கொரோனா பிடியில் ஒலிம்பிக்: அதிரடி தீர்மானத்துக்கு தயாராகும் ஜப்பான்

168

கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் தொற்று நோய் காரணமாக உலகளாவிய ரீதியில் பெரும்பாலான விளையாட்டுப் போட்டிகள் பிற்போடப்பட்டு வருகின்ற நிலையில், எதிர்லரும் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை பிற்போடுவதற்கு சர்வதேச ஒலிம்பிக் குழு தீர்மானித்துள்ளது. 

இதுதொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு ஜப்பான் ஒலிம்பிக் குழுவுடனான பேச்சுவார்த்தையின் பிறகு அறிவிக்கப்படும் என சர்வதேச ஒலிம்பிக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2020 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும், இரத்துச் செய்தல் அல்லது பிற்போடுதல் என்ற பேச்சுக்கு இடமில்லை எனவும் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தோமஸ் பெச் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கு பொறுப்பான அமைச்சராக செயற்பட்டு வருகின்ற ஷெய்கோ ஷிமாடோ கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்த அறிக்கையில்

கொரோனா தொற்று காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா இவ்வருட இறுதி வரை பிற்போடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

எனினும், சர்வதேச ஒலிம்பிக் குழுவின் விதிமுறைகளுக்கு அமைய இவ்வருட இறுதிக்குள் ஒலிம்பிக் விழாவை நடத்துவது கட்டாயம். எனினும், சர்வதேச ஒலிம்பிக் குழு மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றி எந்தவொரு நிலைமைக்கும் முகங்கொடுக்க ஜப்பான் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்

இதேநேரம், ஜப்பான் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு மே மாதம் வரை இந்த வைரஸ் தொற்று குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என சர்வதேச ஒலிம்பிக் குழு உறுப்பினர் டி. பவுண்ட் தெரிவித்துள்ளதுடன், அவ்வாறு நிலைமை மோசமாக இருக்குமாயின் ஒலிம்பிக் விளையாட்டு விழாவை பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்

செல்பி, ஆட்டோகிராப் வழங்க மறுக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி

இலங்கைக்கு சுற்றுலா வந்திருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் ….

இதுஇவ்வாறிருக்க, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை ஆரம்பிக்க முன் சம்பிரதாயமாக நடைபெறுகின்ற ஒலிம்பிக் தீபச் சுடரேற்றம் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் நேற்று (12)  நடைபெறவுள்ளதுடன், இதன்போது பார்வையார்களுக்கு அனுமதி வழங்காமல் ஒலிம்பிக் வைபவத்தை சிறியதாக நடாத்துவதற்கு ஹெலனிக் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளது.

பண்டைய ஒலிம்பிக் விளையாட்டரங்கில் பிரதம பெண் குருவினால் சூரிய கதிர்களிலிருந்து ஏற்றப்படும் ஒலிம்பிக் தீபச் சுடரை முதலாவது நபராக அனா கோராகாக்கி ஏந்திச் செல்லவுள்ளார்.  

இதன்படி, ஒலிம்பிக் தொடர் ஓட்ட வரலாற்றில் பெண் ஒருவர் முதல் நபராக சுடரை ஏந்திச் செல்வது இதுவே முதல்முறையாகும்

இந்த நிகழ்வில், கிரேக்க ஜனாதிபதி, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் ஆகியோருடன் டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கட்டாரில் நடைபெறவுள்ள 2022 ……

இதேவேளை, உலகம் முழுவதும் ஒரு இலட்சத்து 22 ஆயிரத்து 42 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. இதில் 3,497 பேர் பலியாகியுள்ளனர்.  

உலகம் முழுவதும் வேகமாக பரவி, மனித இனத்துக்கு மிகப்பெரிய சவாலாக திகழும் இந்த வைரஸ் நோய்க்கு மருந்து இல்லை. மிகப்பெரிய அளவில் அழிவை ஏற்படுத்துவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மெய்வல்லுனர், கால்பந்து, றக்பி, மோட்டார் கார்ப்பந்தயம் உள்ளிட்ட பல சர்வதேசப் போட்டிகள் காலவரையறையின்றி பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டன

இதில் சீனாவின் நாஞ்சிங்கில் இன்று (13) முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை நடைபெறவிருந்த உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர், தாய்வான், தாய்லாந்து மற்றும் சீனாவில் நடைபெறவிருந்த 3 ஆசிய கிண்ணப் போட்டிகள், ஜூன் மாதம் தென் கொரியாவில் நடைபெறவிருந்த ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடர், தென்கொரியாவில் இம்மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த உலக மேசைப்பந்து சம்பியன்ஷிப் போட்டித் தொடர், குத்துச்சண்டை, பெட்மின்டன் உள்ளிட்ட ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகள் ஆகியவற்றை பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<