கொரோனாவிற்கு எதிராக போராட இலங்கை கிரிக்கெட் சபை நிதி உதவி

155

இலங்கையின் மிகப் பெரிய சுகாதாரப் பிரச்சினையாக மாறியிருக்கும் கொரோனா வைரஸிற்கு எதிராக போராட, இலங்கை அரசாங்கத்திற்கு 25 மில்லியன் ரூபாவை  நிதி உதவியாக வழங்க இலங்கை கிரிக்கெட் சபை (SLC) தீர்மானம் எடுத்திருக்கின்றது.  

கொரோனாவினால் இலங்கையின் விளையாட்டுத் துறையில் ஏற்பட்ட மாற்றம்

சீனாவில் உருவாகி, இன்று உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி ……….

நாடு பூராகவும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தற்போது 80 இற்கு மேற்பட்டோர் இனங்காணப்பட்டுள்ள நிலையில், 200 இற்கு மேற்பட்டோர் தனிப்படுத்தல் முகாம்களில் வைத்து பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.    

இந்த நிலையில், நோயினை கட்டுக்குள் கொண்டுவர இலங்கையின் அரசாங்கமும், இந்நாட்டின் சுகாதாரத்துறையும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்த முயற்சிகளுக்கு வலுச்சேர்க்கும் விதமாகவே இலங்கை கிரிக்கெட் சபை நிதி உதவி வழங்கவிருப்பதோடு, குறித்த நிதி மிக விரைவாக இலங்கை அரசாங்கத்திடம் கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.  

இதேநேரம், கொரேனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளினை முன்னரே மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் சபை, சர்வதேச தொடர்கள் உள்ளடங்கலாக நாட்டில் இடம்பெற்ற அனைத்து கிரிக்கெட் தொடர்களினையும் இரத்துச் செய்ததோடு, கிரிக்கெட் உத்தியோகத்தர்கள், கிரிக்கெட் வீரர்கள் அனைவரினையும் பாதுகாப்பு கருதி வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும் பணித்திருந்தது.

நன்கொடை வழங்கும் விடயம் ஒருபுறமிருக்க இலங்கை கிரிக்கெட் சபையானது, நாட்டின் தற்போதைய நிலையை வழமைக்கு கொண்டுவர முயற்சி செய்யும் இலங்கையின் படைப் பிரிவுகள், பொலிஸ், சுகாதார உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு, பொதுமக்களையும் நோயிலிருந்து தங்களை காத்துக் கொள்ள தேவையான வேலைகளைச் செய்யுமாறும்  அறிவுறுத்தல் வழங்கியிருக்கின்றது. 

 >> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<