் போட்டிருந்தார். எனினும் யாசிர் சாஹ்வின் அபார பந்துவீச்சோடு குசல் மெண்டிஸின் விக்கெட் பறிபோனது. விக்கெட்காப்பாளரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்த குசல் மெண்டிஸ் 21 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார். குசல் மெண்டிஸை அடுத்து, ஓசத பெர்னாண்டோவின் விக்கெட் அவர் 35 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஹசன் அலியின் பந்துவீச்சில் பறிபோனது.

இதன் பின்னர் புதிய வீரராக வந்த அஞ்செலோ மெதிவ்ஸ் ஓட்டமேதுமின்றி தனது விக்கெட்டினைப் பறிகொடுத்து ஏமாற்றம் தந்தார். இதனால், ஒரு கட்டத்தில் இலங்கை அணி 68 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

தொடர்ந்து முதல் நாளின் மதிய போசணத்தினை அடுத்து இலங்கை அணிக்கு நம்பிக்கை தருவார் என எதிர்பார்க்கப்பட்ட தனன்ஞய டி சில்வா தனது விக்கெட்டினை சஹீன் அப்ரிடியிடம் பறிகொடுத்து 14 ஓட்டங்களுடன் மைதானத்தினை விட்டு வெளியேறினார். தனன்ஞய டி சில்வாவின் பின்னர் நிரோஷன் டிக்வெல்லவும் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றினார். டிக்வெல்லவின் பின்னர் மேலும் இரண்டு விக்கெட்டுக்களை இழந்த இலங்கை கிரிக்கெட் அணி முதல் நாளின் தேநீர் இடைவேளைக்கு முன்னர் 133 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

எனினும் தேநீர் இடைவேளையினைத் தொடர்ந்து இலங்கை அணியின் துடுப்பாட்டத்திற்காக தினேஷ் சந்திமால், மகீஷ் தீக்ஷன ஆகியோர் பெறுமதியான பங்களிப்பு ஒன்றினை வழங்கினர். இதனால், இலங்கை கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸிற்காக 66.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 222 ஓட்டங்கள் எடுத்தது.

>> கொழும்பிலிருந்து காலிக்கு மாற்றப்படும் 2வது டெஸ்ட் போட்டி!

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் தன்னுடைய 22ஆவது டெஸ்ட் அரைச்சதத்தினைப் பூர்த்தி செய்த தினேஷ் சந்திமால் 10 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 76 ஓட்டங்கள் பெற்றார். மறுமுனையில் மகீஷ் தீக்ஷன ஒரு சிக்ஸர் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 38 ஓட்டங்களைப் பெற்று டெஸ்ட் போட்டிகளில் தனது சிறந்த இன்னிங்ஸைப் பதிவு செய்தார்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பில் சஹீன் அப்ரிடி 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, ஹசன் அலி மற்றும் யாசிர் சாஹ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸை அடுத்து தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 18 ஓவர்களுக்கு 2

விக்கெட்டுக்களை இழந்து 24 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது. களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் அஷார் அலி 3 ஓட்டங்களுடனும், பாபர் அசாம் ஒரு ஓட்டத்துடனும் காணப்படுகின்றனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய மற்றும் கசுன் ராஜித ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka
222/10 (66.1) & 337/10 (100)

Pakistan
218/10 (90.5) & 344/6 (127.2)

Batsmen R B 4s 6s SR
Oshada Fernando c Mohammad Rizwan b Hasan Ali 35 49 5 0 71.43
Dimuth Karunaratne b Shaheen Shah Afridi 1 7 0 0 14.29
Kusal Mendis c Mohammad Rizwan b Yasir Shah 21 35 3 0 60.00
Angelo Mathews c Naseem Shah b Yasir Shah 0 15 0 0 0.00
Dinesh Chandimal c Yasir Shah b Hasan Ali 76 115 10 1 66.09
Dhananjaya de Silva b Shaheen Shah Afridi 14 28 2 0 50.00
Niroshan Dickwella c Agha Salman b Shaheen Shah Afridi 4 4 1 0 100.00
Ramesh Mendis c Mohammad Rizwan b Naseem Shah 11 41 1 0 26.83
Prabath Jayasuriya lbw b Mohammad Nawaz 3 9 0 0 33.33
Maheesh Theekshana c Mohammad Rizwan b Shaheen Shah Afridi 38 65 4 1 58.46
Kasun Rajitha not out 12 32 1 0 37.50


