இராணுவ கழகத்துக்காக பந்துவீச்சில் அசத்திய ரத்னராஜ் தேனுரதன்

Major Clubs Limited Over Tournament 2022

2192

இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரதான கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் 10 போட்டிகள் நேற்று (16) நடைபெற்றன.

இதில் ப்ளூம்பீல்ட் கழகத்துக்கு எதிரான போட்டியில் ஏஸ் கெபிடல் கிரிக்கெட் கழகமும், சரசென்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான முவர்ஸ் விளையாட்டுக் கழகமும் வெற்றிகளை ஈட்டி முறையே குழு A இல் முதலிரெண்டு இடங்களைப் பிடித்தன.

மறுபுறத்தில் பாணந்துறை விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில் இராணுவ விளையாட்டுக் கழகமும், குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் கொழும்பு கிரிக்கெட் கழகமும் வெற்றிகளைப் பதிவு செய்து B குழுவில் முதலிரெண்டு இடங்களைப் பெற்றுக் கொண்டன.

இந்த நிலையில், ராகம கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் கடற்படை விளையாட்டுக் கழகத்தின் சச்சித்ர சேனாநாயக்க சதமடித்து அசத்தியிருந்தார். List A போட்டிகளில் அவரது 2ஆவது சதம் இதுவாகும். 37 வயதான சச்சித்ர, இம்முறை முதல்தர ஒருநாள் தொடரில் கடற்படை கழகத்துக்காக சகலதுறையிலும் பிரகாசித்த வருகின்ற வீரராக வலம்வருவதுடன். இதுவரை 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இதனிடையே, இம்முறை முதல்தரப் போட்டிகளில் பாணந்துறை விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில் முதல் தடவையாhகக் களமிறங்கிய ரத்னராஜ் தேனுரதன், இராணுவ கழகத்துக்காக பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இது அவரது அறிமுக லிஸ்ட் ஏ போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பைச் சேர்ந்த 23 வயதான வலதுகை மித வேகப் பந்துவீச்சாளரான இவர், கடந்த சில ஆண்டுகளாக இராணுவ கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடி வருகின்றார்.

அதேபோல, பாணந்துறை விளையாட்டுக் கழகத்துடனான போட்டியில் இராணுவ விளையாட்டுக் கழகம் 116 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியதுடன், குறித்த போட்டியில் துடுப்பாட்டத்தில் அதிரடி காண்பித்த அந்த அணியின் தலைவர் திசர பெரேரா அரைச் சதம் (56) அடித்து அசத்தினார்.

போட்டியின் சுருக்கம்

இராணுவ விளையாட்டுக் கழகம் எதிர் பாணந்துறை விளையாட்டுக் கழகம்

இராணுவ விளையாட்டுக் கழகம் – 252/8 (45) – திசர பெரேரா 56, மஹேஷ் குமார 43, யொமேஷ் ரணசிங்க 3/42, தனுக ரணசிங்க 2/22

பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 137/10 (29.4) – நிமேஷ் விமுக்தி 36, கோஷான் தனுக 26, சுமிந்த லக்ஷான் 3/24, ரத்னராஜ் தேனுரதன் 3/43

முடிவு – இராணுவ விளையாட்டுக் கழகம் 116 ஓட்டங்களால் வெற்றி

ராகம கிரிக்கெட் கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்

ராகம கிரிக்கெட் கழகம் – 234/10 (49.1) – ஜனித் லியனகே 71, சமிந்த பெர்னாண்டோ 40, ரொமேஷ் சுரங்க 3/29

கடற்படை விளையாட்டுக் கழகம் – 235/7 (47.3) – சச்சித்ர சேனாநாயக்க 114*, சன்ஜீவ் குமாரஸ்வாமி 36, ஜானக சம்பத் 3/35, கல்ஹார சேனாரட்ன 1/33

முடிவு – கடற்படை விளையாட்டுக் கழகம் 3 விக்கெட்டுகளால் வெற்றி

ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் எதிர் Ace Capital கிரிக்கெட் கழகம் 

ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 203/10 (45.4) – அஷான் பெர்னாண்டோ 47, மஓசத பெர்னாண்டோ 38, தனுக தாபரே 2/22, நிம்சர அதரகல்ல 2/37

