கொரோனா பீதியினால் ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு

91
2020 olympics

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று நோய் காரணமாக 2020 ஒலிம்பிக் போட்டிகளை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபோ உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.  

இதுதொடர்பில் பிபிசி செய்திச் சேவைக்கு அவர் வழங்கிய செவ்வியில், எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகவிருந்த டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.  

இதுதொடர்பில் சர்வதேச ஒலிம்பிக் பேரவையின் தலைவருக்கு தான் உத்தியோகபூர்வமாக அறிவித்ததாகவும், அதற்கு அவர் 100 சதவீத சம்மதத்தை தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 32ஆவது ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 9ஆம் திகதி வரை நடைபெறவிருந்தது.

கொரோனா பிடியில் ஒலிம்பிக்: அதிரடி தீர்மானத்துக்கு தயாராகும் ஜப்பான்

கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் தொற்று நோய் காரணமாக உலகளாவிய

எனவே, உலக மகா யுத்தங்களின் போது இவ்வாறு ஒலிம்பிக் போட்டிகள் இரத்து செய்யப்பட்டிருந்தாலும், ஒலிம்பிக் ஒத்திவைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்

முன்னதாக, 1916 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா முதலாம் உலகப் போரின் காரணமாக இரத்து செய்யப்பட்டது. அதேபோல் 1940 மற்றும் 1944 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கோடைகால மற்றும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்கள் இரண்டாம் உலகப் போரின் காரணமாக இரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில், 1976, 1980 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ஒருசில நாடுகள் புறக்கணித்தாலும், அந்த அனைத்து விழாக்களும் திட்டமிட்டபடி நடைபெற்றமை சிறப்பம்சமாகும்

கொரோனாவினால் இலங்கையின் விளையாட்டுத் துறையில் ஏற்பட்ட மாற்றம்

சீனாவில் உருவாகி, இன்று உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும்

உலகின் மிகப் பெரிய விளையாட்டு விழாவான ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு ஜப்பான் கடந்த இரண்டு வருடங்களாக, பல திட்டங்களை முன்னெடுத்து வந்தன

குறிப்பாக அரசின் பெருமளவான நிதியினால் கடந்த இரண்டு வருடங்களாக உருவாக்கப்பட்டு வந்த பிரமாண்ட விளையாட்டு அரங்குகள் போட்டிகளை நடத்த தயாராக இருந்தன.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் வேகமாக பரவி வருவதால் ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைக்க வேண்டும் என்று பெரும்பாலான நாடுகளைச் சேர்ந்த ஒலிம்பிக் சங்கங்களும் வலியுறுத்தி வந்தன

அத்துடன், ஒலிம்பிக் பதக்கம் வென்ற முன்னணி வீர, வீராங்கனைகளும் இந்த போட்டியை ஒத்திவைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர்

சமீபத்தில் அமெரிக்க நீச்சல் சங்கம், நோர்வே ஒலிம்பிக் சங்கம், பிரான்ஸ் நீச்சல் சங்கம், அமெரிக்க மெய்வல்லுனர் சம்மேளனம், உலக மெய்வல்லுனர் சம்மேளனம் ஆகியவை ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைக்க வேண்டும் என்று வற்புறுத்தி இருந்தன.

இலங்கையர்களுக்கு, இலங்கை கிரிக்கெட் வீரர்களின் அறிவுரை

முழு இலங்கையினையும் கொரோனா வைரஸ் பீதி ஆட்கொண்டிருக்கும் நிலையில், இலங்கை அரசாங்கமும், இலங்கையின் சுகாதாரத்துறையும் இந்த வைரஸ் பரவுவதனை தடுக்க

மறுபுறத்தில், 56 வருடங்களுக்கு பிறகு கிடைத்து இருக்கும் ஒலிம்பிக் வாய்ப்பை நழுவ விட்டு விடக்கூடாது என்பதில் ஜப்பான் அரசாங்கமும் எல்லாவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தன.

ஒலிம்பிக் விழா நடைபெறுவதற்கு இன்னும் நான்கு மாதங்கள் இருப்பதால் அதற்குள் நிலைமை சரியாகி விடும் என்றும் போட்டியை திட்டமிட்டபடி நடத்தி விடலாம் என்றும் சர்வதேச ஒலிம்பிக் பேரவையும், போட்டி அமைப்பாளர்களும் நம்பிக்கை வெளியிட்டு வந்தனர். ஆனாலும், ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைப்பது தான் சரியானது என்று பல்வேறு நாடுகளில் இருந்தும் அழுத்தங்கள் அதிகரித்து வந்தன.

இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டியை திட்டமிட்டபடி நடத்த முடியுமா? அல்லது தள்ளி வைக்கலாமா? என்பது குறித்து எல்லா அம்சங்கள் பற்றியும் போட்டியில் பங்கேற்கும் அனைத்து தரப்பினரிடமும் முழுமையாக ஆலோசனை நடத்தி எதிர்வரும் நான்கு வாரங்களுக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் பேரவை தெரிவித்திருந்தது

கனடா விலகல்

கனடா ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் சங்கங்கள், டோக்கியோ ஒலிம்பிக், பரா ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டால் அதில் பங்கேற்காது என்றுஅறிவித்தன

பிரித்தானிய ஒலிம்பிக் அமைப்பின் தலைவர், ஜப்பானின் டோக்கியோவுக்கு தங்கள் நாட்டு வீரர்களை அனுப்ப விரும்பவில்லை என அறிவித்திருந்தார்.