Extras 7 (b 1 , lb 3 , nb 3, w 0, pen 0)
Total 222/10 (66.1 Overs, RR: 3.36)
Bowling O M R W Econ
Shaheen Shah Afridi 14.1 3 58 4 4.11
Hasan Ali 12 2 23 2 1.92
Naseem Shah 13 0 53 1 4.08
Yasir Shah 21 4 66 2 3.14
Mohammad Nawaz 6 2 18 1 3.00
Batsmen R B 4s 6s SR
Abdullah Shafique lbw b Prabath Jayasuriya 13 47 2 0 27.66
Imam-ul-Haq lbw b Kasun Rajitha 2 16 0 0 12.50
Azhar Ali lbw b Prabath Jayasuriya 3 41 0 0 7.32
Babar Azam lbw b Maheesh Theekshana 119 244 11 2 48.77
Mohammad Rizwan c Niroshan Dickwella b Ramesh Mendis 19 35 3 0 54.29
Agha Salman lbw b Prabath Jayasuriya 5 15 1 0 33.33
Mohammad Nawaz c Nuwanidu Fernando b Prabath Jayasuriya 5 18 0 0 27.78
Shaheen Shah Afridi lbw b Prabath Jayasuriya 0 1 0 0 0.00
Yasir Shah c Dhananjaya de Silva b Maheesh Theekshana 18 56 1 0 32.14
Hasan Ali c Dinesh Chandimal b Ramesh Mendis 17 21 0 0 80.95
Naseem Shah not out 5 52 1 0 9.62


Extras 12 (b 5 , lb 1 , nb 1, w 5, pen 0)
Total 218/10 (90.5 Overs, RR: 2.4)
Bowling O M R W Econ
Kasun Rajitha 11 2 42 1 3.82
Maheesh Theekshana 25.5 6 68 2 2.67
Prabath Jayasuriya 39 10 82 5 2.10
Ramesh Mendis 13 2 18 2 1.38
Dhananjaya de Silva 2 0 2 0 1.00
Batsmen R B 4s 6s SR
Oshada Fernando c Babar Azam b Yasir Shah 64 125 6 1 51.20
Dimuth Karunaratne lbw b Mohammad Nawaz 16 29 2 0 55.17
Kasun Rajitha lbw b Mohammad Nawaz 7 12 1 0 58.33
Kusal Mendis b Yasir Shah 76 126 9 0 60.32
Angelo Mathews c Babar Azam b Mohammad Nawaz 9 25 1 0 36.00
Dinesh Chandimal not out 94 139 5 2 67.63
Dhananjaya de Silva b Yasir Shah 20 20 2 1 100.00
Niroshan Dickwella b Mohammad Nawaz 12 11 2 0 109.09
Ramesh Mendis b Mohammad Nawaz 22 32 2 0 68.75
Maheesh Theekshana c Mohammad Rizwan b Mohammad Hasnain 11 57 0 0 19.30
Prabath Jayasuriya b Naseem Shah 4 25 1 0 16.00


Extras 2 (b 0 , lb 1 , nb 1, w 0, pen 0)
Total 337/10 (100 Overs, RR: 3.37)
Bowling O M R W Econ
Shaheen Shah Afridi 7 2 21 0 3.00
Mohammad Nawaz 28 2 88 5 3.14
Agha Salman 16 1 53 0 3.31
Yasir Shah 29 2 122 3 4.21
Hasan Ali 12 3 19 1 1.58
Babar Azam 1 0 9 0 9.00
Naseem Shah 7 0 24 1 3.43


Batsmen R B 4s 6s SR
Abdullah Shafique not out 160 408 7 1 39.22
Imam-ul-Haq st Niroshan Dickwella b Ramesh Mendis 35 73 3 0 47.95
Azhar Ali c Dhananjaya de Silva b Prabath Jayasuriya 6 32 0 0 18.75
Babar Azam b Prabath Jayasuriya 55 104 4 1 52.88
Mohammad Rizwan lbw b Prabath Jayasuriya 40 74 2 0 54.05
Agha Salman c Niroshan Dickwella b Prabath Jayasuriya 12 35 1 0 34.29
Hasan Ali c Maheesh Theekshana b Dhananjaya de Silva 5 4 1 0 125.00
Mohammad Nawaz not out 19 34 1 0 55.88


Extras 12 (b 5 , lb 7 , nb 0, w 0, pen 0)
Total 344/6 (127.2 Overs, RR: 2.7)
Bowling O M R W Econ
Kasun Rajitha 9 2 18 0 2.00
Prabath Jayasuriya 56.2 10 133 4 2.37
Ramesh Mendis 33 0 102 1 3.09
Maheesh Theekshana 14 2 44 0 3.14
Dhananjaya de Silva 15 1 33 1 2.20



போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<