Home Tamil கீரினின் சதத்துடன் முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய A அணி வெற்றி

கீரினின் சதத்துடன் முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய A அணி வெற்றி

174

சுற்றுலா அவுஸ்திரேலியா A மற்றும் இலங்கை A கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டியில், அவுஸ்திரேலியா A அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய A கிரிக்கெட் அணி, இலங்கை A அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பவற்றில் ஆடுகின்றது.

>>இரண்டாவது T20I இல் மிச்சல் ஸ்டார்க்கிற்கு ஓய்வு

இந்த நிலையில் இந்த சுற்றுப்பயணத்தின் முதல்கட்டமாக இரு அணிகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று (08) ஆரம்பமாகியது.

கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய A அணியின் தலைவர் அலெக்ஸ் கெரி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை, இலங்கை A வீரர்களுக்கு வழங்கினார்.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை A அணிக்கு ஒசத பெர்னாண்டோ மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் சிறந்த ஆரம்பத்தினை வழங்கினர். இதில் ஒசத பெர்னாண்டோ அரைச்சதம் பெற்று 82 பந்துகளில் 7 பௌண்டரிகள் அடங்கலாக 65 ஓட்டங்கள் பெற்றார். அதேநேரம், கமிந்து மெண்டிஸ் 42 ஓட்டங்களை எடுத்தார்.

பின்னர் இலங்கை A அணியின் தலைவரான தனன்ஞய டி சில்வா, அசேன் பண்டார ஆகியோரும் அபார ஆட்டத்தினை வெளிப்படுத்த இலங்கை A அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 297 ஓட்டங்கள் எடுத்தது.

இலங்கை A அணியின் துடுப்பாட்டம் சார்பில் தனன்ஞய டி சில்வா 70 பந்துகளில் 10 பௌண்டரிகள் அடங்கலாக 68 ஓட்டங்கள் எடுக்க, அஷேன் பண்டார 46 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 48 ஓட்டங்கள் எடுத்தார். இதேநேரம் துனித் வெலால்கே 33 ஓட்டங்களுடன் தனது பங்களிப்பினை வழங்கினார்.

மறுமுனையில் அவுஸ்திரேலிய A அணியின் பந்துவீச்சு சார்பில் மார்க் ஸ்டேகேட்டே, மற்றும் டொட் மேர்பி ஆகியோர் 2 விக்கெட்டுகள் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 298 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய, அவுஸ்திரேலிய A அணி போட்டியின் வெற்றி இலக்கினை 47.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரய் இழந்து 298 ஓட்டங்களுடன் அடைந்தது.

>>டிக்கெட் வருமானத்தை நன்கொடையாக வழங்கும் இலங்கை கிரிக்கெட்

அவுஸ்திரேலிய A அணியின் வெற்றி இலக்கினை அடைவதற்கு சதம் கடந்து உதவிய கெமரோன் கீரின் 111 பந்துகளுக்கு 9 பெளண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கலாக 119 ஓட்டங்களைப் பெற்றிருக்க, மேட் ரென்சோவ் 68 ஓட்டங்களை எடுத்திருந்தார். இன்னும் ஆட்டமிழக்காமல் இருந்த அலெக்ஸ் கெரி 52 ஓட்டங்களை எடுத்து அவுஸ்திரேலிய A அணியின் வெற்றிக்கு உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை A அணியின் பந்துவீச்சில் துனித் வெலால்கே 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருக்க, புலின தரங்க ஒரு விக்கெட்டினைச் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் இலங்கை A – அவுஸ்திரேலிய A அணிகள் இடையிலான இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டி, வெள்ளிக்கிழமை (08) ஆரம்பமாகின்றது.

போட்டியின் சுருக்கம்


Result


Sri Lanka A Team
297/7 (50)

Australia A Team
298/3 (47.4)

Batsmen R B 4s 6s SR
Lasith Croospulle c  Alex Carey b Mark Steketee 2 2 0 0 100.00
Oshada Ferenado c Aaron Hardie b Todd Murphy 65 82 7 0 79.27
Kamindu Mendis c & b Matthew Kuhnemann 42 47 4 2 89.36
Dhananjaya Lakshan c Nic Maddinson b Aaron Hardie 68 70 10 0 97.14
Niroshan Dickwella lbw b Todd Murphy 10 16 0 0 62.50
Ashen Bandara run out ( Alex Carey) 48 46 3 1 104.35
Dunith Wellalage c Todd Murphy b Mark Steketee 33 30 0 2 110.00
Dhananjaya Lakshan not out 4 5 0 0 80.00
Pulina Tharanga not out 11 4 0 1 275.00


Extras 14 (b 1 , lb 3 , nb 2, w 8, pen 0)
Total 297/7 (50 Overs, RR: 5.94)
Bowling O M R W Econ
Mark Steketee 10 0 72 2 7.20
Aaron Hardie 10 1 52 1 5.20
Matthew Kuhnemann 10 1 50 1 5.00
Todd Murphy 10 0 53 2 5.30
Tanveer Sangha 10 0 66 0 6.60


Batsmen R B 4s 6s SR
Josh Philippe b Dunith Wellalage 5 12 0 0 41.67
Henry Hunt c Dilshan Madusanka b Dunith Wellalage 36 45 4 0 80.00
Matt Renshaw b Pulina Tharanga 68 69 8 0 98.55
Cameron Green not out 119 111 9 3 107.21
 Alex Carey not out 52 51 5 0 101.96


Extras 18 (b 2 , lb 4 , nb 2, w 10, pen 0)
Total 298/3 (47.4 Overs, RR: 6.25)
Bowling O M R W Econ
Dilshan Madusanka 8 0 58 0 7.25
Pramod Madushan 8.4 1 43 0 5.12
Dunith Wellalage 8 0 55 2 6.88
Dhananjaya de Silva 7 0 36 0 5.14
Pulina Tharanga 10 0 69 1 6.90
Dhananjaya Lakshan 5 0 23 0 4.60
Kamindu Mendis 1 0 8 0 8.00



முடிவு – அவுஸ்திரேலிய A அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<