Ace Capital கிரிக்கெட் கழகம் – 204/7 (41.2) – டெரோன் பாஸ்கரன் 55, லசித் க்ரூஸ்புள்ளே 50, சானக கொமசாரு 3/54, மாதவ வர்ணபுர 2/23

முடிவு – Ace Capital கிரிக்கெட் கழகம் 3 விக்கெட்டுகளால் வெற்றி

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 270/9 (50) – ரவிந்து ரஸன்த 68, தனன்ஜய லக்ஷான் 56, அஷேன் பண்டார 2/25, சதுரங்க குமார 2/53

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 198/10 (39.3) – சதுரங்க குமார 61, ரன்துனு கங்கானாத் 40, சமோத் பட்டகே 4/34, முதித லக்ஷான் 3/43

முடிவு – கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 72 ஓட்டங்களால் வெற்றி

களுத்துறை நகர கழகம் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்

களுத்துறை நகர கழகம் – 181/7 (42) – இஷார மதுவன்த 57, அபிஷேக் ஆனந்த குமார 28, ரஜீவ வீரசிங்க 3/27, சந்துன் அபேவர்தன 2/27

லங்கன் கிரிக்கெட் கழகம் – 183/4 (33.5) – ரவிந்து ரத்நாயக 82, ரஜீவ வீரசிங்க 64, கௌஷான் குலசூரிய 2/25, கனிஷ்க மதுவன்த 1/36

முடிவு – லங்கன் கிரிக்கெட் கழகம் 6 விக்கெட்டுகளால் வெற்றி

விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் கண்டி சுங்க கிரிக்கெட் கழகம்

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 93/10 (29.5) – ஹசித் பெரேரா 20, லசந்த ருக்மால் 16, மெதூஷன் திலின 4/25, அயேஷ் ஹர்ஷன 2/7

கண்டி சுங்க கிரிக்கெட் கழகம் – 95/2 (18) – திமிர மல்ஷான் 44, அகீல் இன்ஹாம் 38, நதீர இஷான் 1/15

முடிவு – கண்டி சுங்க கிரிக்கெட் கழகம் 8 விக்கெட்டுகளால் வெற்றி

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 165/10 (49.2) – கயான் மனீஷான் 61, டில்ஷான் கொல்லுரே 23, அஷான் பிரியன்ஜன் 3/39, நுவன் துஷார 3/33

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 167/6 (28.3) – அஷான் பிரியன்ஜன் 49, பவன் ரத்நாயக 44, நிலன்க பிரேமரட்ன 2/22

முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் 4 விக்கெட்டுகளால் வெற்றி

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 116/10 (39.2) – டில்ஷான் முனவீர 21, ஜீவக ஷேசான் 21, ஹர்ஷஜித் ருஷான் 3/6, சந்துன் மதுஷங்க 3/15

காலி கிரிக்கெட் கழகம் – 117/9 (41.5) – ரவிந்து செம்புக்குட்டிகே 40, ஹர்ஷஜித் ருஷான் 38. தனுஷ்க சந்தருவன் 4/35, டில்ஷான் முனவீர 3/20

முடிவு – காலி கிரிக்கெட் கழகம் ஒரு விக்கெட்டினால் வெற்றி

முவர்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம்

முவர்;ஸ் விளையாட்டுக் கழகம் – 230/10 (48.1) – பபசர வதுகே 76, பசிந்து சூரியபண்டார 35, கவிக டில்ஷான் 3/40, உதித் மதுஷான் 2/36

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 116/9 (27.2) – ஆகாஷ் சேனாரட்ன 18, சந்துன் மெண்டிஸ் 18, தினுக டில்ஷான் 3/19, இம்தியாஸ் சல்ஷா 2/1

முடிவு – முவர்ஸ் விளையாட்டுக் கழகம் 114 ஓட்டங்களால் வெற்றி

நுகேகொட விளையாட்டுக் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

நுகேகொட விளையாட்டுக் கழகம் – 191/9 (50) – நயன பெர்னாண்டோ 69, ரனித லியனராச்சி 40, அவிந்து தீக்ஷன 3/24, புலின தரங்க 2/48

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 194/4 (36.4) – கசுன் விதுர 86*, கவிந்து இரோஷ் 36, சமிந்த பண்டார 3/52, ராகுல் குணசேகர 1/39

முடிவு – சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 6 விக்கெட்டுகளால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<