பாகிஸ்தான் சென்று 7 தங்கம், 5 வெள்ளி பதக்கங்களை வென்ற இலங்கை அணி

Sawate Kickboxing championship 2022

573

பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையில் நடைபெற்ற 2வது சவேட் குத்துச்சண்டை (Sawate kick boxing) சம்பியன்ஷிப்பில் பங்கேற்ற இலங்கை அணி 7 தங்கம் மற்றும் 5 வெள்ளிப்பதக்கங்களை வெற்றிக்கொண்டு சம்பியனாக மகுடம் சூடியது.

பாகிஸ்தானின் தலைநகரான லாஹூரில் சவேட் கிங்பொக்ஸிங் தொடர் கடந்த 13ம் திகதி ஆரம்பித்து நடைபெற்றுவந்தது. இதில், இலங்கை சார்பில் போட்டியிட்ட 7 வீர, வீராங்கனைகள் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளனர்.

>>சிரேஷ்ட வீராங்கனைகளுக்கான தேசிய வலைப்பந்தாட்ட தொடர் இம்மாதம்

இதில் முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவி பெண்களுக்கான 25 வயதுக்குட்ப்பட்ட 48-52 கிலோகிராம் எடைப்பிரிவில் (Combat) போட்டியிட்டு தங்கப்பதக்கத்தை வென்றார். இவருடன், கண்டி – ஹுலுகங்கை பகுதியைச் சேர்ந்த ஏ.எம். சாதீர் 25 வயதுக்குட்பட்ட 70-75 கிலோகிராம் எடைப்பிரிவில் (Assault) போட்டியிட்டு தங்கப்பதக்கத்தை வென்றார்.

இவர்களுடன் 30 வயதின் கீழ் 55-60 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட நாவலப்பிட்டியைச் சேர்ந்த அக்மல் அஹமட் (Assault), 10 வயதுக்குட்பட்ட 20-24 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட கம்பளையைச் சேர்ந்த எம்.எம்.எம்.மொஹவ்வியா (Assault), 30 வயதின் கீழ் 60-65 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட ரஸ்வி பசேலா (Assault), 25 வயதுக்குட்பட்ட 56-60 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட எம்.எம்.எம்.மிர்ஷாட் (Assault) மற்றும் பிரசாத் விக்ரமசிங்க (Assault) ஆகியோர் தங்கப்பதக்கங்களை வென்றனர்.

இவர்களுக்கு அடுத்தப்படியாக 5 வெள்ளிப்பதக்கங்களையும் இலங்கை அணியினர் வென்றிருந்தனர். இதில், ஆண்களுக்கான 30 வயதின் கீழ் 70-75 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட உலப்பனை பகுதியைச்சேர்ந்த ஹகீம் லாபீர் (Assault), 20 வயதின் கீழ் 70-75 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட நாவலப்பிட்டியைச்சேர்ந்த சுஹைல் அக்தார் (Assault), 30 வயதின் கீழ் 70-75 எடைப்பிரிவில் போட்டியிட்ட நாவலப்பிட்டியைச் சேர்ந்த எம்.என்.எம். மன்ஷில் (Combat), 18 வயதின் கீழ் 48-52 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட  கண்டி – பொல்கொலையைச் சேர்ந்த கயான் பண்டார (Combat) மற்றும் பெண்களுக்கான 20 வயதுக்குட்பட்ட 40-44 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட கம்பளையைச் சேர்ந்த எஸ்.எச்.பஹ்மா (Combat) ஆகியோர் வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளனர்.

மேற்குறித்த வீர, வீராங்கனைகள் பதக்கங்களை வென்றுள்ள நிலையில், இவர்களுடன் தேசிய பயிற்றுவிப்பாளர் பிரசாத் விக்ரமசிங்க பயணித்திருந்தார்.  இவர் மாத்திரமின்றி, கண்டி மாவட்ட பயிற்றுவிப்பாளர் டி.எம். நவ்ஷாட், நாவலப்பிட்டி பயிற்றுவிப்பாளர் எச்.எச்.ஹுசைன் மற்றும் நிஷித டயஸ் ஆகியோரும் மேற்குறித்த வீரர்களுக்கு பயிற்சிகளை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதக்கம் வென்ற வீர, வீராங்கனைகள்

  • கணேஸ் இந்துகாதேவி (U25, 48-52KG, Combat) – தங்கம்
  • ஏ.எம். சாதீர் (U25, 70-75 KG, Assault) – தங்கம்
  • அக்மல் அஹமட் (U30, 55-60 KG, Assault) – தங்கம்
  • எம்.எம்.எம்.மொவ்வியா (U10, 20-24 KG, Assault) – தங்கம்
  • ரஸ்வி பசேலா – (U30, 60-65 KG, Assault) – தங்கம்
  • எம்.எம்.எம்.மிர்ஷாட் (U25, 56-60 KG, Assault) – தங்கம்
  • பிரசாத் விக்ரமசிங்க – தங்கம்
  • ஹகீம் லாபீர் – (U30, 7-75 KG, Assault) – வெள்ளி
  • சுஹைல் அக்தார் (U20, 70-75 KG, Assault) – வெள்ளி
  • எம்.என்.எம். மன்ஷில் – (U30, 70-75KG, Combat) – தங்கம்
  • கயான் பண்டார – (U18, 48-52KG, Combat) – வெள்ளி
  • எஸ்.எச்.பஹ்மா – (U20, 40-44KG, Combat) – வெள்ளி

>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<