பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் ஒத்திவைப்பு

197

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கட்டாரில் நடைபெறவுள்ள 2022 பிஃபா உலகக் கிண்ணப் போட்டிக்கான, அடுத்துவரும் ஆசிய மண்டல தகுதிகாண் போட்டிகளை ஒத்திவைப்பதற்கு பிஃபா மற்றும் ஆசிய கால்பந்து சம்மேளனம் (AFC) இணங்கியுள்ளன. ஆசியாவின் உறுப்பு நாடுகளின் ஆலோசனையை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இலங்கை கால்பந்தாட்ட அணியின் புதிய பயிற்சியாளராக அமிர் அலஜிக் நியமனம்

இலங்கை கால்பந்தாட்ட அணியின் புதிய தலைமைப் ……

இதன்படி, 2020 மார்ச் 23-31 மற்றும் 2020 ஜூன் 1-9 காலப்பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட சர்வதேச போட்டி அட்டவணைகள் பின்னர் ஒரு திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்படும் போட்டிகளின் விபரம் பற்றி பிஃபா மற்றும் ஆசிய கால்பந்து சம்மேளனம் மேலும் ஆராயும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், 2020 மார்ச் மற்றும் ஜூன் மாத காலப்பகுதியில் சர்வதேச போட்டிகளில் இரு தரப்பு உடன்படிக்கையில் ஆடுவதாயின் பிஃபா மற்றும் AFC இடம் இருந்து முன் அனுமதியை பெற்று போட்டியில் சம்பந்தப்பட்ட அனைத்து தனிநபர்களின் பாதுகாப்புக்கு தேவையான தரங்களை பூர்த்தி செய்வதற்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை அணி இந்தத் தகுதிகாண் போட்டியில் மார்ச் 26 ஆம் திகதி பியொங்யானில் வட கொரியாவை எதிர்கொள்ளவிருப்பதோடு, தொடர்ந்து மார்ச் 31 இல் கொழும்பில் தென் கொரிய அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதனை அடுத்து H குழுவின் இறுதிப் போட்டியில் ஆட ஜூன் 4 ஆம் திகதி இலங்கை அணி லெபனான் செல்லவுள்ளது.  

துர்க்மனிஸ்தானில் நடைபெறவுள்ள 2020 AFC புட்சால் சம்பியன்ஷிப் போட்டிகளையும் ஒத்திவைப்பதற்கு பிஃபா மற்றும் ஆசிய கால்பந்து சம்மேளனம் உடன்பட்டுள்ளன. இந்தப் போட்டி 2020 ஓகஸ்ட் 5-16 ஆம் திகதிகளில் லிதுவேனியாவில் நடைபெறவிருக்கும் பிஃபா புட்சால் உலகக் கிண்ணத்திற்கான தகுதிகாண் போட்டியாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கால்பந்து அணியுடன் இணைகிறார் வசீம்

எனினும், ஒலிம்பிக் கால்பந்து தொடருக்கான எதிர்வரும் தகுதிகாண் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும் பெண்களுக்கான வட கொரியா மற்றும் சீனாவுக்கு இடையிலான ஒலிப்பிக் தகுதிகாண் பிலே ஓப் போட்டி தவிர்க்கப்படலாம். இந்த போட்டி 2020 ஜூன் 1-10 சர்வதேச போட்டி அட்டவணைக் காலத்தில் இடம்பெறுகிறது.   

கொவிட்-19 என பெயரிடப்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தொடர்பான நிலைமை குறித்து பிஃபா மற்றும் ஆசிய கால்பந்து சம்மேளனம் தொடர்ந்து ஆராய்ந்து வருவதோடு தனிநபர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை பாதுகாக்கும் நோக்குடன் 2022 உலகக் கிண்ணத்திற்கான ஆசிய தகுதிகாண் போட்டிகளில் மேலும் மாற்றங்கள் செய்வதற்கான தேவைகள் பற்றி தீர்மானிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<