அதேபோல் அவுஸ்திரேலிய ஒலிம்பிக் சங்கம், 2021இல் நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு மெய்வல்லுனர் வீரர்கள் தயாராகுங்கள் என்று சில நாட்களுக்கு முன்பு அறிவுறுத்தியது

கொரோனா வைரஸும் கால்பந்து உலகும்

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா, இத்தாலி சீரி A, பிரான்ஸ் லீக் 1 மற்றும்

ஆனால் சர்வதேச ஒலிம்பிக் பேரவையின் தலைவர் தோமஸ் பக், ‘ஒலிம்பிக் போட்டியை இரத்து செய்வது பிரச்னைகளுக்கு தீர்வாகாது. அதனால் போட்டியை நடத்துவதற்கான பணிகள் தொடர்கின்றனஎன்று கூறியிருந்தார்

அதேநேரத்தில் தோமஸ் பாக் சில நாட்களுக்கு முன்பு விளையாட்டு வீரர்களுக்கு எழுதிய கடிதமொன்றில், ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதை விட மனித வாழ்க்கை முக்கியமானதுஎன்று எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானின் நிலைப்பாடு 

இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்படலாம் என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சூசகமாக தெரிவித்துள்ளார். ஜப்பான் பாராளுமன்றத்தில் அவர் நேற்று பேசுகையில்,  

முழுமையான ஒலிம்பிக் போட்டியை நடத்த வேண்டும் என்பதில் ஜப்பான் உறுதியாக இருக்கிறது. இது கடினமானால், விளையாட்டு வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு போட்டியை தள்ளிவைப்பதற்கான முடிவை எடுப்பது தவிர்க்க முடியாததாகி விடும். ஆனால் போட்டியை இரத்து செய்யும் திட்டம் இல்லைஎன்று தெரிவித்தார்.

Shinzo Abeஇதுவரை ஜூலை 24ஆம் திகதி திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கும் என்று உறுதியாக சொல்லப்பட்டு வந்துள்ள நிலையில், ஜப்பான் பிரதமரின் உரையானது ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதை உறுதி செய்தது.

இந்த நிலையில், 2020 ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபோ இன்று (24) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

கொரோனாவிற்கு எதிராக போராட இலங்கை கிரிக்கெட் சபை நிதி உதவி

இலங்கையின் மிகப் பெரிய சுகாதாரப் பிரச்சினையாக மாறியிருக்கும் கொரோனா வைரஸிற்கு எதிராக போராட, இலங்கை அரசாங்கத்திற்கு 25 மில்லியன் ரூபாவை

ஐஒசி என்ன சொல்கிறது?

ஒலிம்பிக் விளையாட்டு விழா குறித்து சர்வதேச ஒலிம்பிக் பேரவை விரைவில் ஆலோசனை நடத்த உள்ளது.

presidentஇதுகுறித்து அதன் தலைவர் தோமஸ் பக் கூறியதாவது:- 

ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும். அத்துடன், ஒலிம்பிக் போட்டிகளுக்கான புதிய திகதி அறிவிக்கப்படும்

ஜப்பான் வந்தடைந்தது ஒலிம்பிக் ஜோதி

பழங்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற கிரீஸின் ஒலிம்பியாவில் கடந்த 12ஆம் திகதி ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது. கொரோனா பாதிப்பால் பார்வையாளர்கள் எவரும் இன்றி இந்த நிகழ்வு நடைபெற்றது

பின்னர் வியாழக்கிழமை கிரீஸ் விளையாட்டு அமைச்சர் ஸ்பைரோஸ் காப்ரலோஸ் ஒலிம்பிக் ஜோதியை ஜப்பான் ஒலிம்பிக் குழு பிரதிநிதியும், நீச்சல் வீராங்கனையுமான நவாகோ இமாடோவிடம் வழங்கினார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா என்ற நிலையில் கிரீஸில் இருந்து தனி விமானம் மூலம் ஒலிம்பிக் ஜோதி கடந்த வெள்ளிக்கிழமை ஜப்பானை வந்தடைந்தது.

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் 3 தங்கம் வென்ற சவோரி யோஷிடா, 3 முறை ஜூடோ சம்பியனான டடாஹிரோ நொமுரா ஆகியோர் ஒலிம்பிக் ஜோதியை பெற்றுக் கொண்டனர்.

பின்னர் அவர்கள் அதை சம்பிரதாயப்படி ஏற்றிய பின், டோக்கியோ ஒலிம்பிக் அமைப்புக் குழுத் தலைவர் யோஷிரோ மோரியிடம் ஒப்படைத்தனர்.

மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க